Posts

Showing posts from May, 2016

இந்து தீவிரவாத பயிற்சி முகாம்கள், இந்தியாவுக்கு சவால் விடுகின்றன!

Image
29/11/2015 அன்று இந்தியாவின் பயங்கரவாத இயக்கம் முதலிடத்தில் இருப்பது ஆர்.எஸ்.எஸ். RSS இந்த பதிவை எழுதினேன், இந்தியாவில் இந்துத்துவ பார்ப்பன
ஆதிக்கத்தின்
செயல்வடிவ வன்முறைகளில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை தலித்
மக்களும் இரண்டாவதாக இசுலாமிய சிறுபான்மையின மக்களும்
பெரும்பாதிப்புக்குள்­ளாகும் சமூகங்களாக இருக்கிறார்கள். இதில் இசுலாமிய
சிறுபான்மையின மக்களை "தீவிரவாதிகள்" என சித்தரிக்கவும் இசுலாமியர்கள்
என்றாலே பயங்கரவாதிகளென அனேக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையில்
பார்ப்பன இந்துத்துவ சாதியாதிக்க RSS மற்றும் அதன் வளர்ப்பு பிள்ளையான
BJP க்கு ஏகபோகமாய் பணியாற்றும் ஊடகங்கள் ஏனோ இதே இந்தியத்தில் உண்மையான
சனநாயகத்திற்கு விரோதமாக வெளிப்படையாகவே தீவிரவாத பயிற்சிகளில் ஈடுபடும்
ஆர்எஸ்எஸ் போன்ற பஜ்ரங்தள் அமைப்புகளின் உண்மை முகத்தை தோலுரிக்க
மறுக்கின்றன. ஒருவேளை அந்த தீவிரவாத பயிற்சிகளின் மூலம் ஏதேனும்
இலாபநோக்கங்களை எதிர்பார்க்கின்றனவோ என்னவோ இந்த ஊடகங்கள்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பஜ்ரங்தள் அமைப்பினர் தீவிரவாத
பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத வெளி …

தமிழக முதல்வரின் "முதல் கையெழுத்து"

Image
சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் தனது முதல்வர் பதியேற்பினை
முடித்துக்கொண்டு நேராக தலைமைச் செயலகம் சென்ற தமிழக முதல்வரும் அதிமுக
பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கை வாக்குறுதியின்படியான­
திட்டங்களை நிறைவேற்றும் பொருட்டு முதல் கையெழுத்தை இட்டுள்ளார்.
* விவசாயப் பயிர் கடன் தள்ளுபடி
*அனைத்து வீடுகளிலும் 100 யூனிட் மின்சாரம் இலவசம்
*தாலிக்கு 8 கிராம் தங்கம்
*படிப்படியான மதுவிலக்கு அடிப்படையில்
1. தொடக்க 500 டாஸ்மாக் கடைகள் மூடல்
2. டாஸ்மாக் கடை நேரக் குறைப்பு பகல் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூடல்.
என கோப்புகளில் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார்.
அனைத்தும் வரவேற்கத்தக்கதென்றால­ும் காலம் பொறுத்திருந்தே எதையும்
தீர்மானிக்க முடியும். விவசாயப் பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்தின் படி
அனைத்து விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் உரிய காலத்தில் கடன்
தள்ளுபடிக்கான திட்டநலன் சென்று சேர வழிவகை செய்யப்பட வேண்டும். எதற்கும்
"கமிஷன்" என்கிற முந்தையகால அதிமுக ஆட்சி அனைவரும் அறிந்ததே! ஏழை விவசாய
பெருங்குடி மக்கள் தங்கள் வாழ்தாரத்திற்கு அலைந்து திறிந்து …

