மழைவெள்ளத் தமிழகம்

இவ்வாண்டின் தீபாவளிக்கு முந்தைய தினங்களில் இருந்து ஆரம்பமான
தொடர்மழையின் தாக்கம் மிகுந்த அச்சத்தை மக்கள் மத்தியில்
ஏற்படுத்திவிட்டிருக்­கிறது. முதல் மரணக்குவியலான கடலூர் மாவட்டத்தில்
மட்டும் 19 உயிர்கள் அதன்பின்னர் அடுத்தடுத்து
கரூர்,சென்னை,திருவண்­ணாமலை, என அனேக மாவட்டங்களில் அதிகரித்த
வண்ணமிருக்கிறது பலிகளின் எண்ணிக்கை.எல்லையை மீறி சென்னை முழுதும்
தண்ணீரில் மிதப்பதாக செய்திகள் தருகின்றன ஊடகங்கள். அதற்கென்ன எல்லைகள்
யார் வகுத்தார்கள் என்று மட்டும் தப்பித்தவறி கூட
உரைக்க மறுத்துவிடுகிறார்கள்­. இயற்கையின் விதிகளுக்கு எவ்வித எல்லைகளும்
இல்லை. எல்லை மீறிய அரசுகளும்,பொதுமக்களு­ம் ஏகபோக முதலாளிகள் வர்க்கமும்
அழிவுக்கு பொறுப்பேற்க வேண்டும்.கடந்த ஐந்தாறு வருடங்களாக உலக
வெப்பமடைதலையும்,ஏரிக­ள்,குளங்கள்,ஆறுகள் போன்ற நீர்நிலைகளின் மீதான
ஆக்கிரமிப்புகளையும் எடுத்துரைத்து, அதற்காகவே பல்வேறு வழக்குகளையும்
சந்தித்து கொண்டிருக்கும் "பூவுலகின் நண்பர்கள்" இயக்கத்தினை மறந்து போன
சமூகம் மீண்டும் மீண்டும் தவறு இழைத்துக்கொண்டே இருக்கிறது அவ்வியக்கம்
தரும் சமூக சுற்றுச்சூழல் விழிப்புணர்வினை ஏற்க மறந்தும் மற்றும் ஏற்க
மறுத்தும். "வருமுன் காப்போம்" என்கிற தத்துவத்தை நாம் என்றோ அழித்தே
விட்டோம் என்பதுதான் உண்மையாக இருக்கிறது. வடகிழக்கு பருவமழை நன்றாக
உணர்த்திவிட்டுச் சென்றிருக்கிறது இங்கே திட்டங்கள் எவ்வித
முன்னெச்சரிக்கைகள் ஏதுமின்றி செயல்படுத்தப்படுகிறத­ென்று,,, இதன் மூலம்
கேள்விக்குறியினை தாங்கி நிற்கிறது "நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம்"
மத்திய அரசின் இத்திட்டத்தின் முதன்மை பணி ஏரி குளங்களை தூர்வாரி
செம்மைபடுத்த வேண்டும் என்பது, ஆனால் செயல்திட்டமோ ஏரி குளங்களில் வெறும்
நடைபாதை வழி மட்டுமே உறுவாக்கி வைத்திருக்கிறார்கள்.­ எங்கும் எதிலும்
தூர்வாறப்படவில்லை. மத்திய அரசின் திட்டமாவது நடைபாதையை உறுவாக்கியது
மாநில அரசோ எதற்கும் முன்வராத போக்கையே கடைபிடித்து வந்தது. சென்ற திமுக
ஆட்சியில் ஏரி,குளங்கள் தூர்வார திட்டப்பணிகள் செய்யப்பட்டிருந்தது.­
அடுத்து வந்த தற்போது ஆளும் அதிமுக அரசானது அப்பணியினை தொடராமல் அப்படியே
கிடப்பில் போட்டது. நான்கரை ஆண்டுகளாக எந்த ஏரி குளங்களும்
தூர்வாறப்படவில்லை, இதற்கிடையே அரசும்,முதலாளித்துவ வாதிகளும் இருக்கின்ற
ஏரி குளங்களை ஆக்கிரமித்து தங்கள் வணிகத்தை செம்மைப்படுத்துவதை முழுநேரப்
