04/03/2016

2016 தமிழக தேர்தல் நாள் அறிவிப்பு

தமிழக தேர்தல் 2016 க்கான அனல்பறக்கும் பிரச்சாரங்கள் நடந்து
கொண்டிருக்கும் சூழலை அனைவரும் அறிவர். களத்தில் ஆளும் அதிமுக சில
சிறுபான்மையின மக்கள் கட்சியின் கூட்டணியுடன் போட்டியிடப்போவதாக
தெரிகிறது. திமுக - காங்ரஸ் கூட்டணி கிட்டத்தட்ட
உறுதிசெய்யப்பட்டுவிட­்டது. தேமுதிகவும் தமாக வும் இழுபறியில் மக்கள்
நலக்கூட்டணியா? திமுகவா? என்கிற நோக்கில் செல்கிறது இன்னமும்
உறுதிசெய்யப்படவில்லை­, இரண்டு கம்யூனிஸ்டுகள்,மதிமு­க ,விசிக என நான்கு
கட்சிகளும் உறுவாக்கிய மக்கள் நலக் கூட்டியக்கத்தையே கூட்டணியாகவும்
அறிவித்து தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்­கிறது.
பாமக தனித்து போட்டியிடுகிறது அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி
ஏற்கனவே வென்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு
மீண்டும் அதே தொகுதியில் (தர்மபுரி) வேட்பாளராக நிறுத்தப்படுவாரென
எதிர்பார்க்கப்படுகிற­து. பாஜக-சமக கூட்டணி உறுதிசெய்யப்பட்டுள்ள­து.
தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தங்களுக்கான சின்னம் இரட்டை
மெழுவர்த்தி வாங்கியும் விட்டது.
இதற்கிடையே தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் நாளை இன்று(4.3.2016) மாலை
அறிவித்துவிட்டது. அதன்படி தமிழகத்தில் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெறும்.

தேர்தல் நாள்: 16-5-16

வேட்பு மனு தாக்கல்: 22-4-16

வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள்:29-4-16

வேட்பு மனு பரிசீலனை:30-4-16

வேட்பு மனுக்களை திரும்ப பெற இறுதி நாள்:2-5-16

வாக்குகள் எண்ணிக்கை 19-5-19

இனி எங்கும் தேர்தல் விழாவினை தமிழகத்தில் காணலாம்.

2 comments:

  1. தேர்தல் சூடு பிடிக்கிறது...
    ஓட்டு வணிகம் தொடங்கிவிடுமே

    ReplyDelete
  2. ஏற்கனவே ஓட்டு வணிகம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது தோழர்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

இன்னொரு கயர்லாஞ்சி கொடுமைகள்

இதோ இன்னொரு கயர்லாஞ்சி..! விழுப்புரம் அருகே நிலத்தை அபகறிக்க முயன்றவர்களை எதிர்த்த குற்றத்திற்காய்...நடு இரவில் வன்னிய சாதிவெறி ம...