உலக மகளிர் தினம் ஐரோம் ஷர்மிலாவுக்கு உதவாத நிலையில்,,,

மார்ச் 8 உலக மகளிர் தினத்தை எவ்வாறெல்லாம் பெருமைபடுத்த வேண்டுமென ஒரே
கூச்சலாய் எழும்பும் குரல்களுக்கு அப்பால் இந்தியத்தில் ஒருத்தியின்
குரல் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருவதை எவ்வாறு எடுத்துக்கொள்வதெனும்­
சிந்தனையில் புலப்படாத ஏதோவொரு வஞ்சம் பெண்ணியத்திற்குள்ளும­்
இருப்பதாகவே சுட்டிக்காட்டிவிடுகி­றது. இதுதான் சூழ்ச்சிகளின்
செயல்வடிவம் போலும்,,, அந்த ஒருத்திக்காகவா உலக மகளிர் தினத்தை ஓரங்கட்ட
பார்க்கிறீர்கள்? எனும் விமர்சனம் எழலாம்,, நிச்சயமாக மறுக்க முடியாது,
இந்தியத்தில் உலக மகளிர்தினம் ஒரு சடங்கு மட்டுமே,,, சடங்கு செய்யப்பட்ட
அடுத்தநாள் வெறுங்கனவாகிப் போகும் எதார்த்தத்திற்கு வரவேற்பு என்பதில்
உடன்பட்டுபோகையில் பெண்ணியமும் நசுங்கித்தான் போகும். காலச்சூழலானது
முற்றிலும் தந்திரங்களால் ஆனது எனும் கட்டமைப்பை உடைக்க வேண்டுமெனில்
அந்த ஒருத்தியின் கோரிக்கை ஏற்கப்படவேண்டும், அந்த ஒருத்தியை
வஞ்சித்தமைக்காக இந்திய அரசு மன்னிப்பு கோர வேண்டும், அந்த ஒருத்திக்கு
விடுதலை கொடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும். அவ்வாறு நடைபெற்றால்
ஒரளவுக்கு உலக மகளிர் தினத்தை ஊரறிய கொண்டாடலாம். ( அழுத்தம் அவசியம்
"ஓரளவுக்கு" மட்டுமே) இந்திய அரசுக்கும், இந்திய நீதித்துறைக்கும்
முன்னால் ஒரு கைதியாக சித்தரிக்கப்படுகிறாள­் பெண் ஒருத்தி, அவள்
உணர்வுகளில் என்றுமே தீவிரவாதம் இருந்ததில்லை, ஆனாலும் அவளை தீவிரவாதியாக
நடத்துகிறது அரசு.
யார் அந்த ஒருத்தி? மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் இந்திய
அரசின் ஏகாதிபத்தியத்தால் ஏற்படுத்தப்பட்ட "சிறப்பு இராணுவ
ஆயுதச் சட்டம்" மூலம்
அம்மக்களை அடிமைபடுபத்துவது மட்டுமல்லாது, மனித உரிமை மீறலையும்
கட்டவிழ்த்து விட்டிருக்கிறது அதிகார வர்க்கம். இச்சட்டத்தை பயன்படுத்தி
ராணுவ அத்துமீறல்கள் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. யாரை எப்போது
வேண்டுமானாலும் விசாரணைக்கு உட்படுத்தலாம், விசாரணை இல்லாமாலே அவர்களை
கொன்று குவிக்கலாம், எந்த வீட்டுப் பெண்களையும் வன்புணர்வு செய்யலாம்,
யாரை வேண்டுமானாலும் நடுத்தெருவில் இழுத்துக்கொண்டு வந்து கொடுமை
இழைக்கலாம், பெண்களின் கூந்தலை வெட்டியும்,ஆடையை அவிழ்த்தும் அவர்களை
அவமானப்படுத்தலாம், என மிக நீண்ட சர்வாதிகார அடக்குமுறைகளை கொண்டுள்ளது
இந்த
"சிறப்பு இராணுவ
ஆயுதச் சட்டம்" அவ்வளவு தீவிரமான மனித உரிமை மீறல்களை கொண்டிருக்கும்
இச்சட்டத்தை நீக்கக் கோரி 2002 முதல் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேல்
தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தோழர் "ஐரோம் ஷர்மிலா
சானு" தான் அந்த ஒருத்தி., ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம்-
1958 ஐ நீக்க வேண்டும் என ஐரோம் ஷர்மிலா சானுவின் கோரிக்கையினை இருதேசிய
கட்சிகளான பாஜக மற்றும் காங்கரஸ் ஒரேமாதிரியான மனநிலையில் நிராகரித்தே
வந்திருக்கின்றன. முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சியை இந்தியத்தில்
நிறுவுவதில் இவ்விரு தேசிய கட்சிகளுக்கும் போட்டி நிலவுகிறதே தவிர
