அந்த மூன்று நாட்களில்

பருமடைதலின் போதெழும்
அளவில்லாத சுமையை
இறக்கிவைக்க
முடியாமல் இடிவிழுந்த
பனைமரமாய் கலையிழந்து காட்சியளிக்கிறேன்
நான்

என் கவலை உணர்ந்த
ஒரே ஜீவன் நானாகத்தான் இருக்கிறேன்
அத்துணை விஷமப் பார்வையிலிருந்தும் என்னை காக்க
மண்ணை
துணைக்கழைக்கிறேன்

என் பிறப்புறுப்பில் கசிந்த ரத்தம் அப்போதுதான் காவு விடப்பட்டது
அம்மண்ணிற்கு

முதல் வயிற்றுவலி
உயிரெடுத்து உச்சந்தலை வெடிக்கையில் உணர்ந்தேன் அம்மாவின் பிரசவத்தை

அப்படியே சங்கிலித் தொடராகிவிடுகிறது
சுழற்சி
அம்மா துடிக்கையில் அவள் அம்மாவின் பிரசவத்தை நினைத்திருப்பாள் நிச்சயமாக
என்னைப்போலவே

நிஜத்தில் நானிருந்தாலும் பின்தொடரும் நிழலின் கருப்போடு ஒட்டிக்கொள்கிறேன் நான்
அந்த மூன்று நாட்களில்

நிழலே வேண்டாமென்று
சலித்துக் கொள்கிறேன்
சகதியாகிறது என்மனம்
அழுத்ததால்

புணர்புழையில் கசியும்
ரத்தத்தின் வாடையிலும்
காம வேட்டையாடத் துடிக்கும் வெறிமிகுந்த ஓநாய்களிடமிருந்து எப்போதெனக்கு விடுதலை

என்னுடையில் ரத்தக்கறை படிந்திடுமோ, பார்ப்போரின் முகம் சுளித்திடுமோ,
எனும் மிகுதி அச்சத்தில்
உடல் சுறுக்கி
நடை தளர்ந்து
மெல்ல நாஃப்கினை நாடிச்செல்கையில்

அங்கேயும் பார்வைகள்
பலவிதமாய்
தீண்டத் தகாதவளாகிறேன்
நான்

என்னுயிரை ஆடையால் மறைத்து திளைக்கச் செய்திருந்தாலும்

அதனுள்ளிருக்கும்
வெற்றுடம்மை வேவுபார்த்து பிய்த்தெடுக்கும் கழுகுகளின் கண்களில்

என் பிறப்புறுப்பில்
வழியும் ரத்தச் சுவடுகள்
ஒட்டித்தானிருக்கின்ற­து

யாவரும் தொடரும்
காம பசிக்கான உணவை
புதைத்து வைத்திருக்கும்
புதையலா என் தேகம்

இல்லவேயில்லை
ஒநாய்கள்,கழுகுகள்
பார்வைகளை
என் பாத
செருப்புக்களால் அடித்து,
எல்லையில்லா என் பயணத்தை
தீர்மானிக்கிறேன்

புறப்படத் தயாராகும்
நேரத்தில் தடையாக்கும்
மாதவிடாய் ரத்தத்தில்
ஓவியங்களை வரைய
கருந்தேள் காத்திருந்தாலும்

எனை கொட்டும் நோக்கோடு அதன் கொடுக்கு நீட்டியிருந்தாலும்

உடைக்கத் தயாராகிறேன்
சமூக அவலமெனும் அக்கருந்தேளின் கொடுக்கை

நானும் இப்பூமியிலோர்
சக மனுஷியாகையால்,
மிதிக்கப்படாமல் என்னை
மதிக்க கேட்கிறேன்
நானும் இப்பூமியிலோர்
சக மனுஷியாகையால்,,,

Comments

 1. அந்த மூன்று நாள்கள்
  அந்த ஐந்து நாள்கள்
  ஆகவும் இருக்குமே...

  அருமையான பாவரிகள்
  சிறந்த பதிவு
  தொடருங்கள்

  'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் நடாத்தும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2015 இல்;
  DSP விஷ்ணுபிரியா பற்றியோ குமுதம் ரிப்போட்டரின் லெக்கின்ஸ் அட்டைப்படம் பற்றியோ எழுதுமாறு கேட்கப்படவில்லை.
  பணம் பற்றித்தான்... பணத்தாளைப் படமாக்கி அப்படத்திற்குக் கவிதை எழுதுமாறு தான் கேட்கப்பட்டிருக்கிறது.
  இதோ இணைப்பு: http://ootru1.blogspot.com/2015/09/2015.html

  மேற்காணும் இணைப்பைச் சொடுக்கிப் போட்டி விரிப்பைப் படித்த பின் போட்டியில் பங்கெடுங்குமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

  பாழ்படுவான் யாழ்பாவாணன்
  படம் (பணம்) பார்த்துப் பாப்புனைய
  படிப்பிக்க எடுத்துக்காட்டாய்
  குமுதம் ரிப்போட்டரின் லெக்கின்ஸ்
  அட்டைப்படத்தைக் காட்டிப்புட்டான் - அவன்
  சின்னப்பொடியன் அப்படிக் காட்டியதிற்காக
  'ஊற்று' நடாத்தும் போட்டியில்
  பணம் பற்றிப் பாப்புனைந்து
  போட்டியில் கலந்திடாமல் இருப்பது
  யாழ்பாவாணனுக்கு
  ஒறுப்பு வழங்கியதாக இருக்காது!
  ஆகையால், ஐயா!
  'ஊற்று' நடாத்தும் போட்டியில்
  பணம் பற்றிப் பாப்புனைந்து
  போட்டியில் கலந்துகொள்ளுமாறு
  பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
  இதோ இணைப்பு: http://ootru1.blogspot.com/2015/09/2015.html

  ReplyDelete
 2. அருமையான கவிதைநடைப்பகிர்வு.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்