ஆள்காட்டி குதிரை

செவ்வக
பெட்டகத்தினுள் வெளிவராத
முத்துக்கள் போல

பூத்துக் குலுங்கும்
ஒரு பூவின் வாசம் மெய்சிலிர்க்க மேனிதனில் அவ்வாசம் ஊடுருவ

உலகம் மறந்து
உயிரை தொலைத்து நிற்கும் எதனிடத்திலும்
இருக்கிறதோர்
ஆன்மாவின் துடிப்பு

நிற்க வேண்டும் அதேயிடத்தில் என்கிறது மனம்

விடாமல் துரத்தும் அத்துணை கசப்புகளையும் அங்கேயே தேக்கிவிட
நிரம்பாத ஆசைக்கிணறுகள் அங்கே இருந்திருக்கக் கூடாதா!

அப்படியே இறக்கிவிட்டு
கிணற்றுத் தவளையிடம்
தொடாதே நீயும் மனிதனாகி மிருகமாவாய் எனும் எச்சரிக்கையினை ஏகபோகத்தில்
விடுக்க வேண்டுமென
துடிக்கும் மனதினில் உதிக்கிறது உயிர்வலி

பூக்களாவது சுதந்திரமாக பூக்கட்டும்

அடுத்தவர் சுதந்திரத்தை அழகாக பறிக்கும் ஆள்காட்டி குதிரைக்கு இங்கே என்ன வேலை

காட்டிக்கொடுத்தால்
கண்களுக்கு விருந்தாகும்
செல்வத்தை புறக்கணித்தால்

பூக்கும் மரத்தின் கழுத்தில் கோடாரியாவது பாயாமலிருக்கும்

உணர்ந்த தருணமது
உடனே நகர்ந்துவிட்டேன்
உயிரொன்று பிழைத்துக்கொண்ட
மனநிறைவில்,,,

Comments

 1. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
  http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

  ReplyDelete
 2. ரசித்தேன் நண்பரே...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்