ஜெயா 6 வது முறை? ஊடகங்களின் உளவியல்

Image
தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை தொடர்ந்து (6) ஆறாவது முறையாக
கைப்பற்றி பதவியேற்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா! என்று
அனைத்து காட்சி மற்றும் எழுத்து ஊடகங்களும் சொல்லிச் சொல்லி
சிலாகிக்கிறார்கள். தங்களின் பார்ப்பன மற்றும் அதிமுகவின் அதீத பாசம்
அவர்களை (ஊடகங்கள்) அவ்வாறு
பேசவைத்திருக்கிறது எனலாம். தேர்தல் முடிந்து தமிழகத்தை ஆளும் தகுதியை
அதிமுக பெற்ற இரண்டாவது நாளிலேயே சட்ட ஒழுங்கு சீர்குலையும் விதமாக
வியாசர்பாடியில் பொதுமக்களை ரவுடிகள் சராமாரியாக அரிவாள் , போன்ற
ஆயுதங்களால் தாக்கியிருக்கிறார். அதுவும் பொதுவெளியில் பொதுசனங்களை,,,
இதில் பெண்களும் ஒரு கைக்குழந்தையும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்
வருகின்றது. ஆனாலும் இச்சம்பவம் குறித்து காட்சி மற்றும் எழுத்து
ஊடகங்கள் இதுவரை வாய்திறக்கவில்லை, அதாவது அதிமுகவின் முதுகை
சொரிந்துவிடும் ஊடகங்கள். சரி! அதுபோகட்டும் விஷயத்திற்கு வரலாம்,,,
உண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 6 வது முறையாக முதல்வராக
பதவியேற்கிறார் எனில் இடைப்பட்ட காலத்தில் 2 முறை பதவியேற்றிருக்கிறாரே­
ஓ பன்னீர் செல்வம். அதாவது, ஊழல் வழக்குகளில் நீதிமன்றங்கள் …

என் காமத்தின் பிறப்பிடம்!

Image
என் கனவில்
தோன்றும் காட்சிகளை
ஓவியமாய்
தீட்டி வைத்துள்ளேன்
மனதிற்குள்

அனைத்திலும்
அழகானவனாய்
அதிசயங்களாய்
பிரளயங்களின்
பிரபுத்துவனாய்
உன்னை
தானாக வரைகிறதென்
தூரிகை

என் வார்த்தைகள்
வண்ணங்களாகியும்
அலங்கரிக்கிறது
உன்னை

அனுதினமும்
உன்னையே நினைத்து
வெடித்துச் சிதரும்
என்
காமத் தீஞ்சுடரை
விளையாடத் தீண்டி
காதலாக

கைகோர்த்தும்
கட்டிப்பிடித்தும்
கண்களிரண்டையும்
முத்தங்களால்
நனைத்தும்
உதடுகளை கடித்தும்
சுவைத்தும்
உச்சி முகர்ந்தும்
என் உயர்ப்பூவை
தட்டியெழுப்பியும்

நானிருந்த தவத்தை
கலைத்திட வேண்டாமா
நீயென

ஏங்கிய
அடுத்த நொடிகளிலே
தீட்டிய
ஓவியத்திலிருந்தும்
நானிருந்த கனவு
உலகத்திலிருந்தும்
வெளியேறி
உயிர்பெற்று
என்முன்னால்
திடீரென
நீ தோன்றுகையில்
தாங்குமா
என் இதயம்

ஓர் அடர்வனத்தில்
வழித்திசை காணாமல்
அலைந்து திரிந்து
திடீரென கண்களுக்கு
விருந்தாய் அகப்படும்
ஒற்றையடி பாதையை
நோக்கி ஓட்டமெடுக்கையில்
உயிர் மூச்சு வாங்குமே
அதுபோலவும்

எத்தனையோ சுமைகளை
தாங்கும் பூமியதன்
நில வெடிப்பிலிருந்து
வானெங்கும் பரவுமே
அனல் காற்று
அதுபோலவும்

என் முன்னே

அக்பர்- ராணாபிரதாப் பெயர் மாற்றம்தான் பாஜகவின் வளர்ச்சித் திட்டமா?

Image
பதிவை வாசிப்பதற்கு முன்னால் ஏற்கனவே 17 நவம்பர் 2015 அன்று எழுதிய
இப்பதிவை   அவுரங்கசீப் சாலை, அப்துல் கலாம் சாலையான,,, "பதிவு" ஒரு கருத்தை மாற்றுமா?         வாசிப்பது நன்று, இந்துத்துவ பார்ப்பானிய ஆர்எஸ்எஸ்
தாய்பிறப்பான பாஜகவின் தொடர் இசுலாமிய சிறுபான்மையின மக்களின்
அடையாளங்களை அழித்துக்கொண்டிருக்கிறது.

