தோழர் கோவனுக்கு பிணை உத்தரவு

தமிழகத்தில் சர்வ சாதாரணமாகிப்போன பலசரக்கு மளிகை கடைகளைப் போல டாஸ்மாக்
எனும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தி அதன்மூலம் வருமானம் ஈட்டி அப்பாவி
மக்களை குடிப்பழகத்திற்கு அடிமையானதை தடுத்தும், தடை கோரியும், எழுந்த
எழுச்சிமிகு முழக்கங்களை பாடல்களாக கொடுத்து பறை இசையால் அரசை நடுங்கச்
செய்த தோழர் கோவன் தற்போது பிணையில் வெளிவருகிறார். "மூடு டாஸ்மாக்கை
மூடு", "ஊத்திக் கொடுத்த உத்தமி" போன்ற பாடல்களுக்காக கடந்த 30.10.2015
வெள்ளி அன்று, அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் கைது
செய்யப்பட்டார்,தோழர்­ கோவன், அவர் மீது பிணையில் வெளிவரமுடியாத வழக்குப்
பிரிவுகளை போட்டு சிறையில் அடைத்த ஆளும் அதிமுக அரசினை எதிர்த்து
பொதுவெளியிலும், இணையத்திலும் பல்வேறு எதிர்ப்பலைகள் உறுவானது என்பதை நம்
கண்முன்னே பார்த்தோம், அதே வேளையில் தோழர் கோவனை கைது செய்து சிறையில்
அடைத்துவிட்டு , பண்டிகை தினமான தீபாவளியன்று ரூ 350 கோடி வரையிலான
இலக்கினை டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இட்டு, அதையும் வெற்றிகரமாக
இலக்கினை அடைந்து விட்டது ஆளும் அதிமுக அரசு. இதற்கு உடந்தை வெறும் அரசாக
மட்டும் இருக்க முடியாது ஒட்டு மொத்த தமிழினமும் தலைகுனிந்தே நிற்க
வேண்டும், தன் உடலை வருத்தி,குடல்வெந்து , முளையின் சிந்திக்கும்
திறனற்ற, உற்றார் உறவினர்களையெல்லாம்,க­ட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் என
அனைத்தையும் இழந்து அரசுக்கு ரூ 310 கோடியை வாரி வழங்கிய வள்ளல்
பெருங்குடி தமிழக மக்களை உண்மையில் பாராட்டியே ஆக வேண்டும். அரசின்
டாஸ்மாக் 350 கோடி இலக்கு வைக்கப்படும் போதெல்லாம் தோழர் கோவன் சிறையில்
பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தார் என்பதை இங்கே
சுட்டிக்காட்டுதல் அவசியமாகப்படுகிறது.இதற்கிடையே சர்வாதிகார
முதலாளித்துவம் ஒரு கட்டத்துக்கு மேல் செல்ல முடியாது , அதையும் மீற அதன்
முயற்சிகளின் பலன்களை அனுபவிக்கும் சக்தியை அது இழந்து விடுகிறது
என்பதற்கான உதாரணமாக இன்று தோழர் கோவனுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை
அமர்வு நீதிமன்ற நீதிபதி என்.ஆதிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வழக்கின் நகர்வுகளுக்காக பாடுபட்ட முற்போக்காளர்கள் மற்றும் நிதியுதவி
அளித்து வழக்கின் செலவினங்களை சரிசெய்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி
தெரிவிக்க கடமைபட்டுள்ளோம். மதுவிலக்கு,டாஸ்மாக் கடை அடைப்பு, பறை இசை
முழக்கம், நாட்டுப்புற பாடல்கள் விழிப்பு , என இனி ஆதிக்கத்தை அழிக்கவல்ல
அனைத்து குரல்களும் மேலெழும்பியே இருக்கும், முதலாளித்துவ வர்க்க
வேரறுப்பு என்பதை வேர்வையில் நனைந்த சிவப்புடைகள் எடுத்துரைத்த வண்ணமே
இருக்கும் அதன் பயணங்களை யாராலும் தடுக்கவும் முடியாது , தடைபோடவும்
முடியாது,சிறையில் இட்டாலும் சிவப்பு என்றுமே மழுங்காது, இது
மார்க்ஸிய,லெனினிய, அம்பேத்கரிய பாதை என்பதை ஆளும் சர்வாதிகரங்கள்
சீக்கிரம் உணரும்.வழக்கும் விரைவில் இல்லாநிலையதாக மாறும்.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்