Posts

Showing posts from June, 2016

பாபா சாகேப் திரைப்படம் தயாகிறது தமிழில்,,,

Image
காமராசர், பாரதியார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகி
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது புரட்சியாளர்,
இந்திய அரசியலமைப்புத் தந்தை பாபா சாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு
'பாபா சாகேப்' என்ற பெயரில் சினிமா படமாகிறது. இப்படத்தை அஜய் குமார்
என்பவர் இயக்கி, தயாரிக்கிறார்.இப்படம் குறித்து அவர் கூறும்போது,
டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையை மையக் கருவாக வைத்து
உருவாகவிருக்கும் திரைப்படம் தான் "பாபா" சாகேப். தமிழ் சினிமாவில்
இப்பொழுதெல்லாம் ரவுடிகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட
திரைப்படங்கள் அதிகமாக வருகிறது, நாம் ஏன் ஒரு தேச தலைவரின் வாழ்க்கையை
அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்கக் கூடாது என்ற
எண்ணத்தில்தான் இத்திரைப்படத்தை உருவாக்கவிருக்கிறேன். ஹாலிவுட்டில்
அட்டன்பரோ என்ற இயக்குநர் காந்தியின் வாழ்க்கையை திரைப்படமாக
எடுக்கும்பொழுது, தமிழனாகிய நான் ஏன் ஒரு தேசத் தலைவரின் வாழ்க்கை
வரலாற்றை திரைப்படமாக எடுக்கக்கூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான்
இந்த பாபா சாகேப்.அம்பேத்கர் உருவம் கொண்ட ஒருவருக்காக சுமார் 10,000

ஜிஷாவின் தாயருக்கு கன்னய்யா குமார் ஆறுதல்

Image
இந்துத்துவ பார்ப்பானியத்தின் மனுதர்ம ஆட்சியில் சாதியாதிக்கர்களின் பாசிச போக்கினை, இந்தியம் அனுபவித்துக்கொண்டிரு­க்கிறது. மதவெறி,சாதிவெறி, பெண்ணடிமைத் தனம், தலித் விரோதம், பாலியல் வண்புணர்வு, பிற்போக்குச் சிந்தனைகளை விதைத்தலென தொடர் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களின் பக்கம் நீதி இருந்ததில்லை என்பது தெளிவுபடுத்தும் விதமாக நடந்ததுதான் கேரளத்தில் சட்டக் கல்லூரி மாணவி தலித் ஜிஷா வண்புணர்வுக்காளாகி கொரூரமாக படுகொலை செய்யப்பட்டார். சமீபத்தில் கேரளத்தில் புதிய அரசுக்கு முதல்வராக பொறுப்பேற்றுள்ள கம்யூனிஸ்ட் பினராய் விஜயன் அவர்கள் தனது முதல் கையெழுத்தாக தலித் மாணவி ஜிஷாவின் கொலைக்கான துரித விசாரணைக் கமிஷனை அமைத்திட்டார் எனும் ஆறுதலோடு, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் கண்ணீரை துடைக்க இன்னொரு ஆறுதல் நிகழ்வும் நமக்கானதாக இருந்திருக்கிறது , டில்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகிகளான கன்னய்யா குமார், மற்றும் ஷெஹ்லா ரஷீத் தோழர்கள் கேரளா சென்று . அங்கு படுகொலை செய்யப்பட்ட கேரள தலித் மாணவி ஜிஷாவின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்கள்.­ கேரளாவில் அமைந்திருக்கும் புதிய அரசு, ஷிசாவின் கொலையை விரை…

