தோழர் கோவன் பாடிகாட்டிய பாடல்

மதுவிலக்கு,டாஸ்மார் எதிர்ப்பிற்காக ஆளும் பாசிஸ ஜெ அரசின் கைது
நடவடிக்கையால் சிறைசென்ற தோழர் கோவன் இன்று பிணையில்
வெளிவந்தார்,செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் எங்கோ அடையாளமற்று கிடந்த
மகஇக இயக்க புரட்சிப் போர்முனைகளை வெளிச்சத்தில் கொண்டு வந்து
பட்டிதொட்டியெல்லாம் பரவச் செய்திட்ட அம்மா அவர்களுக்கு நன்றி! என்றார் .
ஆனால் அப்படியில்லை மகஇக வை இணைய சமூகத்தில் அறியாதவர்களே இல்லை "வினவு
தளம்" அப்படியான ஓர் முற்போக்கு இணைய வெற்றியை கண்டிருக்கிறது எனலாம்.
பிணையில் வெளிவந்த தோழர் கோவன் தான் சிறையிலிருக்கும் போது பாடிய பாடலை
பாடிக் காட்டினார். அந்த பாடல் முதலாளித்துவ எதிர்ப்புறுதி கொண்டதாகவே
உயிர்பெற்றிருக்கிறது.

தோழர் கோவனின் பாடல்:

ஊரெங்கும் மழைவெள்ளம்
தத்தளிக்கிறது
தமிழகம்

இது யாரோட குத்தம்னு
கேட்காத சிறைவாசம்!

சாக்கடை ஊட்டுக்குள்ளே
போக்கிடம் ஏதுமில்லே…
பாக்க வந்த அம்மாவோட
காரு கூட நனையவில்லை..

பொங்கித் தின்ன வழியில்லை
பொட்டலம்தான் கதியில்லை

போயஸ் ராணி ஆட்சியில
போட்டோவுக்கு குறைச்சல் இல்ல…

தீபாவளி சரக்கு ஓட்ட திட்டம் 400 கோடி
தியேட்டரை வளைச்சு போட திட்டம் 1000 கோடி
தண்ணியில மிதந்து மிதந்து தமிழகமே டெட்பாடி

தடுக்க என்ன திட்டம்னு கேட்காதே விழும்
"தடியடி"

ஆழமான சிந்தனையால் பாமரனுக்கும் பக்குவமாகும் இப்பாடல்.

Comments

 1. சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
 2. அருமை நண்பர்

  ReplyDelete
 3. தங்கள் வருகைக்கு நன்றி Jeevalingam Yarlpavanan Kasirajalingam தோழர்!

  ReplyDelete
 4. தங்கள் வருகைக்கு நன்றி mani தோழர்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்