05/03/2016

கலகம் செய்வோம் - இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கத்தோடு

மனசாட்சி,பகுத்தறிவு ஆகியவற்றை
சுட்டிக்காட்டி போராட்டம் நடத்துவதன்
மூலம் அநீதியை தணிக்க முடியுமே
தவிர, அதை ஒழித்துக்கட்ட
வேண்டுமானால் அதை எதிர்த்து
போராட வேண்டும். அநீதிக்கு
காரணமாக இருப்பது ஒரு கூட்டு
அதிகாரம் என்றால் அதனை
அதிகாரத்தை கொண்டேதான் எதிர்த்துப்
போராட வேண்டும். ஏற்கனவே
நிறுவப்பட்டுள்ள தனது
அதிகாரத்திற்கு பின்னால் தன்னை
நிலைநிறுத்திக்கொண்டுள்ள ஒரு
வர்க்கத்தை,அதற்கு எதிராக நாம்
அதிகாரத்தை பயன்படுத்தமுடியாமல்
அகற்றிவிட முடியாது, ஆக
வலுவானவர்கள் வலுவற்றவர்களை
சுரண்டுவதை நிறுத்திக்கொள்வதற்கு­
ள்ள ஒரே வழி இதுதான்-Dr.அம்பேத்கர்.
உலக மக்களுக்கு இன்று
முதன்மையான அச்சுறுத்தலாக
இருப்பது ஏகாதிபத்தியமேதான், எனவே
அதற்கு எதிரான திறண்மிக்க
போராட்டத்தை நடத்தியே தீர
வேண்டும். இப்போதிருப்பதை போல
வரலாற்றின் ஒரு கட்டத்தில்
இருந்திருந்தாலும் இப்போது வளரும்
ஏகாதிபத்தியம் மிகுந்த
அச்சுறுத்துதலை தருகிறது.
வடிவத்தில் ஏகாதிபத்தியம் உலகத்தை
சுற்றிலும் தனது பிடிய இறுக்கு
வருகிறது.அது ஏற்படுத்தும்
பாதிப்பிற்கு உட்படாத அம்சம்
ஏதுமில்லை எனும் நிலையை
பெற்றிருக்கிறது. உலகம் முழுவதன்
மீதும் விவரிக்கப்பட்ட அதனுடைய
வலையில் சிக்காதவர்கள்
யாருமில்லை, ஏகாதிபத்தியம் முன்பு
கொண்டிருந்த வடிவங்களுக்கு மாறாக
இன்று அது
இந்துத்துவம்,இனவாதம்,உலகமயமாக்கல்,தாராளவா
தம்,மதத்துவேசம்,சாதி ஆதிக்கம் (அ)
வெறி என பல்வேறு வர்க்க
கண்ணோட்டத்துடன் செயல்பட்டு
வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள
மேட்டூக்குடியினர் சமுதாயத்தின் கீழ்
அடுக்குகளில் உள்ளவர்களுக்கு
இழப்பு ஏற்படுத்தி ஆதாயங்கள்
அடைந்து வருகின்றன. இந்தியத்தில்
அதன் முகங்கள் பல்வேறு
சாயல்களுடன் இருக்கிறது.
இந்தியத்தில் சற்று விசித்திர
அணுகுமுறை ஏகாதிபத்தியத்திற்கு
உண்டு. சதவிகிதத்தின் அடிப்படையில்
கீழ் அடுக்குகளாக இருக்கும் பார்ப்பன
இனகுழுக்கள் மேட்டுக்குடிகளாகவும்
இருந்து கொண்டு பெரும்பான்மையை
பெற்றிருக்கும் இந்துமத
இனகுழுக்களை சாதியத்தின்
மையத்தில் இழப்பு ஏற்படுத்தி
ஆதாயங்கள் அடைந்து வருகின்றது.
இதையே பார்ப்பானியம் என்கிறோம்.
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சமூக
பொருளாதார அமைப்பில்
அவரவர்க்குள்ள இடங்களுக்குத்
தக்கவாறு மக்கள் உலகமயமாக்கலால்
ஏற்படும் இழப்புகளை சந்தித்துக்
கொண்டிருக்கிறார்கள். எனவே
உலகமயமாக்கலால் இழப்புகளை
அனுபவிக்கும் கீழ்தட்டு மக்கள்
அனைவரும் வெளியே வந்து
ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டத்தில்
சேர்ந்து கொள்ள வேண்டும். இந்த
கீழ்தட்டு மக்கள் என்போர்
தொழிலாளர்கள். குறிப்பாக முறைசாரா
தொழிலுற்பத்தியில் உள்ள
தொழிலாளர்கள். இராணுவ வீரர்கள்,
நிலமற்ற விவசாயிகள். சிறு மற்றும்
நடுத்தர விவசாயிகள், தலித்துகள்,
பழங்குடியினர்,மாணவர்­­
கள்,பெண்கள்,பிற வர்க்க முற்போக்கு
சிறுபான்மை பிரிவினர் ஆகியோராவர்.
