Posts

Showing posts from July, 2016

என் மௌனங்கள்

Image
என் மௌனங்கள்
மென்று தின்னுகிறது
வார்த்தைகளை

அதற்கு
பெயரிடுகிறாய்
சம்மதமென்று

அமைதியாய்
இருந்துவிட்ட
காரணத்தால்
எனது ஆசாபாசங்களை
தொலைத்துவிட்டு
தவிக்கிறேன்

எவ்வாறாயினும்
காகிதமொன்றில்
மௌனம் தின்று
போட்ட எச்சங்களை
எழுத்தாக்கி
கடிதமொன்றை
வரைகிறேன்

எனது கைகளுக்காவது
தெம்பிருக்குமா
அதை உன்னிடத்தில்
தருவிக்கவென்று
தெரியாதெனக்கு

வலிக்கத்தான்
செய்கிறதென்
இயலாமையும்
தயக்கங்களும்

இறுதியில்
கோழைத்தனமாய்
உன்னை
மணமுடிக்கிறேன்
மனதை கல்லாக்கி

கசக்கத்தானே
செய்யும் இந்த
வாழ்வெனக்கு
விருப்பமில்லாதது
எனும் பொழுது

அழுத்தமாய்
உணர்த்துகிறது
சில மௌனங்கள்
சம்மதங்களாகாதெனும்
உண்மை

அதை உணரத்தான்
யாருமில்லை
இங்கே என்னையும்
சேர்த்து ,,,

புத்தனுக்கு

Image
அமைதியாக
புத்தன்
அமர்ந்திருக்கிறான்

ஆசைகள்
அனைத்தும்
சிலைகளாக
வடித்தாகிவிட்டது

அங்கொன்றும்
இங்கொன்றுமாக
அல்லாமல்
உலகெங்குமாய்

ஆனாலும்
புத்தனுக்கு
பேச வேண்டும்
போலிருந்தது

என்னை ஏன்
கடவுளாக்கினீர்கள்
என்று

வாய்ப்பூட்டு
புத்தனுக்கும்
வாய்ப்புகளை
சிலைகளுக்கும்
தந்தாகி விட்டது
நிரந்தரமாய்

மௌனம்
புத்தனுக்கு
பொருந்திப் போனதென்று
போலியாய்
பரப்புரையும்
செய்தாகிவிட்டது

இனி
பேசுதல் பற்றி
சிந்தித்தல்
கூட புத்தனுக்கு
பக்தர்களின்
அனுமதி வேண்டி
வரிசையில்
நின்றாக வேண்டுமே,,,

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு

Image
*தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது, குடிமக்கள் தாங்கள் தெரிந்து
கொள்ள விரும்பும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் நிலைத்தகவல்களை
உரிமையுடன் கேட்டுப்பெற வழிவகுக்கும் முக்கியமான சட்டம்.
*2005-ம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தின் மூலம்,
பெண்கள் என்ன பலன்கள் எல்லாம் பெற முடியும், அதற்கு விண்ணப்பிப்பது
எப்படி, அது சம்பந்தப்பட்ட புகாரை எங்கு அளிக்க வேண்டும் என்பது பற்றி
இப்போது காண்போம்…
மனுவை எப்படி எழுத வேண்டும்?
*`ஆமாம்’, `இல்லை’ என்பது போன்ற கேள்வி – பதில் உரையாடலாக
இல்லாமல்,நமக்குத் தேவையான தகவல் என்ன என்பதை தெளிவாகவும், விரிவாகவும்
கேட்க வேண்டும்.உதாரணமாக, நான் வாக்காளர் அடையாள அட்டைக்கு
விண்ணப்பித்தேன். உரிய நாட்கள் கடந்தும் அது இன்னும் எனக்குக்
கிடைக்கவில்லை. என் விண்ணப்பத்துக்கான ரசீதை இதனுடன் இணைக்கிறேன். என்
விண்ணப்பத்தின் நிலைத்தகவல் என்ன? இன்னும் எத்தனை நாட்களில் வாக்காளர்
அடையாள அட்டை என் கைகளில் கிடைக்கும்? நான் செய்ய வேண்டிய அலுவல் எதுவும்
இருக்கிறதா?’ என விளக்கமாக எழுதி,தாசில்தார் அலுவலகத்தில் `ஆர்டிஐ’ மனுவை
அளிக்க வேண்டும்(இந்தச் செயல் முறை, புது குடு…