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

Image
"தேசியத்தை" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து
வருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக
உத்தேசித்துள்ளார்கள்­? மக்களுக்கு ஆதிக்கம் வந்தபோது நிலமில்லாதவர்க்கு
நிலம் கொடுக்கப் போகிறார்களா? வீடற்ற ஏழைகளுக்கு வீடு கொடுக்கப்
போகிறார்கள்? இல்லை வேலை, கல்வி இரண்டையும் அளிக்கப் போகிறார்களா? அல்லது
இவையில்லாத மாந்தர்க்கு விடுதலைதான் கொடுக்கப் போகிறார்களா? விளை
பொருட்களையும் செய்பொருட்களையும் எவ்விதம் விநியோகம் செய்வதென்பதிலும்
திட்டமெதேனும் சிந்தித்திருக்கிறார்­களா? இதை கவனிக்காதவர்களுக்கு
அரசியலில் பொறுப்பு கொடுத்தாலென்ன? கொடுக்காட்டியென்ன? அவர்கள் கதைகளான
பாண்டவர்கள் காலம் முதல் இந்த நிலமையிலேயே தேசம் இருந்து வரட்டுமென்றால்
"தேசியம்" இருந்து பயனென்ன? தேசியம் என்றால் என்ன? தேசத்தாரை நேசித்தில்
என்று பொருள். அரசியல் வேண்டுமென்னும் வகுப்பார் , மூன்று வேளையும்
உணவும், உடையும்,இருக்கையும் அவர் சந்ததியாரும் கவலையின்றி வாழவும்
சௌக்கரியங்களையும் சலுகைகளையும் பாதுகாப்புகளையும் உண்டாக்கிக் கொண்டு
மற்ற வகுப்பினராகிய 100 க்கு 98 பேரை அன்றாடம் சீவிக்க…

ஏகாதிபத்தியர்களும்,பிற்போக்காளர்களும் - மாவோ (மா சே துங்)

Image
ஏகாதிபத்தியம் எப்போதும் தீயச்செயல்கள் செய்கிறதாகையால் அது
நெடுங்காலமாய் நிலைக்காது . அது எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும்
மக்களுக்கு எதிராகவே நிற்கும் பிற்போக்காளர்களை வளர்ப்பதிலும்,
ஆதரிப்பதிலும் விடாப்பிடியாகவே நிற்கும். அந்த ஏகாதிபத்தியமானது பல
காலனிகளையும், அரைக் காலனிகளையும் , பல ராணுவ தளங்களையும் கெட்டியாகவும்
பலவந்தமாகவும் பிடித்துள்ளது. அது சமாதானத்தை , சமத்துவத்தை விரும்பும்
சோஷியலிஸத்தை கம்யூனிஸத்தை அணு யுத்தத்தால் அச்சுறுத்துகிறது. இவ்வாறாக
ஏகாதிபத்தியத்தினால் நிர்பந்திக்கப்பட்ட உலக மக்கள் அனைவரும் நமது
சோஷியலிஸ சீனாவும், ஏகாதிபத்தியத்திற்கெத­ிராக போராட்டத்தில் எழுச்சி
பெறுகின்றனர் (அ) பெற்றுக்கொண்டிருக்கி­ன்றனர் . ஆயினும்
ஏகாதிபத்தியமானது இன்னும் ஆசிய நாடுகளிலும், மற்ற உலக நாடுகளிலும்
தறிகெட்டு அட்டகாசம் செய்வதை பல நிகழ்வுகள் மூலம் நாமும்
சந்தித்துக்கொண்டுதான­் இருக்கின்றோம். அதன் தலைமை பீட அமெரிக்காவையும்
அது விட்டுவைக்கவில்லை . இந்த நிலைமை மாற வேண்டும். மாற்றத்தை நோக்கி
கம்யூனிஸ பாதையில் நம் நகர்வு இருக்க வேண்டும். ஏகாதிபத்திய முதலாளித்துவ
ஆக்கிரமிப்பிற்கும், அடக்குமுறைக்கும் முடிவ…

உயிராபத்துகளை கடந்து புரட்சியை வென்றெடுத்த லெனின்

Image
* 1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைது
செய்யப்பட்டனர். ஜார் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்கு நான்கு
ஆண்டு கால சைபீரியச் சிறைவாசம் அளிக்கப்பட்டது. சைபீரியாவிற்கு
அனுப்புவதும் மரண தண்டனை நிறைவேற்றுவதும் ஒன்றுதான். ஏனென்றால் சைபீரியா
என்பது ஒரு பனிபிரதேசம். நிலம் எப்போதும் பனியால் மூடியிருக்கும்.
எந்நேரமும் பனி பெய்யும். புயல் வீசும். கடும் குளிர் ஆளை சாகடிக்கும்.
ரசிய அரசு புரட்சியாளர்களை சைபீரியாவிற்கு அனுப்பி விடும். அங்கே அவர்கள்
குளிரில் விறைத்து இறந்து போவார்கள்.