இந்திய தேசம் பல பிரச்சனைகளில் சிக்கி திணறிக்கொண்டுள்ளது. தொழில்
மற்றும் விவசாயத்தின் வீழ்ச்சி கவலை தருகிறது. விலைவாசியும் வேலையில்லாத்
திண்டாட்டமும் மக்களை வாட்டி வருகின்றன. 10 மாநிலங்களில் 284 மாவட்டங்கள்
வறட்சியில் சிக்கி தவிக்கின்றன. வரலாறு காணாத வறட்சி மக்களை துன்பத்தின்
எல்லைக்கே துரத்திவிட்டது. வெயில் காரணமாக 400க்கும் அதிகமானோர்
மாண்டுவிட்டனர். இவையெல்லாம் பாஜக அமைச்சர்களுக்கு முக்கிய பிரச்சனைகளாக
தெரியவில்லை.

ஹரியானா பாஜக முதல்வர் திரு.கட்டார் அக்பர் சாலையை உடனடியாக மகாராணா
பிரதாப் சாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் இது மிக அவசர
பிரச்சனை எனவும் வி.கே.சிங்கிற்கு கடிதம் எழுதினார்.

உடனே திரு. சிங் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் திரு. வெங்கையா நாயுடுக்கு
இதே பிரச்சனையை வலியுறுத்தி…

2016 இல் மீண்டும் ஜெயலலிதா , காம்ரேட்களின் கவனக்குறைவு,,,

Image
2011 இல் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த ஜெயா
தலைமையிலான அதிமுக அரசு நடந்து முடிந்த தமிழகத் தேர்தல் 2016 மூலம் 134
இடங்களை பெற்று மீண்டும் ஐந்து ஆண்டுகளை தக்கவைத்துக்கொண்டது . இதில்
தனிப்பெரும் எதிர்கட்சியாக திமுக அங்கம் வகிக்கிறது. திமுகவானது 88
இடங்களை பெற்றிருக்கிறது. இதன் மூலம் மாற்று என்பது எனக்கு நானேதான்
என்று காட்டியிருக்கிறது ஜெயா அரசு. அவரின் தேர்தல் பிரச்சாரத்திலேயே
இதனை கூறியிருக்கிறார். அந்த வகையில் வரப்போகிற ஐந்து ஆண்டுகளிலும்
தாங்கள் அடிமையாகவே இருக்க விரும்புகிறோம் என்று தங்களின் ஆட்காட்டி
விரலை அடகு வைத்திருக்கும் தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த நன்றிகள்! இங்கே
மக்களின் மனநிலையை புரிந்துணர்வு கொள்ளாமல் அவர்களின் மீதே குறைகூறும்
போக்கு அரசியலுக்கு நல்லதல்ல என்பதை உணர வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.
எந்தவிதமான அதிருப்தியையும் ஒரு செயற்கையான திருப்தி மனங்களை
மாற்றக்கூடியதாக இருக்கிறது. இன்னமும் இடதுசாரியமும் இன்னபிற முற்போக்கு
அரசியல் கட்சிகளும் வெகுசன மக்களையும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை
மக்களையும் நெருங்கிச் சென்று அந்த செயற்கையான திருப்தியை உ…

சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளான பின்னரும் தலித்துகள் நிலைமை பரிதாபகரமாகவே உள்ளன – சீனிவாசராவ்