இந்துத்துவ ஆர் எஸ் எஸ் ஓர் அறிமுகம்

Image
ஆர் எஸ் எஸ் என்றால் என்ன ?
அவர்கள் யார்?
அவர்களின் பணி என்ன?
1.ஆர் எஸ் எஸ் என்பது –
ராசிடிரிய சேவை சங்கம் –
இது இந்து மத வெறி
என்ற ஒன்றால் அமைக்கப்பட்ட
பார்பனர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்,
2.இதுக்கு உலகெங்கும் உள்ள பார்ப்பன மதவெறியர்கள் நன்கொடை அளித்து நடத்தி
வரும் ஒரு பயங்கரவாத அமைப்பு இது
.
3,இதுதான் கோட்சே மூலம் காந்தியை
சுட்டு கொன்றது. இன்று இந்தியாவில்
இருக்கும் மத கலவரங்களுக்கும் , சாதி
மோதல்களுக்கும் இதுதான் காரணம் ..
4. இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் இன்று அரங்கேற காரணம் இந்த அமைப்புதான் ..
5. இதன் நோக்கம் பார்ப்பனர்கள்  தொடர்ந்து
அதிகாரத்தில் இருப்பதும் மற்றவர்கள்
அடிமையாக , தீண்ட தகாதவர்களாக
இருக்கவேண்டும் என்பதுவே இதன்
குறிக்கோள் .
6. இது உலகின் மிக பெரிய பாசிச
அமைப்புகளில் பயங்கரமானது.
7.இந்த அமைப்பில் ராணுவ தளபதி முதல், நீதிபதி வரை உறுப்பினார்கள் இருப்பார்கள்
பெரும்பாலும் “பார்ப்பனர்கள் பல
அதிகாரத்தில் இருப்பார்கள்
8.இந்த அமைப்பில் அடியாளாக “ஆதிக்க  சாதி
இளைஞர்கள் இருப்பார்கள்- ஒடுக்கப்பட்ட –
தலித் மக்களுக்கு எதிராகவும் ,
சிறுபான்மை மக்களுக்கு எதிராக ,
கொலைகள் -குற்றங…

கபாலியும் கொலையும்

Image
நான்
கபாலி
திரைக் காவியம்
பற்றியும்

ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும்
ஓயாது
மந்திரங்களோதும்
பலகோணத்து
புது படங்களை
பற்றியும்
பேசிக்கொண்டிருந்தேன்

இடையிடையே
அரட்டையும்
அங்கலாய்ப்புகளும்
அடுத்த சூப்பர் ஸ்டார்
தலயா தளபதியா?
என்கிற ஆராய்ச்சி
விவாதங்களுடனும்
அந்த பயணங்களில்

எனதருகில்
ஒரு தற்கொலை
ஒரு படுகொலை

கண்டும்
காணாமல்
நகர்ந்து விட்டேன்

உடனே
விமரிசனம் எழுதியாக
வேண்டுமே

அதுபற்றியல்லாமல்
திரைக் காவியங்களை
பற்றி
தல தளபதிகளை
பற்றி,,,

சுவா(தீ)க்களோ
வினுபிரியாக்களோ
ஜிஷாவோ
நிர்பயாக்களோ
நிர்வாணமாய்
பிணமாய்
கிடந்தாலும்

என் பக்கங்களை
நிரப்பியாக
வேண்டும்
என் விமரிசன
காணொளிகளை
ஏற்றியாக
வேண்டும்

சமூக நீதிகள்
செத்துக் கிடப்பதாய்
பேச
எனக்கொன்று
வாய்த்திருக்கிறது
சென்சார் போர்டு
என்கிற பெயரில்
அதுமட்டுமே
போதுமெனக்கு
பெண்ணியம்
பேசிடவும்
போர்க் கொடி
தூக்கிடவும்,,,