ஆனால் சைபீரியக் குளிரை லெனின் தோற்கடித்தார். அவருடைய உறுதியான
உடற்கட்டையை உருக்குலைக்க சைபீரியப் பனிப் பிரதேசத்தால் இயலவில்லை.
அதுமட்டுமல்ல லெனின் தான் காதலித்த கிரூப்ஸ்காயா என்ற பெண்ணைத்
திருமணமும் செய்து கொண்டார். லெனினுடன் சேர்த்து அவரையும் சைபீரியாவிற்கு
நாடு கடத்தியிருந்தது ஜார் அரசு.

சைபீரியாவில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அவர் ஏராளமான புத்தகங்கள்
எழுதினார். அவை ரசியாவில் புரட்சியை எப்படி நடத்துவது என விளக்கும்
புத்தகங்கள். மக்களைத் திரட்டாமல் புரட்சி சாத்தியமில்லை. தனது
கருத்துக்களை மக்களிடம…

சாலை விபத்துகள் , தமிழகம் முதலிடம் பெருமையா?

Image
தமிழ்ச் சமூக நிலத்தில் எங்கு பார்த்தாலும் மது பாட்டில்கள், தண்ணீர்
பிளாஸ்டிக் உறைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், ஊறுகாய் அல்லது கறி பகோடா
சிதறல்கள், இவைகளே நிரம்பி வழிகின்றன. நீங்கள் எங்கேனும் பயணப்படுகையில்
இவைகளை பார்க்காமல் நகரவே முடியாது. அப்படியான சூழலில் இது உங்களுக்கு
சர்வ சாதாரணமான விஷயமாகத்தான் தெரியும். ஆனால் அதேவேளையில் "மனித உயிர்"
என்பது மதிக்கப்பட வேண்டியது எனும் வாசகத்தை மட்டும் ஏதோவொரு கோணத்தில்
பிடித்துக் கொண்டிருப்பீர்கள் கண்களை மட்டும் மூடிக்கொண்டு,,, இங்கே
மதுவை ஆதரித்துக் கொண்டே மனித உயிர் மதிக்கத்தக்கது என இரட்டை
நாக்குகளோடும் அதையே நாகரீகமென்றும் நமக்கு பயிற்றுவிக்கப்படுகிற­து.
அதனாலோ என்னவோ!
குடிபோதை சாலை விபத்துகளை கண்காணாது விட்டுவிடுகிறோம். அதன் விளைவு சாலை
விபத்துகளில் தமிழகத்தை முதலிடத்தில் பிடிக்க வைத்திருக்கிறோம். இனி
பெருமை பட்டுக் கொள்ளுங்கள் மிகவும் இலகுவாக மனித உயிரை பறித்தெடுக்கும்
முதன்மை மாநிலம் எங்கள் தமிழகமென்று,,,
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில்
கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்து க…