Image
சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளான பின்னரும், தலித்துகள் நிலைமை
பரிதாபகரமாகவே உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய
செயலக உறுப்பினர் சீனிவாச ராவ் கூறினார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள தேஷ் பகத் யாத்கார் கூடத்தில் தலித்
ஒடுக்குமுறை விடுதலை முன்னணி சார்பாக சிறப்பு மாநாடு நடைபெற்றது.
இச்சிறப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே சீனிவாச ராவ் இவ்வாறு
கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
"நாட்டில் சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளானபின்னரும் தலித்துகள் நிலைமை
மிகவும் பரிதாபகரமானதாகவே உள்ளது மேலும் இப்போது மோடி தலைமையிலான பாஜக
மத்திய அரசாங்கம் தலித்துகள் பெற்றுவந்த சலுகைகளைக்கூட வெட்டிச்
சுருக்கும் வேலைகளில் இறங்கி இருக்கிறது. தலித்துகள் மீதான
அட்டூழியங்களும் அதிகரித்திருக்கின்றன. தலித்துகள் கொல்லப்படுகிறார்கள்
தலித் பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர்
கொல்லப்படுகிறார்கள். தலித் மாணவர்கள் பெற்றுவந்த கல்வி உதவித் தொகை
வெட்டப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு
மறுக்கப்படுகிறது. இந்துத்துவா சக்திகள் தீண்டாமையையும் சாதி
அடிப்படையிலான…

தென்றல் காற்று

Image
அமைதிப்
பெருவெளியில்
அடங்காமல்
சுற்றிச் சுழலும்
தென்றல் காற்றுக்கு
நான் அடிமை

சீற்றமில்லை
புழுதிகள்
கொஞ்சமுமில்லை
வெண்ணிற ஆடையால்
சலித்தெடுத்து
வடித்தாலும்

உட்புகுந்து
வெளியேறுகையில்
உள்ளத் தூய்மையை
திறந்து காட்டி விட்டு
செல்கிறது எந்தன்
தென்றல் காற்று

மூக்குடைந்து போன
முகங்களுக்கு
வேண்டுமானால்
காற்று வெறும்
நாற்றமாகலாம்

யாருமறியா
சாமத்தில் அடர்த்தியான
அந்த பூவனத்தில்
பூத்துக் குலுங்கும்
மலர்களின் மணத்தை
கவர்ந்து

தன்னை
ரசிகிறவர்களின்
மனங்களை கவரும்
வர்ணஜால
வித்தைகளை தனக்குள்
இருத்தியிருக்கும்
தென்றல் காற்றுடனே
திகட்டாத
வேட்கைதனில்
மூழ்கியிருக்கும்
எவரும்
காதலிக்கத்
தொடங்கியிருக்கிறார்கள்
தென்றல் காற்றை
இப்போதுதான்

நானோ
முந்திப் போகிறேன்
அவர்களுக்கு
முன்னரே காதலிக்கவும்
செய்கிறேன்
என் ஆன்மாவின்
அடுத்த வாரிசு
தென்றல் காற்றாக
இருக்க வேண்டுமென்கிற
ஒரு சின்ன
நப்பாசையோடு,,,

வள்ளுவன் குறித்தான விவாதத்தில் அயோத்திதாச பண்டிதர்

Image
1892இல் சென்னையில் மகாஜன
சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி
தலைமையில் நடந்தது. கூட்டத்தில்
அவர் பேசும்போது வள்ளுவர் பார்ப்பன
விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த
திருக்குறளைப் பாடினார்; சுக்கில-
சுரோனிதம் கலப்பரியாது என்று
குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக்
கொண்டிருந்த அறிஞர் திரு.க
அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள்
சொல்லியதை நான் ஏற்றுக்
கொள்வதென்றால், நான் சில கேள்விகள்
கேட்க வேண்டும் என்றார்.
அதற்கு சிவநாம சாஸ்திரி, சரி, கேளும்
என்றார்.
நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று
இழிவுபடுத்தப்படும் பறையர்கள்
என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின்
கருணையால் எம்.ஏ, பி.ஏ, படித்துப்
பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில்
அமர்ந்திருக்கிறார்களே? அவர்கள் யார்
விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று
எண்ணுகிறீர் என்றார். அதற்கு சிவநாம
சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல்
நின்று கொண்டிருந்தார்.
பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச
பண்டிதர் தொடர்ந்து
பெருங்குற்றங்களைச் செய்து
சிறைச்சாலைகளில்
அடைக்கப்பட்டிருக்கும் பார்ப்பனர்கள்
யார் விந்துக்குப்
பிறந்திருப்பார்களென்று நீர்
நினைக்கிறீர் என்று க…

