அவளொரு இளஞ்சூரியன்,,,

ஒவ்வொரு விடியலும்
விமர்சிக்கின்றது
இளஞ்சூரியனாய்
அவள் தினந்தினம்
உதயமாவதை பற்றி

சந்திரன் வெறும்
ஊமையாய் தன்னை
மறைத்துக் கொள்கிறது

பொன் நகை வேண்டாம்
பொன்னிற கூந்தலை
விரிக்கிறாள் அதன்
வீச்சம் மலர்களை
சுட்டுவிடாமல்
இதமாய் தழுவுகிறது

நிலங்களில் மட்டுமா
வெளிச்சம்
கண் கூசாமல்
அவளையே பார்த்துக்
கொண்டிருக்கும்
யுகங்கள் வேண்டி
தரிசன வரிசையில்
மனதை தொலைத்தவர்கள்

எழுந்திருக்கிறாள்
அவள்
மேலே மேலே
இன்னும் மேலே

மறையத்தான்
வேண்டுமவள்
மாலையில்
அதற்காக இப்போதே
ஓட்டமெடுக்கவில்லை
மெதுவாக மெதுவாக நடக்கிறாள்

அவளின் வருகைக்காக
உருகத்தான் வேண்டும் மெழுகு வர்த்தியும்

பூக்களாக
மலர்வதற்குத்தான்
புன்னகை
தேவைப்படும்
சூரியனாய் விரிந்தாட
அவள் மோகன
எரிதழலே
போதுமானதாக
இருக்கிறது

உயிர்ப்பின் சப்தங்களை
தன் விழியால்
சுண்டி இழுத்து
அனைவரின்
சோம்பலையும்
உடைக்கிறாள்

தெளிவென்பது
இன்னும் திரட்டி விட வேண்டும்
மனதிலெழும்
ஏக்கங்களை எட்டாத
உயரத்தில்
வைத்துவிட்டு

தலைதூக்கிப் பார்க்கையில்
பட்டாடை உடுத்தி
தலைவிரித்தாடுகிறாள்
அவளொரு இளஞ்சூரியனாய்,,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்