எழுவர் விடுதலைக்கான பேரணியில் சில மாற்றங்கள்

Image
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எவ்வித தொடர்புமற்று ஆனால் கடந்த 25
ஆண்டுகளாக ஆயுள் தண்டனைக் கைதியாக தனிமை சிறையில் வாடும் தோழர்
பேரறிவாளன் , சாந்தன் , நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலைக்காக நாளை (ஜூன்
11) வேலூரிலிருந்து சென்னை ஜார்ஜ் கோட்டையை நோக்கி "வாகனப் பேரணி"
நடக்கவிருந்ததில் சில சட்ட சிக்கல் மற்றும் போக்குவரத்து நெரிசலை
கருத்தில் கொண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை வேலூரிலிருந்து
தொடங்குவதற்குப் பதிலாக சென்னை எழும்பூரில் இருந்து பேரணியாகச் சென்று
முதல்வரிடம் மனு அளிக்கப்பட இருப்பதாக தோழர் பேரறிவாளனின் தாய்
அற்புதம்மாள் தெரிவித்திருக்கிறார்­. பேரணியானது பகல் 1 மணிக்கு
ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து துவங்குகிறது. சமூக விடுதலையை நோக்கி
சென்னையை முற்றுகையிடும் நம் தோழர்கள் 12 மணிக்குள் களத்தில் இருப்பது
நல்லது. இப்பேரணியின் மூலம் நீதியை கொன்று அழித்துக் கொண்டிருக்கும்
ஆதிக்க அதிகார வர்க்கத்திற்கு பெரும் அதிர்ச்சியை நாம் தந்துவிட
வேண்டும். முன்னதாகவே இடதுசாரிய இயக்கங்களிடமும், திராவிட
இயக்கங்களிடமும் எழுவர் விடுதலைக்கான பேரணிக்கு ஆதரவு வந்தவண்ணம்
இருக்கிறது. இ…

பேசும் இதயம் 7

Image
நாளையும் அதே
மரத்தடியில்
நம் சந்திப்பு
உதிர்ந்த மலர்கள்
மீண்டும்
கிளைக்கு திரும்பலாம்,,,

__________

பசியில்
கிளி
ஜோசியக்காரனின்
ஒரு நெல்லும்
விலை போனது,,,

__________

என்னில்
செங்கதிராய்
பாய்கிறாய்
சுடர்விட்டு
எரிகிறதென்
காதல்
அணைத்து விடாதே!
அவ்வளவு
சீக்கிரத்தில்
என் மரணம் நிகழ்ந்துவிடாது
என்னவளே!

__________

உன்
பார்வையில்தான்
எத்தனை
விளக்கங்கள்,,,
அகராதியை
மூடிவிட்டு
உன் முகத்தையே
பார்க்கிறேன்
அன்பிற்காக
ஏங்கி ஏங்கி,,,

__________

தூவானம்
தொலைவில்
அவள் முகம்
தேடுகிறேன்
என்னை,,,

__________

விழுந்தும்
வலி பொறுத்து
அடுத்த அடி
எடுத்து வைக்கிறாள்
தலையில்
அவ்வப்போது
செங்கல், சிமெண்ட்,
மணல், ஜல்லி,
என மாறி மாறி
அவள் பெயர்
சிற்றாள் ஆகிறது
அக்கணத்தில்,,,

__________

எல்லாம்
விதியென்றார்கள்
வாழத் தெரியாதவர்கள்
அவரவர் தகுதிக்கு
அர்ச்சனை தட்டு
மட்டும் நிரம்பி
வழிகிறது
வேடிக்கை
கடவுளுக்கென்று,,,

__________

மௌனங்களை
காற்றில்
கரைய விடுகிறது
காதல்
அவ்வப்போது
காகிதங்களில்
சொற்தூறல்,,,

__________***__________

அற்புத கனவொன்றில்

Image
அற்புத கனவொன்றில்
ஆடித் திரிகின்றேன்
நான் மட்டும்
தனியே

அக்கனாவில்
என்னை
இழுத்துச் செல்லும்
நித்திரைக்கு
பூக்கள் தூவி
தினம் பூஜிக்கும்
வழக்கம் என்னில்
உண்டு

இரவை
வலிய இழுத்து
இமைகளுக்கு
ஓய்வு கொடுத்து
உள்நுழைகிறேன்

அதுவொரு ஏகாந்தவெளி
இடையூறுகள்
ஏதுமின்றி
வானத்துச்சியில்
வா!வா! என
அழைக்கிறாள்
இயற்கையன்னை

சென்றேன்
அங்கே நானும்
அந்த பசுமையின்
வனப்பில்
விளையாடி
மகிழ்கின்றேன்

அந்த நதியின்
முகடுகளில் என்
முகம் பதித்து
முத்தமிடுகின்றேன்

அந்த மலைச்சரிவில்
மரக்கன்றுக்கு
பாலூட்டும்
தாய்மரத்திடம்
நானுமொரு
குழந்தையாய்
பால் குடித்து
பசியாறுகின்றேன்