ஏகாதிபத்திய-எதிர்ப்பு முன்னெடுப்பு
இதுவரை மோற்சொன்ன மக்கள்
பிரிவினரை பெருமளவில் ஈர்க்க
முடியவில்லை,இவர்கள்
அனுபவிக்கும் துயரங்களை
பார்க்கும்போது, இவர்கள் பெருமளவில்
ஏகாதிபத்திய எதிர்ப்பு கொள்கையில்
இணைந்திருக்க வேண்டும் ஆனால்
அப்படிஏதும் நடக்கவில்லை, அதற்கு
காரணம் மக்களிடையே நிலவும்
தெளிவற்ற கொள்கை என்பதுதான்,,,
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின்
குறிக்கோள்? இந்த போராட்டத்தில்
கலந்து கொள்ளப் போகிற மக்கள் யார்?
ஏன் அவர்கள் இதில் கலந்து கொள்ள
வேண்டும், யாருக்கு எதிராக அவர்கள்
போராட வேண்டும் போன்ற
கேள்விகளுக்கும், தொடர்ந்து நீளுப்
கேள்விகளுக்கும் மக்கள் விடைகளை
எதிர்பார்க்கிறார்கள் . ஏகாதிபத்திய
எதிர்ப்பு என்னும் கருத்தியலை ஒரு
திட்டவட்டமான தூலபான விஷயமாக
அவர்கள் கண்முன்னே கொண்டுவந்து
நிறுத்த முற்போக்கு சிந்தனையாளர்கள்
தவறிவிட்டார்கள். ஏகாதிபத்திய
எதிர்ப்பு என்பது செல்வாக்கின் கீழ்
ஏற்கனவே வந்துவிட்டபடியால்
பிறருடன் சொல்லளவிலோ,
செயல்வடிவிலோ, தொடர்பு கொள்ள
தவறிவிட்டது. இந்தியத்தை
பொருத்தவரையில் உள்நாட்டிலுள்ள
மேட்டுக்குடியினரின்
ஒத்துழைப்புடனும்,
கூட்டுறவுடனும்தான் வரலாறு
நெடுக ஏகாதிபத்தியம் இயங்கி
வருகிறது. புதிய வடிவம் பெற்றுள்ள
ஏகாதிபத்தியம் முன்போல பிற
நாடுகளை நேரடியாக தனது
ஆளுகைக்குட்படுத்துவதில்லை .
ஆனால் தங்களது சுரண்டலுக்கு
உள்நாட்டு மேட்டுக்குடியினரின்
தீவிரமான ஆதரவை நாடிச்செல்கிறது.
எனவே எந்தவொரு நாட்டிலும் நடக்கும்
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம்
என்பது தர்க்கரீதியாக (இந்து
உள்நாட்டு பார்ப்பானியம்,சாதி
இந்துக்கள்,போன்ற மக்கள் விரோர
செயல்பாட்டாளர்கள்) இந்த உள்நாட்டு
தரகர்களின் மக்கள் விரோரத
செயல்பாட்டுக்கும்,அவர்களது
ஆணைகளை தனது கொள்கைகள்,
செயல்திட்டங்கள் ஆகியவற்றின்
மூலம் நிறைவேற்றும் உள்நாட்டு
அரசுக்கும் எதிராக போராட்டமாகவே
ஏகாதிபத்திய எதிர்ப்பு இருந்திருக்க
வேண்டும். ஏகாதிபத்தியத்தின்
குறியீடுகள் சிலவற்றுக்கு எதிராக
மக்கள் போராட விரும்பினாலோ, ஆதரவு
திரட்ட முற்படும்போதோ, கிளர்ச்சியை
ஏற்படுத்தும்போதோ "சட்டம் ஒழுங்கு"
பிரச்சனை என்கிற பெயரால் அரசு
அவர்களை தடுத்து நிறுத்தி தன்
முதலாளித்துவ ஏகாதிபத்திய
புத்தியை காட்டிவிடுகிறது.
ஏகாதிகபத்தியத்தால்
பாதிக்கப்பட்டுள்ளவர்களால் மட்டுமே
உள்நாட்டு மேட்டுக்குடியினரையும்,
அரசையும் வீழ்த்த முடியும்.
ஏகாதிபத்தியம், உள்நாட்டு
மேட்டுக்குடியினர், அரசு ஆகிய
மூன்று சக்திகளுடனும் இயல்பாகவே
முரண்பட்டு கொண்டிருக்கக்கூடிய
மக்கள் யார்? அப்படி யாரேனும்
இருக்கிறார்களா என்றால்?