பணியாகவே செய்து வந்துக்கொண்டிருக்கிற­து.இன்று சென்னை மழைநீரின்
வெள்ளத்தால் மூழ்கப்பட்டுள்ளது என்று புலம்பும் அனேகர்கள் நீராதார போரூர்
ஏரி மீதான ஆக்கிரமிப்பு அகற்றப் போராட்டத்தை ஒரு கேலி செய்யும்
கண்ணோடத்தில் கடந்து சென்றது. அப்போராட்டத்தை மெட்ரோ ரயில்திட்ட திறப்பு
விழாவால் சாதூர்யமாக மூடி மறைத்து அரசும் வெற்றி கண்டது. வெறும் ஆளும்
அரசை மட்டுமே குற்றம் சுமத்துவது பொதுமக்களின் கையாளாகாத தனத்தையை
உணர்த்திவிடுகிறது. இயற்கையாகவும்,மனித உழைப்புகளால் செயற்கையாகவும்
உறுவாக்கப்பட்ட பல்வேறு ஏரி,குளங்களை ஆக்கிரமித்து ,ஆற்று மணல் மூலம்
அவ்வாக்கிரமிப்பிலேயே­ வணிக வளாகங்கள்,குடியிருப்­புகள்,விற்பனை மனைகள்
என உறுவாக்கியவர்கள் நாமாகத்தானே இருக்கின்றோம். இன்று இருக்கும் பல்வேறு
அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள்,கல்வி நிறுவனங்கள், ஏன்
பேருந்து நிலையங்கள் உட்பட அனைத்தும் ஏரி குளங்களை ஆக்கிரமித்து
திருடப்பட்ட ஆற்று மணலால் உறுவாக்கப்பட்டது என்பதை யாராலும் மறுத்துவிட
முடியாது. இன்றைய பொத்தேரியாக அடையாளப்படும் ஒர் பல்கலைக்கழக நிறுத்தம்
முன்னொரு காலத்தில் பத்தேரி (பத்து ஏரி) என்பதாகத்தான் இருந்தது என்கிற
வரலாற்றை மூடியே வைத்து விட்டோம். உண்மையில் சென்றகால "தானே"
புயல்மழையின் சீற்றத்தை விட மிகக்குறைவானதே இந்த வடகிழக்கு பருவ மழை.
அப்போதில்லாத அழிவும்,வெள்ளமும் இப்போது இருக்கிறதென்றால் ஆற்றுமணல்
திருட்டும்,ஏரி குளங்கள் ஆக்கிரமிப்பும் பெருகிவிட்டதன் சாட்சியாகவே
இருக்க முடியும். வடகிழக்கு பருவ மழையினால் ஒரு மிகப்பெரிய சந்தோஷம்
என்னவெனில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளம்
கரைபுரண்டோடுகிறது. ஆனால் அதேவேளையில் மழைநீர் வீணாக கடலில் கலப்பதை
தடுக்க எவ்வித நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்படவில்லை
கர்நாடகாவில்,கேரளாவி­ல் பாசண நீருக்காக கையேந்துகிறோம் , நமக்கு இயற்கை
கொடுத்த மழைநீரை மட்டும் வீணாக கடலில் கலக்க விடுகிறோம். எவ்விதமான
செயல்களுக்கும் முன்னேற்பாடு நம்மிடையே இல்லை என்பது மிகவும் வேதனைப்பட
வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

Comments

 1. வருத்தப்பட வைக்கும் உண்மை

  ReplyDelete
 2. ஆம் தோழர்!
  தங்கள் வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 3. அரசு செவி சாய்க்குமா..... பார்ப்போம்.

  ReplyDelete
 4. எதிர்பார்ப்போடு மக்கள்!
  தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்