தோழன்,,,

அர்த்தமற்று கிடக்கும்
என் ஆன்மாவின்
அவசியத் தேவைகளை
பூர்த்தி செய்திட
துடிக்கிறேன்

அர்த்தம்
விளங்கவில்லை
வாழ்வுக்கெது
அவசியமென்று

என்னை
முந்திச் சென்றவனும்
சொல்லத் தயங்குகிறான்

முன்னேறி அவனை
வீழ்த்திவிடுவேனாம்
நான்
ஆப்பிளுக்கு தெரியாது
நீயுட்டனின் விதிக்கு
காரணம் தானில்லை
காற்றுதான் என்று

கசக்கி எறிப்பட்ட
ஒரு காகிதம் சுமக்கிறது
கவிதைகளை
யார் கண்டது
தின்றுப்போட்ட
நொருக்குத் தீனியில்
பிழிந்தெடுத்த
எண்ணெய்தான்
காகிதத்தின்
கண்ணீராகவும்
இருக்கலாம் அது
மரத்தின் புலம்பலையும்
உள்வாங்கி இருக்கலாம்

அப்படியான
தருணங்களில்
எனக்கு யார்
கற்றுத்தருவார்கள்
வாழ்க்கையை

வேண்டாம்
யாரும் வேண்டாம்
எறியப்பட்ட
காகிதக் கவிதைகள்
போல அவனை
வளர்த்தவன் நானென்று
பெருமை பேசினால்
கூடப் பரவாயில்லை

பொய் பிரச்சாரமாகிப்
போனால் எண்ணெய் கண்ணீரானது போல
என் கண்ணம் வீங்கி
அகோரமாகலாம்
முகம்

மீறி
கற்றுத்தாருங்கள்
என்று கேட்டேன்
கடைசியாக வெட்கத்தை
விட்டு

அவனிடத்தில் வெட்கப்பட்டால் உண்மை நட்பு சுட்டுவிடுமே ஒதுக்கியே வைத்தேன் வெட்கத்தை

வாழ்க்கையின்
ஆணிவேரை அவன்
பிடுங்கித் தந்தான்
தன்னை சுறுக்கிக்கொண்டு
பெருமை பேசாமல்
அகம்பாவம்
கொள்ளாமல்

அவனை மிதித்தே எழுந்தேன்
அப்படித்தான்
வெளியே வா
இன்னும் இன்னும்
முயற்சி செய்
முடிவில்லா பயணத்தை
தொடங்கு

சிறையிலிருக்கும்
அனுபவத்தை அவன்
உடைத்தெறியச் சோன்னான்
முதல் அறிவுரை
அதுதான் அதுவேதான்
முதல் பாடமுமானது

அத்தனை
வார்த்தைகளையும்
தாங்கிக்கொண்டே
அவனுக்கு நான்
மாணவனாக
எனக்கு அவன்
ஆசானாக

அர்த்தமானது வாழ்க்கை
ஒவ்வொரு
இரவிலும் பகலிலும் என்னை
புத்துணர்ச்சியுடன் எழுப்புகிறான்

வரம் பெற்றேன்
வாழ்ந்துவிட்டேன்
வாழ்க்கையின் உன்னதத்தை
உதிரிப் பூக்களாக்குதலை
விரும்பவில்லை
என்மனது

அவன் என்பது அனுபவத்தின்
முழுப் பௌர்ணமி
பின்தொடர்ந்தே
வருகிறான் என்னை
உயரத்தில் ஏற்றிவிட

நல்ல ஆசான்
நல்ல தகப்பன்
நல்ல அண்ணன்
நல்ல தம்பி
நல்ல புத்தகம்

அவன் என்கிற
என்
அருமைத்
"தோழன்"
அவன்,,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்