அனைத்திற்கும் மேலாய்
நிலவுக்கு சோறூட்டி
என்னில் பாதியை
அதனிடத்தில்
கொடுக்கின்றேன்

என் மடியில்
முடித்து வைத்திருந்த
மின்மினிப் பூச்சிகள்
விடுதலை அடைய

என்னையே
சுற்றி சுற்றி
வருகின்றன
நட்சத்திரங்கள்

ஏணிப் படிகளிட்டு
என் தேகமெங்கும்
சுகமாய்
வருடுகின்றன
இலையில் தங்கிய
பனித்துளிகள்

இவைகளனைத்தும்
அந்த அற்புத
கனவொன்றில்
நான் மட்டுமே
தினந்தினம்
அனுபவிப்பவை

ஆகவே விடுக்கிறேன்
வேண்டுகளோ
கட்டளையோ

விஜய் சேதுபதி எழுவர் விடுதலையை பற்றி பேசக்கூடாதென சொல்வதற்கு நீங்கள் யார்?

என்ன கருமம்டா இது! என வெறுப்போடு முகம் சுளிக்க வைக்கிறது இந்த தமிழ்ச் சமூகம். திரைத் துறையில் ஒருவரின் அணுகுமுறை சமூக நலனை நோக்கி வருகின்றபோது அதனை இலாவகமாக ஏற்று அரசியல்படுத்தி ஊக்குவிக்கத் தெரியாமல் இருக்கும் இதே தமிழ்ச் சமூகம்தான் அப்படியானவர்களை கூத்தாடிகள் என்று வசைபாடியும், கேலிசெய்தும், கொண்டிருக்கிறது. அதையும் தாண்டி ஒருபடி மேலேபோய் ஏதோ இவர்கள்தான் சமூகத்தை காக்கும் காவற்குடிகளாகவும் இவர்களாலே சமூக விடுதலை பேசப்படுவதாகவும் புளங்காகிதம் கொண்ட சில போலித் தமிழ்தேசிய அசிங்கங்கள் அவ்வாறு சமூக நலனை பற்றி திரைத்துறையில் ஒருவன் பேசினாலே "நீ மூடிட்டு போடா வந்தேறி நாயக்க மயிறு" நாங்க போராடிக்கறோம் என்று வீர வசனங்களை அவிழ்த்து விடுகிறார்கள். உண்மையில் அம்மாதிரியான தமிழ்த்தேசியர்களின் பேச்சை கேட்டு கேட்டு போரடத்துதான் போகிறது. திரைத்துறை என்றில்லை ஒரு சாதாரண பாமரன் ஒருவனின் கருத்துகள் சமூக விடுதலையை நோக்கி பயணிக்கிறதென்றால் அதனை கேட்டு அக்கருத்தின் சிந்தனைகளை உள்வாங்கி முற்போக்குடன் அரசியல் படுத்துவதே ஆகச்சிறந்ததாக அமையும். 10 இளை(ஞி)ஞர்களில் 1 இளை(ஞி)ஞன் முற்போக்குச் சிந்தனை ப…

மலடி அல்ல அவள்

Image
மனதில் உட்புகுந்து
உயிரை
வதைக்குமந்த
"மலடி" எனும்
கொடுஞ்சொல்லை
மறக்கவே

மரணத்தின் வாசலில்
இருந்து அவள்
எழுதும் கடிதத்தின்
கடைசி வாக்கியத்தில்
ஓர் மழலையின்
கைநாட்டு

எப்படி?

பெற்றால்தான்
பிள்ளையா?
எதிர் கேள்வி
தொடுத்தது எதிர்வீட்டு
மழலை

ஆனாலும்
உள்ளம் உருகாமல்
மனதிறங்கியும் வராமல்
சொட்டுக் கண்ணீரின்றி
கல்நெஞ்சத்தோடு

அடுத்ததொரு
மரணத்திற்கு
அடித்தளமிடுகிறது
நாவில்
குடிகொண்டிருக்குமந்த
மலடி எனும் வார்த்தை

இறந்துபோன தாயின்
கல்லறையில்
இப்பொழுதும்
குழந்தையொன்று
தவழ்கிறது
நாளைக்கு அதற்கு
மரமென்று
பெயர் சூட்டி
அழைப்பார்கள்

