நமக்கு நாமே "டெங்கு காய்ச்சல்" தீர்வழிகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்திருக்கும்­ அதே வேளையில்
"டெங்கு காய்ச்சல்" நோயும் அதிதீவிரமார பரவிக்கொண்டிருக்கிறத­ு. இதன்
ஆபத்துகளையும் அதற்கான தீர்வழிகளையும் முனைப்புடன் எடுத்துச் செல்லும்
கடமை நமக்கிருக்கிறது. பொதுவாக டெங்கு காய்ச்சலை பரப்புவதில் முக்கிய
பங்காற்றிக் கொண்டிருப்பது ஒருவகையான "கொசு" ஆகும் . இக்கொசு
அதிகாலையிலும்,பகல் நேரங்களிலும் மட்டும் மனிதனை கடித்து துன்பறுத்தும்.
இக்கொசு எங்கேயிருந்து உறுவாகிறது? கழிவுநீர்த் தேக்கங்களிலும்,
கழிப்பொருட்களில் தங்கியிருக்கும் பலநாள் நீர்த்தேக்கங்களிலும்­ தனது
இனப்பெறுக்கத்தை இக்கொசு உறுவாக்கிக்கொள்கிறது­. கருப்பில் வெள்ளைநிறக்
கோடுகளை கொண்டிருந்தால் அது டெங்குவைப் பரப்பும் கொசுவென்று அறிக,,, இதன்
தாக்கத்தால் காய்ச்சல்,மூட்டுவலி,­சிவந்த கொப்பளங்கள்,உடல் அசதி, தலைவலி
, போன்ற உடல் உபாதைகளும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்தால் உயிருக்கே
ஆபத்தாகவும் அமைந்து விடுகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில்
ஆளும் அதிமுக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் டெங்குவை தமிழகத்தில்
கட்டுக்குள் கொண்டுவந்து விட்டோமென பொய்யான உரையினை நிகழ்த்தினார்.
நிகழ்த்தப்பட்ட கூட்டுப் பொய்களில் இதுவும் ஒன்றாகும்.உண்மைநிலை
முற்றிலுமாக மாறியிருக்கிறது. சராசரியாக ஒரு மக்கள் வாழ் பகுதி இடங்களில்
நான்கு அல்லது ஐந்து குடும்பங்கள் டெங்கு காய்ச்சலால்
பாதிப்படைந்திருக்கிற­ார்கள். எங்கள் பகுதி அரசு மருத்துவமனையினை அனுகி
வினவியபோது ஒருநாளைக்கு ஐந்து நபர்களாவது டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு
வருவதாக தெரிவித்தார்கள். கேட்டதும் பெரும் அதிர்ச்சி, ஒரு கொடிய நோய்
நம்மை தாக்கிக் கொண்டிருக்கிறது என்றால் முதலில் நாம் அனுகுவது அரசாங்கதை
எனும் சூழலிருந்து வெளியேறி "நமக்கு நாமே" வருமுன் காப்போம் முறைகளை
கையாள்வது ஆகச்சிறந்ததாகும். அதன்படி கூடுமானவரை அரசிடமிருந்து
எதிர்பார்ப்புகளை தவிர்த்து நாமே களத்தில் இறங்க வேண்டியது நமக்கு
அவசியப்படுகிறது. அதற்கு முதலில் தங்கள் பகுதியிலுள்ள நீர்த்தேக்கங்களை
சுத்தமாகவும், தேவையற்ற நீர் தேங்கியிருந்தால் அதனை வெளியேற்றவும் செய்ய
வேண்டும். மேலும் குப்பை கூலங்களில் தண்ணீர் தேங்கிடா வண்ணம் அவற்றை
அப்புறப்படுத்தல் நல்லது. வடகிழக்கு பருவ மழை வேறு நமக்கு
பெரும்சவாலாகத்தான் இருக்கிறது. அதற்காக மழை வேண்டாமென்று ஒதுக்கி விட
முடியுமா? இல்லை வரும் மழையினை தடுக்கத்தான் முடியுமா?
முடியாதுதானே! மழையும் நமக்கு அவசியமாகிறது. ஆகவே மழைநீர் தேங்கி நிற்காத
வண்ணம் நாம் நம் சுற்றுப்புறத்தை செம்மைபடுத்துதல் கடமையாக இருக்கிறது
அதுவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு வழியாகவும் இருக்கிறது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையினை
அனுகி அங்கு கொடுக்கப்படும் "நிலவேம்பு" கசாயமும் தொடர் மருத்துவ
முறைமைகளையும் கடைபிடிக்க வேண்டும். நம் குடியிருப்பு பகுதியிலும்,
கழனியிலும் நிலவேம்பு கிடைக்கலாம் அதனை அடையாளங்கண்டு உணவாக்குதல்
வேண்டும். மேலும் அரசினானது தற்போது தேக்கத்தொட்டிகளிலும்­ கிணறுகளிலும்
டெங்குவினை பரப்பும் கொசுவினை அழிக்கும் மருந்தினை தெளிக்க குழுக்களை
அமைத்திருக்கிறது. அவர்களுக்கு துணையாகவும் உதவித்தேவைகளை பூர்த்தி
செய்தும் நிரந்தரமாக டெங்குவினை நாமே அழித்திடுவோம், வளமான வாழ்வை
முன்னெடுப்போம்.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்