சாதிகளின் அடிப்படையில் வகுப்பறைகளை பிரிக்கும் அவலம்

Image
சாதியம் பார்க்கும் சமூகத்திற்கு கல்வி ஒரு கேடா! சுயமாய் சிந்திக்கும்
பகுத்தறிவுக்கு முன்னால் "சாதியம்" தையல் அறுந்து பிய்ந்து போன
செருப்பாகவே இருக்கும் அதனை உபயோகிக்க முடியாது, உபயோகித்தாலும் எவ்வித
பிரயோஜனமின்றி அணிந்த கால்களுக்கு தீங்கையே விளைவிக்கும். ஒருவன் மெத்தப்
படித்திருந்தாலும் கல்வியால் அவன் வாழ்வும் அறிவும்
வளர்ச்சியடைந்திருந்த­ாலும் அவன் மனதிற்குள் சாதிய துவேஷ வஞ்சம்
இருக்குமேயானால் அவன் மனித இனத்திலிருந்து விலகி கல்வியறிவற்ற மிருக
இனத்திற்கு ஒப்பாகிவிடுவான். மிருகங்கள் கூட இவ்வுலகில்
வாழத்தகுதியானவைதான் ஆனால் சாதியத்தை உயர்த்தி பிடிப்பவன்
வாழத்தகுதியற்றவனாகிவ­ிடுகிறேன், அவ்வாறான வாழத்தகுதியற்றவனே ஒரு
கல்வியாளனாகவும், அக்கல்வி நிறுவன முதல்வராகவும் இருப்பானெனில் இளைய
தலைமுறைக்கு எவ்வாறு அவனால் பகுத்தறிவை ஊட்டிட முடியும்? அதற்கு மாறாக
சமூகத்தை சீரழிக்கும் சாதிவெறி கொண்ட இளைய தலைமுறை சமூகத்தைதானே அவனால்
வளர்த்தெடுக்க முடியும், அப்படியெனில் இந்தியம் முழுக்க முழுக்க
பிற்போக்குச் சிந்தனையில் கொண்ட சீரழியும் சமூகத்தை நோக்கியே பயணிக்கிறது
என்பது இச்சம்பவம்…

மேலும் ஒரு சாதி ஆணவக் கொலை நெல்லையில்,,,

Image
திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தலித் இளைஞர்
விஸ்வநாதன், இவர் இரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்
தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த சாதிய ஆதிக்க பிரிவைச் சேர்ந்த சங்கர்
என்பவரின் மகள் காவேரியை காதலித்து வந்துள்ளார். இதற்கு காவேரியின்
வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து கடந்த 3ம் தேதி விஸ்வநாதனும்
காவேரியும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகினர். இந்நிலையில்
காவேரியின் தந்தை விஸ்நாதனின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து மிரட்டல்
விடுத்துவந்தார். இதுகுறித்து விஸ்வநாதன் குடும்பத்தினர் காவல் துறையில்
புகார் அளித்தனர். ஆனால் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் ஆத்திரம் அடங்காத காவேரியின் தந்தை வெள்ளியன்று விஸ்வநாதனின்
சகோதரி கல்பனாவை வெட்டிக்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி
மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
உடுமைலையில் சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்தி
அதிர்ச்சியலைகள் அடங்குவதற்குள் தமிழகத்தில் மேலும் ஒரு சாதி ஆணவக் கொலை
அறங்கேறி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தீக்கதிர்