மலடி அல்ல
அவளென்று
மண்ணிற்குள்
புதையுண்டிருக்கும்
விதைக்கு மட்டும்
தெரிந்திருக்கிறது,,,

"அந்த" கவிதை

Image
என் பேனாவின்
கூர்முனை
தேய்கின்றவரையில்
அனுபவித்து அனுபவித்து
கிறுக்கினேன்
கவிதை எனும்
பேரில்

நீயதை
வாசித்து
அலட்சியமாய்
விட்டெறிந்தாய்

அதிலொன்று
காமம் பேசியது
அனுபவமின்றி

உடனே விமர்சனம்
வருகிறது உன்னிடம்
அதற்கு மட்டும்

புரிந்தது எனக்கு
உனது பெருங்கோபமும்
ஆழ்மனதில் தோன்றிய
பெயரில்லா
உருவத்துனது
கற்பனையும்
புரிந்தது எனக்கு

பதற்றம் வேண்டாம்
பரிதவிப்பும் வேண்டாம்
பெருங் கோபமும்
வேண்டாம்
பொறுமையாய் கேள்

நீ
அலட்சியமாய்
தூக்கியெறிந்த
மற்ற கவிதைகளிடம்
காமம் கொண்டேன்

உனது கண்ணுக்குத்
தெரியும்
"அந்த"
கவிதையில் மட்டும்
காதல் கொண்டேன்

இருட்டு கனலகத்தில்
உனது எண்ணங்கள்
காற்றில் கரைந்து
எங்கோ சிதறி
ஓடுவதையும்
தற்போது நான்
காண்கிறேன்,,,

பார்ப்பானிய இந்து தீவிரவாதிகளின் மாட்டரசியலும் , மனிதத் தன்மையற்ற செயல்களும்,

Image
மாட்டின் கோமியத்தை குடித்து குடித்து மதியிழந்தவர்களிடம்
மனிதத்தை எதிர்பார்க்க முடியுமா? இந்தியாவில் ஆர்எஸ்எஸ் பார்ப்பானிய
இந்துக்களால் முன்னெடுக்கப்படும் மாட்டிறைச்சி தடை அரசியலில் முக்கியமாக
அவர்கள் முன்னிலைபடுத்தும் உள்நோக்க அரசியல் என்பது ஒன்று "தலித்துகளை
அடக்கியாளுதல்" இன்னொன்று "இசுலாமியர்களுக்கு எதிராக கவனம் திருப்புதல்"
இந்த இரண்டு உள்நோக்கக் காரணங்கள் இன்றி மற்ற நன்மதிப்பிலான காரணங்களை
பார்ப்பானிய இந்துக்களிடம் இல்லை, உண்மையில் பசுவை புனிதமாக கருதி
மாட்டிறைச்சியை தடை கோருவதென்பது மிகப்பெரிய முட்டாள்தனம் என்றும்
அவ்வாறு தடையை ஏற்படுத்தினால் பெரும்பாலான இந்துக்கள் அதை ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள் என்றும் நிச்சயமாய் பிராமணியத்திற்கு தெரியும், அவ்வாறு
தெரிந்திருந்தும் குறிப்பிட்டு தலித்துகளையும், இசுலாமிய சிறுபான்மை
சொந்தங்களையும் குறிவைத்து இந்த மாட்டிறைச்சி தடை அரசியல்
நகர்கிறதென்றால் மனுதர்மத்தை? முன்னிலைபடுத்தவும், இசுலாமியர்களை
இந்துக்களுக்கு எதிராக கட்டமைத்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவுமே இந்த
மாட்டிறைச்சி தடை அரசியலை நிகழ்த்துகிறார்கள் என்…

சொத்து பத்திரங்களில் காணும் சில வழக்கச் சொற்களின் விளக்கம்

Image
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில்
வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய
கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை
ஆவணம்.

அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது
எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு
பயன்பாட்டுக்காகஒதுக்­கப்பட்டுள்ள நிலம்.
கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காகநிலத்­தை ஒதுக்குவது.

தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காககுறிப­்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க
பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர்,
அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி.
இந்த விவரத்தை…

மோடியும் , குல்பர்க் சொசைட்டி படுகொலையும்

Image
குல்பர்க் சொசைட்டியில், 2002-ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் மற்றும்
சங்பரிவாரக் கும்பலால் 69 இஸ்லாமியர்கள் ஆயுதங்களால் வெட்டிச் சாய்த்து,
உயிரோடு தீ வைத்து எரிக் கப்பட்டனர். இந்த கொடூரமான இனப்படுகொலை தொடர்பாக
14 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கின் முடிவில், 24 பேர் குற்றவாளிகள் என்று
நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குல்பர்க் சொசைட்டி சுமார் 5
மணி நேரம் வரை வன்முறை யாளர்களின் பிடியில் இருந்த நிலையில், போலீசார்
அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காதது; வன்முறையைத் தடுப்பதற்கு நடவடிக்கை
எடுக்காதது போன்ற வற்றை எல்லாம் வைத்து இந்த முடிவுக்கு நீதிமன்றம்
வந்துள்ளது.இந்நிலையில், அன்று குஜராத்தில் முதல்வராக (இன்று பிரதமர்?)
இருந்த நரேந்திரமோடியின் உத்தரவின் பேரிலேயே போலீஸ் அதிகாரிகள்,
குல்பர்க் சொசைட்டி வன்முறைக்கு உடந்தையாக இருந் தார்கள் என்ற
அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அதற்கு அகமதாபாத்தின்
போலீஸ் கட்டுப்பாட்டு அறை யின் ஆவணங்களே சாட்சியாக மாறியிருக்கின்றன.
குல்பர்க் சொசைட்டி அமைந்துள்ள இடம் மேகனி நகராகும். கலவரம் நடந்தபோதும்
அங் குள்ள குடியிருப்பு வீடுகள் முழுமையாக தீ வைத்து க…

கிணற்றுக் குளியல்

Image
வெட்டி வைத்த
கிணற்றுக்கு
ஏது வாய்க்கால்
வரப்போரத்து நடைதான்
கிணற்று படிக்கட்டிலும்

நேர்த்தியாக இல்லை
எனினும்
பாதச் சுவடுகள்
பத்திரமாக

ஆழம் அளக்காமல்
பாதம் முதலில்
தண்ணீரில் நனைய
பதற்றமும் கூடவே

தன்னந் தனியாக
ஏதோ ஒன்று
முறைப்பது போலொரு
பிரம்மை

தற்செயலாய் தண்ணீரில்
ஆடும் அலை
தன்நிழலை கக்கும்
ஊமை வெளிச்சத்தில்
இன்னொரு உருவம்
உள்ளிருந்து காலை
பிடித்திழுக்குமா!

ஆனாலும்
பரவாயில்லை
மீன்கள் சுவைத்துன்னும்
அழுக்கில் மறைகிறது
அத்தனையும்

பாறையின் இடுக்கில்
பாம்பொன்று மட்டும்
அசைவுகளையும்
அசட்டு தைரியத்தையும்
கண்ணொற்று
காண்கிறது

விசத்தை உமிழ்வதற்குள்
விரையில்
குளித்துவிட்டு
வீடுதிரும்புதல் நலம்

ஊற்றில் உயிர் பிசைந்து
நிரம்பி வழியும்
நிலத்தடி நீர்
நிறைவாய் இருந்தும்
காக்கா குளியலாகி
பரபரக்க
கரை ஏறுகையில்

தடாலென
வழுக்கிய பாசி
வாய்விட்டு சிரித்தது
விழுந்தியா! விழுந்தியா!
என்று

சுகம் அறிந்து
நாள்கணக்காய்
கிணற்றில் கிடக்கையில்
பொறுமை இழந்து
வலம் வருகிறது
அந்த பாம்பு

நேரமாகிறதென
ஏதோ சமாதானம்
மனதிற்குள்
பயத்தை மறைத்து
பவ்யமாய்
நொண்டிச்சாக்கு…

வழக்கறிஞர்களை முடக்கும் புதிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக குரலெழுப்புதல்