மாவோ எனும் மாமனிதன்

Image
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சியினை விரும்பும் கம்யூனிஸ பாட்டாளி
வர்க்கத் தொழிலாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற ஒருங்கிணைத்தலை
,வழிநடத்தும் பண்பு கொண்ட ஒரு தலைமை வாய்ப்பதற்கு அவர்களின் புரட்சிக்கு
ஏற்ற வெற்றிபெற்ற செயல்திட்டங்களே உதாரணமாய் அமைகின்றது. அந்த வகையில்
ஓர் தலைமை மட்டுமே செயல்திட்டத்தினை தொழிலாளர் வர்க்கத்தோடு இணைந்து
புரட்சியை வகுத்து செயல்படுத்த முடியும். மார்க்ஸியம், லெனினியத்திற்கு
செழிப்பூட்டும் வகையில் பாட்டாளி வர்க்கத்தின்
மீது அக்கறையோடு செயல்பட்ட கம்யூனிஸ சீன புரட்சியாளர்தான் தோழர் மாவோ
எனும் மாசேதுங் . "ஆயிரம் பூக்கள் மலரட்டும்" என சோஷியலிஸ வேட்கையினை
கம்யூனிஸப் பாதையை கொண்டு சீனத்தை செதுக்கினார் மாவோ, வெறும் சிற்பங்களாக
அல்லாமல் ஒவ்வொரு சிற்பத்திற்குள்ளும் சமூகம், சகோதரத்துவம், பெண்ணியம்,
சோஷியலிஸம், கம்யூனிஸமென தொழிலாளர் வர்க்கத்தின் அத்துணை உரிமைகளையும்
அவர்களுக்குள் புகுத்தி புரட்சிகர கம்யூனிஸத்தை சீன தேசத்திற்கு
மட்டுமல்லாது மற்ற ஏனைய உலக தேசங்களுக்கெல்லாம் கம்யூனிஸ சித்தாந்தத்தின்
ஆகப் பெரும் முன்னுதாரணமாய் எடுத்துச் சென்றவர் மாவோ. …

மிக சமீபத்தில்

Image
மிக சமீபத்தில்தான்
நான் செத்திருக்க
வேண்டும்

ரிங்கார
இறைச்சலோடு
ஈக்கள் கூட்டமொன்று

யாரோ ஒருவன்
தன் கூர்வாளால்
எனதுடலை கிழத்த
இடங்களில்
வழிந்தோடும்
குருதியின்
கதகதப்பில்
ஆழ்ந்து உறங்குகின்றன

அவைகளை
தொந்தரவு
செய்யாதீர்கள்

விலகியோ
விழுந்தடித்தோ
நகர்ந்து விடுங்கள்

நாளைக்கு அவைகள்
மட்டுமே
என் கல்லறைக்குள்ளும்
அனுதாபங்களை
சுமந்து கொண்டு
உயிரோடு வாழும்
ஆத்ம விசுவாசிகள்

அப்போதவைகள்
ஈக்களில்லை
தன் உருவங்களை
மாற்றிக்கொண்ட
புழுக்களெனும்
பெயரில்,,,

கடவுளாக்கப்பட்டவன்

Image
நானாகி
நிற்கிறேன்
யாருமற்ற
அடர் வனத்தில்

கனத்திருக்கும்
சிலுவையின்
சுமையினை
இறக்கி வைத்து
இயேசுவை போல

என் தேவனே
என் தேவனே
ஏன் என்னை
கைவிட்டீரென

கதறி அழுகிறேன்
கடவுளாக்கப்பட்டவனின்
கடைசி அலறலும்
கதறலும்
காதுகளில் விழாதென
கைகளால்
மூடிக்கொண்டது
அந்த அடர்ந்த வனம்

அதுவும் நல்லதுதான்
கடவுளை மறுப்பதற்கு
போதுமானதாய்
பொதுவானதாய்,,,