ஊக்க மது கைவிடு ! - மக்கள் அதிகாரம்

Image
என் தோழா! தமிழகம் டாஸ்மாக் எனும் மதுக் கொள்கையால் சீரழிந்து வருவதைக்
கண்டு சீற்றமுடன் நீயெழுந்து போராட்ட களத்தில் நிற்கிறாய்,,, நீயாரென்று
எனக்குத் தெரியாது ஆனாலும் உனது புகைப்படத்தை கண்டு பதற்றமாகிறேன். இந்த
முதலாளித்துவ சர்வாதிகார அரச பயங்கரவாதிகளின் பாதுகாவலனாக விளங்கும்
காவல் துறையினால் மிகவும் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறா­ய்,,, ஆனாலும்
உன் முகத்தில் பயம் இல்லை அதற்கு மாறாக பற்றி எரியும் பெருங் கோபம்
கொந்தளித்தெழுகிறது. "இளங்கன்று பயமறியாது" என்பார்கள் அதற்கு துணையாக
ஏதேனும் எழுச்சி மிகுந்த ஒரு பெரும் சக்தி இருக்க வேண்டும் என்பதை போல
உனது பயமறியா பெரும் புரட்சிக்குப் பின்னால் "மக்கள் அதிகாரம்" எனும்
எழுச்சி மிகுந்த பெரும் சக்தி இருக்கின்ற வரையில் நீ தோற்றுப் போக
மாட்டாய் என உறுதியாகச் சொல்கிறேன். என் தோழா! உனது முகத்தில் வெடித்துக்
கிளம்பும் பெருங் கோபத்தை அணைத்து விடாதே! அதுவே நமக்கான அதிகாரத்தை
மீட்டெடுக்கும் "மக்கள் அதிகாரம் துணையோடு"
நிலைநிறுத்தி வை ! நமக்கு தேர்தலில் இந்த அரசியல் களவாணிகள்
தந்திருக்கும் "பூரண மதுவிலக்கு" …

பார்ப்பனர் ஆதிக்கம் பற்றி - அம்பேத்கர்

Image
ஆட்சி செய்யும் வகுப்பாரின் மனப்பாங்கு என்ன? அதனுடைய மரபு என்ன? அதனுடைய
சமுதாயச் சிந்தனை என்ன?

பார்ப்பனர்களை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள், சரித்திர அடிப்படையில்
பார்த்தால் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின்
(சூத்திரர்கள்,தீண்டப்படாதவர்கள்) ஜென்ம விரோதிகளாக இருந்து வருபவர்கள்.
இந்து சமுதாய மக்கள் தொகையில் இந்த இருவரும் 80 சதவிகிதத்தில் உள்ளனர் .
இன்று இந்தியாவிலேயே, அடிமைப் படுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த சாதாரண
மனிதன் ஒருவன் இவ்வளவு தாழ்த்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு
எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கை யோ, அபிலாஷையோ இல்லாது. இருப்பதற்கு
முழுமையான காரணம், பார்ப்பனர்களும் அவர்களுடைய சித்தாந்தமுமேயாகும்.

பார்ப்பனியத்தின் தலையாய கொள்கைகள் அய்ந்து

(1) பலதரப்பட்ட வகுப்புகளுக்குள்ளே படிப்படியான சமத்துவமில்லாத உயர்வு
தாழ்வு நிலைகள்

(2) சூத்திரர்கள் , தீண்டத்தகாதார்களுடைய மோசமான வலிவற்ற தன்மை

(3) சூத்திரர்களும், தீண்டத்தகாதவர்களும் என்றைக்கும் படிக்கக் கூடாது என்று தடை

(4) சூத்திரர்களும் , தீண்டப் படாதவர்களும் உயர்நிலையோ , ஆற்றலோ பெறுவதற்குத் தடை

(5) சூத்திரர்களும் தீண்டப்பட…

மோசடி படிப்புச் சான்றிதழ் புகழ் மோ(ச)டி

Image
1980களில் படித்த நாங்கள் எல்லாம் கைகளால் மதிப்பெண்கள் நிரப்பப்பட்ட
சான்றிதழ்களைப் பெற்றிருக்கக்கூடிய அதே சமயத்தில் மோடி மட்டும் கணினியால்
தயார் செய்யப்பட்ட சான்றிதழைப் பெற்றிருப்பது எப்படி என்று முகநூல்
பக்கங்களிலும், ட்விட்டர் பக்கங்களிலும் பல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி
இருக்கிறார்கள்.
மோடி தில்லிப் பல்லைக் கழகத்தில் பிஏ படித்தார் என்றும், குஜராத்
பல்கலைக் கழகத்தில் எம்ஏ படித்தார் என்றும் பாஜகவின் தலைவர் அமித் ஷா இரு
நாட்களுக்கு முன்பு தில்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
இவர் தெரிவித்த உடனேயே ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஒரு பத்திரிகையாளர்
கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அவை இரண்டுமே போலி சான்றிதழ்கள் என்று
கூறினார்கள்.

