பொம்மை மழைத்துளி

பார்வையில் மின்னும்
பளிங்கு கற்களைப்போல
காட்சிக்குத் தெளிவாய்
கையில் ஒரு துளி

கரங்களை விரித்துவிடு
என்போல் பல துளிகள்
உன்னை பற்றிக்கொள்ளும்
என்கிறது அந்த மழைத்துளி

புத்தம் புதியதாய்
பூமிக்கு புதுவரவாய்
தனக்கே சொந்தமான
புதுமை ஜாலம் காட்டும் பொம்மையினை கண்டதும்

பூக்கும் புதுமலராய் புன்னகையோடு அப்பொம்மையோடு விளையாடும்
மழலை நெஞ்சத்தில் நஞ்சேதும்
நாம் கண்டதில்லை
அல்லவா

அதுபோலவே
கரங்களை
பற்றிக்கொண்டது
அந்த மழைத்துளி
எனக்கது
புதுபொம்மையாய்

உடைந்த
பொம்மைக்காக
அழும் மழலையின்
அதே பாசத்தோடு
அழுது விடுகிறேன்
கரங்களில் மழைத்துளி கரையும் போது

பெய்த கனமழை
பட்டென நின்றதும்
நிசப்த பெருவெளியின்
நடுவில்
பித்தம் பிடித்தவனாய்
தனிமையை வெறுத்தவனாய்
தத்தளித்திருக்க

போனதை திரும்ப
அழைக்கிறேன்
என் கண்ணீரின் வெப்பத்தை
கார்மேகம் கண்டு
உருகத் தொடங்கியது
மீண்டும் பெருமழையாய்

எனை முழுதாய் அணைத்து முத்தத்தால்
கண்ணீரை துடைக்கிறது
முகத்தில் விழுந்த மழைத்துளிகள்

இந்த அரவணைப்பு போதுமெனக்கு இனி இம்மண்ணில்
நானொரு
நதியாய், கடலாய்,
மரஞ்செடி கொடியாய்,
தவழ்ந்து வந்து
விளையாடுவேன்
தண்ணீர் கிடைத்த
மகிழ்சியில்

புத்துணர்வோடு
பூமிக்கு படியளப்பேன்
பசி தீர்க்கும் விவசாயியாய்,,,

Comments

  1. விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

    பணம் அறம் இணையதளம்

    ஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்

    உதவிக்கு பயன்படுத்து லிங்க்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்