27/10/2017

அரிதாரம்யாதொரு எதிர்பார்ப்புகளற்று
நின் ஒற்றை சொல்
அன்பைத் தேடி
தரை தொடா நடனமாடுகிறதென்
கால் சலங்கைகள்...
நிரந்தரப் பிரிவென ஒன்று
இல்லாமல்
எக்காலமும் எனை ஆர்ப்பரிக்கும்
நின் பாசத்தில்
நேசத்தில் எனதரிதாரம்
கலைந்திட
தவத்தினை சுமக்கிறேன்
புதிதென பூசப்பட்ட
புனிதத்தின் சிலுவைகளை
உடைத்து
புரியாதொரு புதிராய்
என்னுள் சேர்ந்துவிடுவாய்
விரைந்து வா.....
பெரும் பாரத்தை சுமக்கிறேன்
இந்த வேசத்தில்......
Related Posts Plugin for WordPress, Blogger...

அதில் ?

பெண் எனும் என்னில் தீட்டும் புனிதமும் குரூரமாக காமத்தை தாக்கிட பசியென்று சொல்லி வெறியோடலையும் வாய் பிளந்த கோரைப்பற்களில் வழியும் குரு...