சமத்துவம் சகோதரத்துவத்துக்கு எதிர இரண்டும் ஒரே ஆட்சியமைப்பைதான்
கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் வெறும் நீராகாரத்தை
மட்டுமே கொண்டு தொடர் உண்ணாநிலை அறப்போராட்டத்தை முன்னெடுத்து
போராடிக்கொண்டிருக்கு­ம் சகோதரி ஐரோம் ஷர்மிலாவை இந்த தேசம் இதுவரை
கவனத்தில் எடுத்துக்கொண்டதேயில்­லை , இதில் ஊடகங்களும் உள்ளடக்கம், எங்கே
இந்தியத்தில் புரட்சி வெடித்துவிடுமோ என்கிற அச்சத்தில் அனைத்துவிதமான
கார்ப்பரேட் ஊடகங்களும் திட்டமிட்டே சகோதரி ஐரோம் ஷர்மிலாவை புறக்கணித்து
விடுகின்றன. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் வெறும் நீராகாரத்தை
மட்டுமே கொண்டு தொடர் உண்ணாநிலை அறப்போராட்டத்தை முன்னெடுத்து
போராடிக்கொண்டிருக்கு­ம் சகோதரி ஐரோம் ஷர்மிலாவை இந்த தேசம் இதுவரை
கவனத்தில் எடுத்துக்கொண்டதேயில்­லை , இதில் ஊடகங்களும் உள்ளடக்கம், எங்கே
இந்தியத்தில் புரட்சி வெடித்துவிடுமோ என்கிற அச்சத்தில் அனைத்துவிதமான
கார்ப்பரேட் ஊடகங்களும் திட்டமிட்டே சகோதரி ஐரோம் ஷர்மிலாவை புறக்கணித்து
விடுகின்றன. உலக மகளிர் தினமென்று ஒவ்வொருக்கொருவர் அகமகிழ்ந்து
பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கின்­றனர், ஆனால் யாராலும்
கவனிக்கப்படாமலும், புறக்கணித்தும் தன் போராட்டத்தை எந்த சூழலுக்கும்
விட்டுக்கொடுக்காமலும­், உயிருக்கும், உரிமைக்கும்
போராடிக்கொண்டிருக்கு­ம் தோழர் ஐரோம் ஷர்மிலாவுக்கு இந்த உலக மகளிர்
தினம் பொருந்துமா? என்றால் நிச்சயம் அவரின் வார்த்தைகள் இந்திய பெண்களை
ஒரு நிமிடமேனும் அழவைத்து விடும் என்பதே உண்மையாக இருக்கிறது. இந்த 15
ஆண்டுகளுக்கும் மேலாக ஏதேதோ சட்டப் பிரிவுகளில் குறிப்பாக தற்கொலை
முயற்சி எனும் குற்றப்பிரிவுகளில் தொடர்ந்து கைதுக்கு ஆளாகியும், தன்
வாழ்நாள் முழுவதையும் வீட்டுச் சிறையில் அவதியுறும் சகோதரி ஐரோம்
ஷர்மிலாவுக்காக இந்த இந்தியத்து மகளிர்தினம் என்ன செய்யப் போகிறது?
வெற்று வாழ்த்துக்களை மட்டுமே உதிக்கப் போகிறதா? பதில் சொல்ல
கடமைபட்டிருக்கிறார்க­ள் நம் இந்தியப் பெண்கள். இந்திய தேசம் சகோதரி
ஐரோம் ஷர்மிலாவுக்கு எதிராக இரட்டை வேடமிட்டு வஞ்சிக்கிறது என்பதை எந்த
பெண்ணியத்தாலும், சமூக முற்போக்காலும் மறுக்கவே முடியாது. கடந்த வாரம்
2.3.2016 அன்று ஐரோம் ஷர்மிளாவை நீதிமன்ற வீட்டுக் காவலில் இருந்து
விடுவிக்கப்படுவதாக தீர்ப்பு வந்த அடுத்த இரண்டு தினங்களில் அதாவது 5ம்
தேதி மீண்டும் தற்கொலை முயற்சியென வழக்கிட்டு சிறையில் அடைத்திருக்கிறது
அதிகார வர்க்கத்து நீதித்துறை. தன் மக்களின் உரிமைக்காகவும், பூரண
சுதந்திரத்திற்காகவும­் தன்னுயிரை பணயம் வைத்திருக்கும் சகோதரி ஐரோம்
ஷர்மிலாவுக்கு பின்னால் சமூக எழுச்சி கொண்டு ஒரு மாபெரும் புரட்சியை
முன்னெடுக்க உலக மகளிர் தினத்தை இந்த தேசம் பயன்படுத்துமேயானால் அப்போது
தாராளமாய் பயன்படுத்தலாம் இந்தியத்தில் உண்மையான மகளிர் தினமென்று,
அதுவரையில் உலக மகளிர் தினம் ஒரு சடங்காக மட்டுமே இந்தியத்தில்
கடைபிடிக்கப்படுகிறது­ என்பதை பெண்ணியமும்,சமூக முற்போக்கும் உணர்ந்து
செயல்பட வேண்டும் .

Comments

  1. இன்றைய பதிவுகளில் எனக்கு பிடித்தது..வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்