108 அவசர ஊர்தி சேவை ஏன் இப்படி?

மெத்தனப்போக்கு என்று எதை குறிப்பிட்டு ஒதுக்கினாலும் மருத்துவ அவசர
உதவிச் சேவையை அவ்வளவு சீக்கிரத்தில் சொல்லிவிட முடியாது. அதற்கு காரணம்
வெறும் விபத்துக்குள்ளான மனிதர்களை மட்டும் அது ஏற்றிச் செல்வதில்லை
அதையும் தாண்டி மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்கள், தானம் செய்யப்பட்ட
ரத்தம், உடலுறுப்புக்கள் என்று அனைத்து சேவைகளையும் ஓரிடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யும் முக்கியப் பணிகளை அவசர ஊர்திகள்
செய்கின்றன.அதனால்தான் அவசர ஊர்திகள் அலாரம் எழுப்பாமல்
சென்றாலும்,ஆட்களை சுமக்காமல் வெறுமனே சென்றாலும் முதலில் அதற்கு
வழிவிட்டுச் செல்ல வேண்டும் என்கிறார்கள். பார்ப்பதற்கு யாரையும்
ஏற்றிக்கொண்டு செல்லாமல் போவது போல் தெரியும், ஆனால் உள்ளே முக்கிய
உடலுருப்புக்களை எடுத்துச் செல்லும் அவசர ஊர்திகள். கடந்த இரண்டு
மாதங்களாக அரசின் இந்த 108,102 அவசர ஊர்திகளில் ஏற்பட்டுள்ள பின்னடவுக்கு
அரசே பொறுப்பேற்க வேண்டும். இந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் ஏழு
முறையாவது
"108 கு பதிலாக 044 71709009 என்கிற எண்ணை பயன்படுத்துங்கள்
தொழில் நுட்ப கோளாறு காரணமாக
108 ஆம்புலன்ஸ் எண் தற்காலியமாக
நிறுத்த பட்டு உள்ளது அதற்க்கு பதிலாக
044-71709009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள பணிந்து உள்ளார்கள்" என்கிற
அறிவிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இடைவிடாது ஏற்படும் தொழில் நுட்பக்
கோளாறுகளை சரி செய்து மக்களின் அன்றாட தேவைக்கும் அவசரகால உதவிக்கும்
அவசர ஊர்திகளை செயல்படுத்த இவ்வரசு தவறிவிட்டதென்றே தோற்றம் ஏற்படுகிறது.
ஏற்கனவே மழை வெள்ளத்தால் இயல்புநிலை பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு இது
பெரும் சிக்கலாக அமையும். அரசின் 108 அவசர ஊர்தி சேவைக்கு என்று தனியாக
எவ்வித திட்டங்களும், நிதிகளும் ஒதுக்கப்படவில்லை. நான்கரை ஆண்டு
ஆட்சியில் அதுபற்றி எவ்வித அறிவிப்புகளையும் சட்டமன்றம்
தெரிவித்ததுமில்லை. ஆனால் நிதி எங்கிருந்து வருகிறது என்று
பார்த்தோமானால் "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வளர்ச்சித் திட்டம்"
என்பதிலிருந்துதான் 108 சேவைக்கு நிதி ஒதுக்கப்படுவதாக
குறிப்பிடுகிறார்கள்.­ ஏற்கனவே இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட
நிதிகளிலிருந்து எவ்வித பலனும் அனுகூலமும் ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் அனுபவிக்கவில்லை என்றாலும், 108 சேவைக்காவது பயன்படுகிறதே
என்கிற மன ஆசுவாசப்பட்டால் அந்த பெறப்பட்ட நிதியையும் சரிவர நிவர்த்தி
செய்யப்படவில்லை எனும் போது அரசின் மீது நம்பிக்கை இழக்கும் சூழலாகிறது.
பொது மக்களின் அவசர உதவிகளுக்குத் தேவைப்படாத தொழில் நுட்பம்,அவசர ஊர்தி
சேவை இருந்தும் என்ன பயன் அளிக்கப் போகிறது. உடனடித் தேவைகளுக்காவும்
மனித உயிர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க அரசு தயாராக இல்லை
என்பதே இதன் தெளிவாக இருக்கிறது. இதில் மிகவும் வேதனையான உண்மை ஒன்றினை
பொதுமக்களும் உணரத் தவறிவிடுகிறார்கள் . அது அந்த அவசர ஊர்தி
பணியாட்களின் நிலையாகத்தான் இருக்கும். மற்றோர் உயிரை காப்பாற்ற
தன்னுயிரை பணயம் வைத்து பொது மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் அவசர ஊர்தி
ஊழியர்களின் நிலமை மிக மோசனாதாகும். வாகனம் எந்த மருத்துவமனை அல்லது
ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறுத்தப்படுகிறதோ! அவ்விடம்தான்
அவர்களுக்கான தற்கால தங்கும் விடுதியாக இருக்கிறது. ஒருவேளை
மருத்துவமனைகளில் இடநெருக்கடி ஏற்பட்டு விட்டால் இன்னும் மோசம் , ஏதாவது
சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் ஏதேனும் நீர்நிலைகள்
இருந்தால் காலைக் கடன்களை கழிக்க வேண்டிய அவல நிலையினை சந்திக்கிறார்கள்.
இதனிடையே வாகனத்தை வேகமாக செலுத்துமாறும், தாமதமானால் கடுமையான
வாக்குவாதங்களை சந்திக்கவும் ஊழியர்கள் தயாராக இருக்க வேண்டிய சூழல்.
இதில் பெண் செவிலியர்களின் அவலநிலை சொல்லிமாளாது. அந்த அளவிற்கு அவர்கள்
உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.­ குளிப்பதற்கு,காலைக்க­டன்
முடிப்பதற்கு,தூங்குவதற்கு,உணவுக்கு , என்று வெறும் சாலைகளையே
நம்பியிருக்கிறார்கள்­ பெண் செவிலியர்கள். இதன் பொருட்டே பலர் அவசர ஊர்தி
சேவைக்கு முன்வருவதில்லை. பொது மக்களுக்கு பயன்படும் வகையில் தொழில்
நுட்பச் சேவைகளை முடுக்கிவிட்டு உடனடித்தேவைக்கான மிகவிரைவு அவசர
ஊர்திகளாக தமது சேவையினை புதுப்பித்துக்கொள்ள அரசு முன்வர வேண்டும்,போலவே
அவசர ஊர்தி சேவைக்கென்று தனியாக நிதி ஒதுக்கீடலும் , வரைவு
திட்டங்களையும் அரசானது ஏற்படுத்த வேண்டும். மேலும் அவசர ஊர்தி
பணியாட்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் அவர்களுக்கான நிரந்தர தங்கு
வசதிகளையும் அரசு செய்துதர வேண்டும். வெறும் 108 அவசர சேவையினை
அறிமுகப்படுத்திய மாநிலம் என்கிற வெற்றுப் பெருமையோடு முடிந்துவிடுகிறது
எல்லாம்,,, அதையும் தாண்டி இந்தியாவின் தலைசிறந்த சேவையாக மாற்ற அரசு
நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனேகரின் எதிர்பார்ப்பாக
இருக்கிறது. இது அரசோடு நின்றுவிடாமல் பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்த
பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள கடமை பட்டவர்களாக இருக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்