11/03/2016

விலையேற்றப்பட்ட ராணுவம்

இந்திய எல்லையில்
வீற்றிருக்கும் வேலிகளே
நீங்களும் ஒருநாள்
விலைபோகலாம்

ராணுவத்தை மட்டும்
அழைக்காதீர்கள்
அப்போதும்,,,

ஸ்ரீ ரவிசங்கர், அதானி
குழுமம், ஆர்எஸ்எஸ்
ஆதிக்க சக்திகளென
அத்துணை
திருடர்களுக்கும்
சேவகம் செய்வதே
பணியென பாதையை
தொலைத்தவர்கள்

ஏதோவொரு
கார்ப்பரேட்டின்
காலணிகளை
அது தன் நாக்கால்
சுத்தம்
செய்துகொண்டிருக்கும்
சுற்றி சுற்றி
வாலாட்டியும்
கொண்டிருக்கும்

வேண்டாம்
அழைக்காதீர்கள்
ராணுவத்தை,,,
விலையேற்றப்பட்டிருக்கிறார்கள்
அவர்கள்

வேலிகளே நீங்கள்
அழைக்காமல்
இருந்தாலும் உங்களின்
அழுகுரலை கேட்டு
ஓடோடி வரும்
காம்ரேடுகளை
விரட்டி மட்டும்
விடாதீர்கள்

கார்ப்பரேட்டினை
இரும்புக் கரங்கொண்டு
தாக்கி அழிக்கும்
ஆயுதமே காம்ரேடுகள்

வேலிகளே
விலகாதீர்கள்
நெருங்கி வாருங்கள்
முற்போக்குச்
சிந்தனையால்
முழுபாரதத்தையும்
வலுசேர்ப்போம்,,,

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இன்னொரு கயர்லாஞ்சி கொடுமைகள்

இதோ இன்னொரு கயர்லாஞ்சி..! விழுப்புரம் அருகே நிலத்தை அபகறிக்க முயன்றவர்களை எதிர்த்த குற்றத்திற்காய்...நடு இரவில் வன்னிய சாதிவெறி ம...