தேவர் ஜெயந்தியும், தகர்க்கப்படாத கம்பி வேலி சிறைக்கூண்டும்,,,

ஒருவழியாக தேவர் ஜெயந்தியும் அதனைத் தொடர்ந்து குருபூசையும் நடந்து
முடிந்து விட்டது . இதற்கிடையில் சில சர்ச்சைக்குரிய இடங்களாக அவதானித்த
நமது ஜெ அரசு தேர்த்தெடுத்த இடமோ சேரி அல்லது காலனியாகத்தான்
இருந்திருக்கிறது. வழக்கம் போல முத்துராமலிங்க தேவரின் 108-வது ஜெயந்தி ,
53வது குரு பூஜை விழாவில் அவ்வளவாக 108 ஆம்புலன்ஸ்களும், மற்ற அவசர ஊர்தி
வாகனங்களும் இயங்காமல் இருந்ததே ஒரு மனநிறைவை அளிந்திருக்கிறது. ஒரு சில
இடங்களில் வன்முறைச் சூழல் இருந்தாலும் ஆதிக்க வெறியர்களை அமைதியாக்க
இயலாமல் தமக்கே உரித்தான அதிகாரத்தால் அடங்குங்கள் காலனியாட்களே என்கிற
சத்தத்தால் மற்றொரு தரப்பினரை மட்டும் அச்சுறுத்தியிருக்கும்­ ஜெ
அரசுக்கு ஒரு நன்றியையும் தெரிவித்து விட வேண்டும் அவர்களின்
சார்பாகவும், சிறுபான்மையினர் சார்பாகவும்,,, அதுமட்டுமல்லாமல் தேவர்
சாதி அமைப்புகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இளைய பட்டாளம் காவி
உடைகள் அணிந்து பெருந்திரளாக வந்து ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த தேவர்
சிலைக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்­கள். நல்ல முன்னேற்றம் . இனி
அவர்களாகவே வளர்த்தெடுக்கப்படுவார்கள் ஆதிக்கர்களாக,,,
இந்த விஷயமெல்லாம் நமக்கெதுக்கு? ஆண்டப்பரம்பரை புகழ் பேசுவோர்
அடக்கியாள்வதே முறையென்று தரப்புகள் நம்மை எதிர்க்க முற்படுமென்று
விட்டுவிடவும் முடியவில்லை, நினைவுபடுத்திச் சென்றது என் முகபுத்தக
ஓரண்டுப் பதிவு. கடந்த ஆண்டு (9.2.2014) தமிழக முதல்வர் ஜெ அவர்கள்
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவித்து கவுரவித்தார்.
அதே தினத்தில் ஓர் ஆணை ஒன்றையும் பிறப்பித்து விட்டுத்தான் அக்கவுரவ
நிகழ்வு நடைபெற்றது . எதற்கிந்த ஆணையென்று அன்றைய சிந்தனையாளர்கள் யாரும்
எவரும் வாய்திறக்கக்கூட இல்லை பலருக்கு அது தெரிந்திருக்கக்கூட இல்லை,
ஆணை என்னவெனில்

"தமிழகத்தில் எங்கெல்லாம் அம்பேத்கர் சிலைகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம்
சிலைகளுக்கு கம்பி வேலி (சிறை) அமைக்கப்படுமென்பதே"

இதனை கண்டித்து எழுதிய பதிவு மீண்டும் மீண்டும் பார்வைக்கு வந்துபோகிறது.

