ஸ்மிருதி இரானிக்கு ரோஹித் வேமுலாவின் தாய் ராதிகாவின் கேள்விகள்

ஸ்மிருதி இரானிக்கு ரோஹித் வேமுலாவின் தாய் ("பாரதமாதா" என மோடி
உச்சரித்த வார்த்தைகளை புறக்கணித்தவர்) ராதிகாவின் கேள்விகள் :
(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமக்குழு உறுப்பினர் தோழர்
பிருந்தா காரத் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்.
தமிழில்: "விஜயசங்கர் ராமச்சந்திரன்"

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பாராளுமன்றத்தில்
ரோஹித் வேமுலாவின் தற்கொலை தொடர்பான விவாதத்திற்கு பதிலளித்துக்
கொண்டிருந்த நேரத்தில், வேமுலாவிற்கு நீதி வேண்டும் என்று கோரி
மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் டெல்லியிலுள்ள இந்தியா கேட்டில்
நடந்தது.
ரோஹித் வேமுலாவின் தாயார் ராதிகாவும் அங்கிருந்தார். ஸ்மிருதி இரானி
'"ஒரு குழந்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுவது எவ்வளவு"
கண்டனத்திற்குரியது என்று ஸ்மிருதி இரானி மக்களவையில் பேசிக்கொண்டிருந்த
அதே நேரத்தில், ராதிகா வேமுலாவைப் பிடித்து தலைநகரின் மையப்பகுதியில்
இருந்த ஒரு காவல்நிலையத்திற்குக் கொண்டுசென்றனர் காவலர்கள்.
ஸ்மிருதி இரானியின் நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, சோகத்தில்
வாடும் தாயான ராதிகாவின் வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தன:
"நான் ஸ்மிருதி இரானியைச் சந்தித்து 'எந்த அடிப்படையில் என் மகனை
தேசவிரோதி என்று அறிவித்தீர்கள் என்று கேட்கவேண்டும்? என் ரோஹித்தும்
மற்ற தலித் மாணவர்களும் தேசவிரோத தீவிரவாதிகள் என்று உங்கள் அமைச்சகம்
எழுதியிருக்கிறது."
"அவன் தலித் இல்லை என்று நீங்கள் சொன்னீர்கள். அவன் பொய் சான்றிதழ்
பெற்றுவிட்டான் என்று குற்றம் சாட்டினீர்கள். நீங்களே பொய்
சான்றிதழ்களைப் பெற்றதனால் மற்றவர்களும் அப்படி இருப்பதாக நீங்கள்
நினைப்பதாகச் நான் சொல்லலாமா? நீங்கள் என் மகனின் உதவித்தொகையை
நிறுத்திவிட்டீர்கள். பல்கலைக்கழகம் அவனை இடைநீக்கம் செய்யப்
பணித்தீர்கள்
"நீங்கள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்; ஆனால் கல்வியின் மதிப்பு
உங்களுக்குத் தெரியவில்லை. ஒரு தலித் பிஎச்டி ஆராய்ச்சி மாணவன் என்ற
கட்டத்தை அடைவது எவ்வளவு கடினம் என்று உங்களுக்கு ஒருபோதும்
தெரியப்போவதுமில்லை, புரியப்போவதுமில்லை . அந்த நிலையை அடைவதற்குப் பட
வேண்டிய கஷ்டங்களையும், போராட்டத்தையும், கண்ணீரையும், தியாகத்தையும்
உங்களால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது. நான் 26 வருடங்களாகக்
கட்டியதை நீங்கள் மூன்றே மாதத்தில் தகர்த்துவிட்டீர்கள். நான் என்
ரோஹித்தைப் பற்றிப் பேசுகிறேன். அவன் 26 வயதில் இறந்துவிட்டான்.
"ஸ்மிருதி இரானிக்கு நான் இதைச் சொல்லவிரும்புகிறேன். நான் மோடிஜியிடம்
இதைக் கேட்கவிரும்புகிறேன். "ஐந்து நாட்கள் நீங்கள் மவுனமாக
இருந்தீர்கள். பிறகு நீங்கள் அம்பேத்கர் பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோது
மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு இடையே "பாரதமாதா தன் மகனை
இழந்துவிட்டாள்"என்று சொன்னீர்கள்."
"உங்களுடைய சொற்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இருந்தால் அந்த மகனை தேசத்
துரோகி என்று சொன்னவர் மீது நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உங்கள்
அமைச்சர் சொன்னது சரியா? அப்படியென்றால் ஒரு தேசத்துரோகியை பிரதமர்
இந்தியாவின் மகன் என்று எப்படிச் சொன்னார். யார் இந்தக் கேள்விகளுக்கு
பதில் சொல்வார்கள்?"

Comments

 1. பள்ளிப் படிப்பை தாண்டாத படிக்காத தற்குறி கல்வி அமைச்சராம்; பண்டாரக்கட்சிக்கு ஜாதி மதம் மட்டும் இருந்தால் போதும். எங்கே சென்றார்கள் நடுநிலைமை வியாதிகள் என்ற ஜாதி மத வெறியர்கள்.

  ReplyDelete
 2. தலித்துகளுக்கு என்ன நடந்தாலும் நடுநிலை வாதிகளின் செவிகள் அடைக்கப்பட்டு கேளா செவியாகிவிடும்

  ReplyDelete
 3. அந்த நடுநிலை வியாதிகளைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் விரைவில் சிக்குவார்கள்.
  தங்கள் வருகைக்கு நன்றி!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்