இந்நிலையில் பட்டம் வழங்கிய தில்லி பல்கலைகழகத்திற்கு சென்ற ஆம் ஆம்மி
கட்சி தலைவர்களை சந்தித்து அமித்ஷா வெளியிட்டிருக்கும் சான்றிதழின் உண்மை
தன்மையை உறுதிபடுத்துமாறு கூறினர். இதையடுத்து பல்கலைகழக பதிவாளர்
செய்தியாளர்களை சந்தித்து சில தவறுகள் கூறித்து கருத்துக் கூற முடியாது.
சில தவறுகள் எதர்த்தமாக நடைபெறுபவை என கூறியதுடன், அந்த சான்றிதழ்
உண்மையான…

ஜிஷாவின் தாயை சந்தித்தார் ரோஹித் வெமுலாவின் தாய்

Image
ஒரு சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பிலேயே பெரும் ஆதிக்கத் திணிப்பை சக
மனிதர்களிடத்தில் அதையும் தாண்டி குறிப்பாக பெண்களிடத்தில் மிகச்
சாதாரணமாக பிரயோகப்படுத்தும் பிற்போக்குத்தனமான சாதியவாதமும் மதவாதமும்
இருக்கின்ற வரையில் இந்தியம் சமத்துவ பாதையை நோக்கிப் பயணிக்க வாய்ப்பே
இல்லாத போது அந்த சக மனிதர்களான ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை தலித்திய
மக்களின் வாழ்வென்பது காலங்காலமாக நசுக்கப்படுவதே வழக்கமாக
குடியமர்த்தப்படுகிறத­ு. ஒரு தலித்திய சமூகத்தில் அநீதிகள்
நிகழ்த்தப்படுகிறபோது­ அதனை எதிர்த்து வெகுண்டெழும் ஆதிக்கர்களை கண்ணால்
பார்ப்பதே கடினம், அப்படியானவர்கள் இல்லையென்றே எடுத்தாளலாம் ஏனெனில்
அவ்வகையானவர்கள் என்றுமே ஆதிக்கத்தின் பிடியில்தானே தன்னை நிலைநிறுத்திக்
கொண்டிருக்கிறார்கள் . ஆகவேதான் இந்த கேடுகெட்ட இந்துத்துவ பார்ப்பானிய
ஆதிக்கச் சாதிவெறியர்களின் மிகக்கொடுமையான அடக்குமுறை கோரச்சம்பவங்கள்
நிகழ்த்தப்படுகின்றபோ­து அதற்கான எதிர்ப்பலைகளையும்,
பாதிக்கப்பட்டோர்களுக்கான ஆறுதல் மொழிகளையும், அன்பு , கருணை
காட்டுவதிலும் அதே ஆதிக்கச் சாதிவெறியர்களால் பாதிப்படைந்த இன்னொரு
தலித்தியம் தோள்க…

ஊமைகள் வேட்பாளர்கள் எனில் சட்டசபையிலும் ஊமைகள் தானே!

Image
தமிழகத் தேர்தல் 2016 இன் உச்சக்கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துக்
கொண்டிருக்கும் வேளையில் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சித்
தலைவர்கள் ,மற்றும் கூட்டணி ஒருங்கிணைப்பாளர்கள்,­ அக்கட்சிகளின்
பிரச்சார பீரங்கிகளாக களத்தில் இறக்கப்பட்டுள்ள திரைத்துறை நடிகர்
நடிகைகள் கையில் மைக்குடன் பிரச்சார வாகனத்தை அலங்கரிக்கிறார்கள் .
அவர்களின் பக்கத்தில் வெள்ளந்தியாக முகத்தை வைத்துக்கொண்டு எதுவும்
அறியாததுபோல் கைகளை கூப்பிக்கொண்டு பேசாமல் அமைதியாக அந்த தலைவர்கள்
அல்லது நடிகர் நடிகைகளின் பக்கத்தில் தலைவிதியே என
நின்றுக்கொண்டிருக்கி­றார்கள். இதில் அதிகமாய் கவனித்தது ஒன்று அனேக
வெட்பாளர்கள் நிற்கக்கூட முடியாமல் வாகன கம்பிகளில் உடம்பை
முட்டுக்கொடுத்து பரிதாபமாய் சிலையாக நிற்கிறார்கள். இங்கே தான்
வேட்பாளர்கள் மீது
வாக்காளர்களுக்கு சந்தேகக் கேள்விகள் எழுகிறது. அது என்னவெனில்
வேட்பாளருக்கு பேச்சு வருமா வராதா? வேட்பாளர் என்ன ஊமையா? பொதுமக்களை
பார்த்து ஊமையாக கைகூப்பி வணங்கும் வேட்பாளர் வெற்றி பெற்ற பின்
சட்டசபையில் என்னத்த பேசி கிழிக்கப்போகிறார்?
கொஞ்ச நேரம் ஒரு வாகனத்தில் நிற்க மு…