அந்தப் பதிவு -

யாருக்கு வேண்டுமானாலும் தங்கத்தில் கவசம் வேய்த்து, மாலை மரியாதைச்
செய்யுங்கள் அது உங்களது விருப்பம் ஆனால் இந்தச் சிறைக்கூண்டில் கைதியாக
இருக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் எனும் மாமேதை இவ்வுலகில் வீற்றிருக்கா
விட்டால் உங்களது நாடும், நாட்டு மக்களும் உங்களது அரசும், அரசாட்சியும்
மண்ணோடு மண்ணாக
மட்கிப்போயிருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள் அன்று அந்த
அரசியலமைப்புச் சட்டம் இல்லையென்றால் இன்று இந்தியாவே இல்லை என்பதை
ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் அரசமைப்புச் சட்டத்தில் சில குறிப்பிட்ட
ஷரத்துக்களை தலித் இன மக்களுக்காக
ஒதுக்கியது தான் அவர் செய்த குற்றமெனில் அவ்வொதுக்கப்பட்ட மக்களுக்காக
இந்நாடும் நாட்டுமக்களும் என்ன செய்து விட்டீர்கள் . அதிகப்படியான
தலித்தின அடக்குமுறைகளைத்தானே கட்டவிழ்த்து விட்டிருந்தீர்கள் .
அதற்காகத்தான தலித்தின விடுதலைக்காக அவர் வெகுண்டெழும் சூழலை
உறுவாக்கியிருந்தது . அவரின் அனுபவமே அதற்கு சாட்சியாக நிற்கின்றதே!
சரித்திரத்தை
புரட்டினால் 3000ஆண்டுகளுக்கு முன்பே வேர்விட்டிருந்த அந்தச் சாதியத்தின்
பெயரால் இன்றும் கொடுமைகள் ஏற்பட்டுள்ளதை உங்களால் மறுக்கமுடியுமா?
புத்தனுக்கு அடுத்தப்படியாக
உலகிலேயே அம்பேத்கருக்குத்தான்­ அதிகச் சிலைகள் உள்ளது என்பது பெருமை
என்றாலும் அதே நிலையில் உலகிலேயே அதிகமாக சேதப்படுத்தப்பட்ட மற்றும்
கம்பிவேலி சிறை கூண்டில் அடைக்கப்பட்ட தலைவர் அம்பேத்கர் என்பது
வெட்கக்கேடல்லவா,,,
எப்படிபட்ட தலைக்குனிவுச் சம்பவம் இது, ஏன் இந்த நிலை? அவர்
தாழ்த்தப்பட்டவர் என்பதாலா? அப்படி ஒரு நோக்குக்கண் பார்வை இருக்குமாயின்
இந்திய அரசியலைப்புச் சட்டத்தினை இன்று ஒரு தனிமனிதனால் உறுவாக்க
முடியுமா? என்றச் சவாலை ஏற்க இந்த அரசால் முடியுமா?
எங்கும் சாதியம் எதிலும் சாதியமென்றால் அச்சாதியத்தை நிலைநிறுத்தும்
ஆளும் அரசு எப்படி ஜனநாயக அரசாக அமைந்து விடும். உண்மையில் இந்தியா அல்லாத
வேற்று நாட்டில் அம்பேத்கர் பிறந்திருந்தால் இந்த மனிதர் உலக வரலாற்று
நாயகர் என்று புகழாராம் சூட்டியிருப்பார்கள்.­ முதலாம் வட்ட மேசை
மாநாட்டில் இங்கிலாந்து பத்திரிக்கைகளுக்கு அடையாளப்பட்ட அம்பேத்கருக்கு
இந்திய அரசும் தமிழக அரசும் கொடுக்கும் மரியாதை கம்பிவேலி சிறைக்கூண்டு.
உலகத்தலைவரின் சிலைக்கு அவமானம் தேடித்தந்தது தான் ஆளும் இந்திய
அரசிற்கும் ஆளும் தமிழக ஜெயலலிதா அரசிற்கும் பெருமையென்றால் இது
சிறுபான்மை மக்களுக்கெதிரானதாக அல்லவா அமைந்து விடுகிறது.
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தக்கத்தால் கவசமும் பூமாலையும் போட்டு
அர்ச்சனை செய்து அவரை தலைவராக ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கும் ஜெ அரசு
அதை விட மக்களின் உள்ளங்களில் குடிகொண்டிருக்கும் அம்பேத்கரை
இரும்புக்கம்பிகளால் பூட்டியுள்ளது. முத்துராமலிங்கத் தேவருக்கு "மாபெரும்
தலைவர்" என்ற அந்தஸ்த்தை கொடுக்கும் அதே வேளையில் அம்பேத்கரை
அவமானப்படுத்துவது தான் ஜெவின் சனநாயக நியாயமெனில் அம்பேத்கரைப் போன்று
ஒரு சட்ட மாமேதையை உங்களால் உருவாக்க முடியுமா? அம்பேத்கரை எப்படி ஒரு
தலைவராக பார்க்கிறார்களோ! அதே போல் தேவரை (அவர் சார்ந்த மக்கள்) பார்க்கிறார்கள்
என்பது உண்மை . அது ஆதிக்கத்தின் துடிப்பாக மாறியுள்ளது இன்று. அதே
வேளையில் முத்துராமலிங்கத் தேவருக்கு ஒப்பீடு
அம்பேத்கர் என்ற பார்வையை ஆளும் ஜெ அரசு களைக்கப்பட வேண்டும் இலண்டன்
நூலகத்தில் கார்ல்மார்க்ஸ் சிலையின் பக்கத்தில் "நூலகமே நம் தோழன்" என்று செயலிலும்
சொல்லிலும் எடுத்துக்க்காட்டிய அம்பேத்கர் சிலையல்லவா உள்ளது. சாதியைக்
கடந்து சமத்துவத்தை வலியுறுத்திய தமிழ் மண்ணில், மீண்டும் தன் செயலால்
சாதியத்தை நிலைநிறுத்தும் செயலில் இன்றைய ஆளும் ஜெ அரசு செய்யும் செயல்
வருத்திற்குரியது இதை கண்டிக்காத மக்கள் மறைமுகமாகவோ நேரடியாகவோ தங்கள்
சாதிய உணர்வை கக்குகிறார்கள் இது ஆபத்தின் உச்சம். அதுமட்டுமல்லாது மனித
இனத்தை அழிக்கும்
பாதை என்பது உணர்த்தப்பட வேண்டும்.

Comments

  1. நியாயமான கட்டுரை நண்பரே...

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்