06/01/2016

அவள் கட(த்தி)ந்து போகிறாள்இதயமானது இயல்பான
துடிப்பிலிருந்து
சற்றே விலகிவிட

கண் சிமிட்டல்கள்
கடன் வாங்கிக்
கொண்டிருந்தன
அதீத
எண்ணிக்கையிலான
உறுத்தல்களை

இடம் மாறி
பயணிக்கிறது
ரத்த நாளங்கள்
அதிவேகமாய்

நரம்புகள் மட்டும்
இழுத்துக்
கொள்ளவில்லை
இருக்கும்
பச்சைகள் அப்படியே

வியப்பின்
குறியீடுகளாய்
அனல் காற்றிலும்
உதடுகளின்
புரியாத மொழியினை
பற்கள் தட்டச்சு அடிக்க
அதன் வேகம்
குதிரைத்திறனை
பின்னுக்குத்தள்ளி

செவியில் ஏதோ
இசை நுழைய
நாசி துளைத்த
வாசத்தை
உணர்கையில் மட்டுமே
நான் உயிரோடு
இருப்பதை
உறுதிசெய்கிறேன்

மொத்தமாய்
எனை கவர்ந்திழுக்கும்
பொன்மேனி காந்தமவள்
கடந்து போகிறாள்
என்னை

எதுவும் நடக்கலாம்
அவள் என்னை
கடந்து போகையிலும்
அவள் கண் எனை
பார்க்கையிலும்
மெல்லிய
இதழ் சிரிப்பினை
எனக்காகவே
உதிக்கையிலும்
எதுவும் நடக்கலாம்

கடந்து கடந்து
எனை கடத்தியும்
போகிறாள்
காதலை கசிய
விட்டபடியே

அந்த தருணம்
ஒருவேளை என்
எதிராளிகளுக்கும்
உதவலாம்
எனை வீழ்த்துவதற்கு,,,

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

ரபேல் ஊழல் முழு அறிக்கை

ரஃபேல்ஊழல் : அருண்ஷோரி,யஷ்வந்த்சின்கா, பிரசாந்த்பூஷன் வெளியிட்ட முழு அறிக்கை ! ரஃபேல் விமானங்களை ஏன் அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்...