Image
எங்கெல்லாம் முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களின் கரங்கள் உயர்ந்து
நிற்கின்றனவோ, அங்கெல்லாம் சமூக நீதிக்கான தமது போராட்ட
முன்னெடுப்புகளுக்கு களம் அமைப்பவர்கள் வழக்கறிஞர்களாக இருப்பார்கள் .
சமூகத்தில் நிலவும் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்த்து தமது வழக்காடுதல் ,
நீதிமன்ற செயல்பாடுகள் என தாண்டி மக்களோடு மக்களாக நின்று பல்வேறு
போராட்டங்களை சேவையாக அல்லாமல் கடமையாக ஆற்றுபவர்கள் வழக்கறிஞர்கள். ஈழ
போராட்டமாகட்டும், விலைவாசி உயர்வு, அரசப் பயங்கரவாதத்திற்கெதிர­ான
கலகம், மக்களை அச்சுறுத்தும் அதே அரசப் பயங்கரவாதிகளால் ஏற்படுத்தப்படும்
சட்டங்கள், போன்ற பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு தங்கள் பங்களிப்பை
எவ்வித பிரதிபலனுமின்றி செய்யக்கூடியவர்களாக வழக்கறிஞர்கள்
இருக்கிறார்கள். டாஸ்மாக் எனும் மதுக்கடைகளுக்கு எதிராக காந்திய வழியில்
தமது போராட்டங்களை முன்னெடுக்கும் தோழர் நந்தினி அவர்கள் சட்டக் கல்லூரி
மாணவியாகதான் அறியப்படுகிறார். இவ்வாறாக பரவலாக எங்கெல்லாம் சமூகம்
அடக்கி ஆளப்படுகிறதோ அங்கெல்லாம் வழக்கறிஞர்களின் குரல் தளர்வு அடையாமல்
என்றுமே ஓங்கியே இருக்கும். இதன் காரணமோ என்னவோ சமூகதள அரசியலில் ப…

தொடரும் சாதி ஆணவக்கொலைகள் - கொலையாகின்றன காதல் திருமணங்கள்

Image
தமிழ்ச் சமூகத்தில் ஆகப்பெரிய நவ நாகரீக தன்மையில் புத்துயிர் பெற்றுக்
கொண்டிருக்கிறது ஆணவக் கொலைகள் என்றால் அது மிகையாகாது, இளவரசன் கொலை
இல்லாநிலையானதும் கோகுல் ராஜை கொன்ற யுவராஜ்களுக்கு ஜாமீன் கிடைப்பதும்,
விஷ்ணுபிரியாக்களின் மரணங்களில் இந்துத்துவ சாதிவெறி வாழ்வதும், உடுமலை
சங்கரை கொலை செய்தோர்கள் பேரும் புகழோடும் ஆண்டை பெருமை பேசுவதும், காதல்
திருமணம் நடத்தி வைத்தமைக்காக நிறைமாத கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்ட
போது கருவில் இருந்த சிசுவிடமே தன்சாதிப் பெருமையை திணித்தும் தங்கள்
இந்துத்துவ சாதிவெறியாட்டத்தை சுதந்திரமாக அதுவும் அரசின் பேராதரவோடு
இங்கே நிகழ்த்தப்படுகின்றபோ­­து உண்மையில் வாழ்வதற்கு தகுந்த இடமா இந்த
தமிழ்மண் என எண்ணத் தோன்றுகிறது. இந்துத்துவ பார்ப்பானியத்தின் அதிதீவிர
வளர்ச்சியின் சிறுதுளிகள்தான் ஆவணக்கொலைகள் என்பதை பெரியார் மண்ணென்று
மூடி மறைக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மை, எந்த பெரியாரிமும் அதி
நுணுக்கமாக தமிழ்ச் சமூகத்தை அணுகவில்லை என்பதையே மேலுமொரு சாதி
ஆணவக்கொலை உணர்த்துகிறது. அண்ணல் அம்பேத்கரை பின்பற்றுவதாகச் சொல்லும்
தலித் இயக்கங்களும்,திராவிட­­ இயக்க…