அவர்கள்தாம் தாமாக முன்வந்து
ஏகாதிபத்திய எதிர்ப்பு கொள்கையில்
இணைய வேண்டும். மார்க்சிய
அளவுகோளின் படி ஐரோப்பிய
நாடுகளில் காணப்படும் வர்க்கங்களாக
இல்லாத ஆனால் இந்திய
சமுதாயத்திற்கு மட்டுமே இயல்பாக
உள்ள தலித்துகள் பழங்குடியினர்
போன்ற அனைத்து சமூக குழுக்கள்,
உற்பத்தி இயக்கத்தில் அவர்களுக்குள்ள
இடம், அவர்களுடைய தனிச்சிறப்பான
பண்புகள், முரண்பாடுகள்
முதலானவற்றை வர்க்க
பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
இந்த பகுப்பாய்வு புறநிலை ரீதியாக
எப்போதேனுப் கட்டமைக்கப்பட்டிருக்­
குமேயானால் நமது நாட்டின்
மக்கட்தொகையில் நான்கிலொரு
பகுதியினரை கடுமையாக
பாதித்திருக்கும்,
சாதிப்பிரச்சனைகளையும், சாதிய
அளவுகோளையும் அப்பகுப்பாய்வு
உடைத்திருக்கும். கண்ணை உறுத்தும்
இந்த ஏதார்த்தத்தை மூடிமறைக்க
மக்களிடம் அறியாமையை விதைப்பதே
ஏகாதிபத்தியத்தின் முதன்மை பணியாக
இருக்கிறது. சாதி அமைப்பு என்னும்
வடிவத்தை கொண்டிருக்கும் இந்த
ஏகாதிபத்தியம், மேல்சாதிகள் மற்றும்
பழங்குடியின இனக்குழு மக்களின்
உணர்வுகளை அந்நியப்படுத்தியுள்ள­­
து. எங்கும் நிறைந்திருக்கும் இந்த
ஏகாதிபத்தியம் தலித்துகளுடனும்,
பழங்குடியிகளுடனும் மட்டும் நின்று
கொள்வதில்லை, அது சமூகத்தின்
அனைத்து வகுப்புப் பிரிவினர்கள்
மற்றும் மதப்பிரிவினர்களை பாதித்து
அவர்களிடையே சாதி உணர்வை
தோற்றுவிக்கிறது இது வர்க்க "தேசிய
உணர்வுக்கு எதிரானது" ஆனால்
ஏகாதிபத்தியம் இதையே "தேசபக்தி"
என்கிறது. அடையாளப்படுத்திப்பார­
்த்தில் தேசபக்தியென்கிற அவர்களின்
முழக்கத்திற்கு பின்னால் பரந்ததொரு
அதிகார அடக்குமுறை
நிலைத்திருக்கும். அதையே அவர்கள்
நிறுவ முற்படுகிறார்கள் என்பதும்
தெளிவாகும். ஆக இங்கே தேசபக்தி
என்பது ஏகாதிபத்தியத்தால் பகடி
செய்யப்படுகிறது என்பதை
ஏற்றுக்கொண்டாதான் ஆக வேண்டும்.
எது நடைமுறைத் தேவை எனும்
நிலைபாட்டிலிருந்து பார்த்தோமானால்
சாதிகளுக்கும்,மதங்களுக்கும்
ஆதரவாக நிற்பதை தன்னிடமிருந்து
பிரிக்க முடியாத பகுதியாக தனக்குள்
அணைத்து வைத்திருக்கும்
ஏகாதிபத்தியம் ஏகபோக
கட்டுப்பாடுகளை அதனுள் சொருகி
எக்தோபித்த நியாயப்படுத்துதல்
மனநிலையை உறுவாக்கி
வைத்திருக்கிறது. சாதி அமைப்பு
எனும் உருவங்கொண்டு உயிர்பெற்று
வாழும் ஏகாதிபத்தியம் மக்கள்
ஆதரவை திரட்டிக்கொள்வதற்கே
"தேர்தல்" எனும் சனநாயக
முறைமையை பயன்படுத்துக்கொள்கிற­
து . அதிலிருந்து பரப்புரை வெளிவந்து
தன் இருப்பை
தக்கவைத்துக்கொள்கிறது . பூரண
ஏகாதிபத்திய எதிர்ப்பு
மனநிலையையும், போராட்ட
முன்னெடுப்பினையும் மேற்கொண்டால்
மக்கள் மன்றம் என்பது எளிதாக நம்
கைகளுக்கு கிடைக்க பெறும்,
அதற்கான அணிதிரளே இங்கே
அவசியமாக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இன்னொரு கயர்லாஞ்சி கொடுமைகள்

இதோ இன்னொரு கயர்லாஞ்சி..! விழுப்புரம் அருகே நிலத்தை அபகறிக்க முயன்றவர்களை எதிர்த்த குற்றத்திற்காய்...நடு இரவில் வன்னிய சாதிவெறி ம...