கசியும் காதல்

மலர்களை தொடும் போதெல்லாம் உன்னை தொட்டணைப்பது போன்றதொரு உணர்வு காதல்
மயக்கத்தில் நான்,,,
____

எதை இழக்கச் சொல்கிறாய் நீ!
மறந்தும் இழப்பதென்பதை காதல் எனக்கு உணர்த்தாத பொழுது,,,
____

தனிமையில் சதுரங்கம் ஆடுகிறேன்
நான் எதுவாக வேண்டும் நீயே சொல்லிவிடேன் நினைவுகளின் ஊடே,,,
____

முத்தம் அமுதமாகாது அளவுக்கு மீறினாலும் அது நஞ்சாகாத ஒன்றாதலால்,,,
____

சாலையை கடந்தேன் எதிரில் நீ வந்தாய் உன்னை கடந்துபோக அவ்வளவு நேரம் ஏன்
தாமதமானதெனக்கு,,,
____

தாயும்,சேயும் நானாகி நின்றேன் நீயும் நானும் காதலும், காட்சியும்,
சாட்சிக்கு
வந்து நிற்க
வாழ்ந்து விடுகிறேன்
காதலோடு,,,
_____

இரவு உறக்கம் பிடிபடவில்லை
என்னை சுற்றி எண்ணிலடங்கா கனவுகள்
அத்துணையும் நீயாகி நிற்கிறாய்,,,
_____

நிலவு ஏன் மறைகிறது? கேட்கிறாய் கேள்வியாய் உனதழகால் வெட்கத்தில் அது
தன்னை மறைக்கிறதென்றேன் பதிலாய்
புதையலைத் தேடி வந்தது நம் காதல்
_____

பிரிவோம், பிரிந்தோம், மறந்தோம் என மிகச்சாதாரணமாய் கடந்து போவதல்ல காதல்
மடியில் தவழ்ந்து மனதில் நுழையும் மழலை மொழி பேசும் நம் காதல் மழையில் நனையலாம் வா!

_____

என் பேனா தோற்றுவிக்கும் ஒவ்வொரு வரிகளும் உன் பெயரை உச்சரிக்கும் கவிதைகளாக,,,
_____

நம் முத்தங்களால்
உலக யுத்தங்களை தவிர்க்கலாம்
உயிர்கள்
ஒவ்வொன்றும் இனி காதலின் மடியில் பிறக்கட்டும்
_____

கல்லடிபட்ட நதியை அரவணைக்கும்
மரங்கள் காதலிப்பதை
நம் கண்கள் உற்றுப்பார்க்க
புது நேசம் பிறந்தது அப்போது,,,
_____

உனக்காக கண்ணீரை சேகரித்து வைத்திருக்கிறேன் விரைந்து வந்து கேட்கிறது
உனக்கு முன்னே காதல்
என் கண்ணீரை,,,
_____

யாருக்கோ
நிச்சயம் செய்து விட்டார்கள் நிமிடங்களை கணக்கிடுகிறேன் எப்போதும்
பிரிவென்பது வலிதான் என்பதால்,,,
_____

உன் சிரிப்பை விலைபேசுகிறேன் தூரிகையிடம்,,,
வாங்கிக் கொண்டு வண்ணக் கோலமிடுகிறது வானத்தில்,,,
_____

அடுத்த நிமிடம்
எனை நெருங்கும்போது மறக்காமல் கொடுத்துவிடு என் மனதை ,,,
_____

அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும் அழத்தொடங்கி விட்டார்கள்,
வலுபெற்ற காதலின் வலியினால்,,,
_____

பேருந்தில் ஒரு புன்னகை நீ சிந்த
பூக்கள் புதிதாய் பிறக்கிறது
என்னைக் கடந்து செல்கிறது
அந்தக் காதல்,,,
_____

என் நிழலோடு நீயும் வருவதனால் நிழலெது நிஜமெது அறிய எனக்கு பிடிக்கவில்லை ,,,
_____

பட்டாம்பூச்சிகளிடம் உரையாடுகிறேன் உன்மீதான அன்பை அவைகளேனும் வெளிப்படுத்தாதா!
எனும் ஏக்கத்தில்,,,
______

சிகிச்சை பிரிவில் மருத்துவரின் அலோசனை
காதலை மருந்தாக்கு என்று,,,
______

தாயில்லாத குறையை தீர்த்து வைக்கிறாய் கல்லறையில் எனக்கான நட்பின் அடையாளமாய் நீ!
_____

சுவாசம் நின்று விடாமல் கடினப்பட்டு பாதுகாக்கிறேன்
நட்பை நிரூபிக்கும் முயற்சியில்
முதல் வெற்றி எனக்கு,,,
_____

Comments

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்