சுமக்கும் சிலுவை

நான் சிலுவையை சுமக்கின்றபோது எழும் பூமியதிரும் சிரிப்புகளை உற்று கவனிக்கவும் செவி மடுக்கவும் அப்போதெனக்கு தோன்றவில்லை அது தேவைகள் பூர்த்தியான தெனாவட்டு சிரிப்புகளென சிந்தையில் முன்பே சுருக்கென குத்தி விட இலக்கு ஒன்றேதான் இப்போதெனக்கு ஆறுதல் அதுவே பாதி வழியை கடந்த பின்னர் என்னுள் நானே என் நரம்புகளினூடே எழும்பும் உரத்த முழக்கங்களால் சிலுவையே உடைபடும் நிலைகொள்ள முதல் கேள்வி எழுகிறது என்னுள் எங்கே நான் சிலுவையை இறக்கி வைப்பது? சற்றும் பதிலுக்கு காத்திருக்கவில்லை எனை அடிமையாக நடத்தும் அதே ஆதிக்கத்தின் தோளில்தான் இறக்கிவைக்கிறேன் விழும் அடிகளைத் தாங்கி திருப்பி அடிக்காமல் விடுதலை பிறக்காது என் தோழா!

ஜிஷாவுக்கு

Image
ஜிஷாவுக்கு

நாங்கள் தேர்தல்
கொண்டாட்டத்தில்
குளித்து அழுக்கோடு
அழுக்காகவே
வெளியேறுகிறோம்
எங்களுக்கது
தூய்மையென
கற்பிக்கப்பட்டுள்ளது­
வேண்டுமெனில்
ஆங்காங்கே மீம்ஸ்
போட்டு
விளையாடுவோம்

உனது வலியையும்
வேதனையையும்
அதனுள் புதைத்து
ஆண்டைகள் பெருமை
பேசுவோம்

படிப்பறிவில்
முதலிடமாம்
பெண்
மக்கட்தொகையில்
முதலிடமாம்
கம்யூனிஸத்தின்
புகலிடமாம்
எழிலோவியம்
இயற்கை அழகு
இமயம் வரை பேசுமாம்
இப்படித்தான்
உன் பிணம் விழுந்த
கேரளம் எங்களுக்கு
அறிமுகம்

எதையும் கடுகளவும்
அசைத்திடாத
கொழுத்த முதலைகளாக
முளைத்திருக்கும்
எங்களுக்கு

உனது முலைகள்
அறுக்கப்பட்டு
வயிறு கிழித்து
குடல்களை வெளியே
வீசப்பட்டு
யோனி
பதம்பார்க்கப்பட்டு
தெருவில் வீசியெறிந்த
உயிருக்கு இரையானது
இந்திய மனிதம்
அது என்னவிலையென
கேட்டு கையேந்துவோம்
அதிகார வர்க்கத்திடம்
அப்படியான மனிதர்கள்
நாங்கள் பிணத்தையும்
பங்கிட்டு உண்போம்
பெண்பிணம்
கிடைத்தால்
இன்னமும் மகிழ்ச்சி
குறியும் சேர்ந்து
புசிக்கும் பிணத்தை

ஜிஷா
கொரூமாய்
இறந்து கிடப்பது
நீமட்டுமல்ல
நீ பயின்ற
சட்டமும் கூட

வாழ்தலில்
நாதியற்று கிட…