மானைக் கொன்றால் கைது,மனிதனைக் கொன்றால்????

"மான் வேட்டை" என்றதும் உடனே நமக்கு நடிகர் சல்மான்கான் தான் நினைவுக்கு
வருவார், சிறைவாசம்,பெயில், மீண்டும் சிறைவாசம் மீண்டும் பெயிலென்று,,,
இடைவிடாது திரையுலகிலும் தலைகாட்ட சட்டமும் அவருக்கு அனுமதி
வழங்கித்தானிருக்கிறது. ஆனால் சல்மான்கானை ஒதுக்கித் தள்ளிவிட்டு
தமிழகத்தை திரும்பிப் பார்த்தால் இன்றைய செய்தியொன்று நம்மைப் பார்த்து
ஏளனம் செய்ய ,, யாருக்கும் அச்செய்தி அவ்வளவு வேகமாக பரவியிருக்கவுமில்லை
என்பது நமக்கே கொஞ்சம் தாமதமாகத்தான் புத்திக்கு எட்டுகிறது.

குமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் வனச்சரகத்தில் வனவிலங்குகள்
வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் தீவிர ரோந்துப் பணியில்
ஈடுபட்டிருந்த நேரத்தில் அங்கே "மிளா" எனும் வகையிலான மானொன்றை
வேட்டையாடி அதன் மாமிசத்தை சேகரித்துக்கொண்டிருக்கும் நால்வர் அடங்கிய
கும்பலை வனத்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர் . அவர்களின்
விவரம் வருமாறு,,,
கொற்றிக்கோடு பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் , புதுக்கடையை சேர்ந்த
கோபாலகிருஷ்ணன் , அய்யப்பன் , விழுப்புரத்தைச் சேர்ந்த மார்டின்
பிரேம்ராஜ் . இதில் கிறிஸ்டோபர் என்பவரும், மார்டின் பிரேம்ராஜ்
என்பவரும் தமிழக காவல்துறையில் பணிபுரிந்து வருபவர்கள். இருவருமே
இடைநீக்கம் செய்யப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
முக்கிய குற்றவாளியாக (A1) கைது செய்யப்பட்டிருக்கும்­ மார்டின்
பிரேம்ராஜ் என்பவர் ஆம்பூரில் இசுலாமியர் ஒருவரை விசாரணை என்கிற பெயரில்
இழுத்துச்சென்று காவல் நிலையத்திலேயே அந்நபரை அடித்துக் கொலை செய்து,
ஆம்பூர் கலவரத்திற்கு அடித்தளமிட்டவர், அச்சம்பவத்திற்காக அவரை அப்போது
இடைநீக்கம் மட்டுமே செய்திருந்தது தமிழக அரசு.
ஒரு மனிதனை அடித்துக் கொலை செய்தமைக்காக வெறும் "இடைநீக்கம்" மட்டுமே
செய்த அரசு ஒரு மானை கொன்றதற்காக கைது செய்திருக்கிறதென்றால் இங்கே
மானுக்கு காட்டப்படும் கருணைகூட மனிதர்களிடத்தில் காட்டப்படவில்லை ,
கொல்லப்பட்ட மானானது எந்தளவிற்கு துடிதுடித்திருக்குமோ­ அதே அளவிற்கு
கொல்லப்பட்ட அந்த மனிதனும் நிச்சயம் துடிதுடித்திருப்பான்­ . அந்தளவிற்கு
கொலை வெறியோடு இருக்கும்­ மார்டின் பிரேம்ராஜ் என்பவரை அன்றே கைதுசெய்து
சிறையில் அடைத்திருந்தால் பாவம் அந்த "மிளா" மானாவது பிழைத்திருக்கும்.

Comments

 1. மானைக் கொன்றால் கைது,
  மனிதனைக் கொன்றால்????
  கொடுமை கொடுமை
  நான்
  யாரிடம் சொல்லி அழுவேன்!

  புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!
  http://yppubs.blogspot.com/2015/08/blog-post.html

  ReplyDelete
 2. நிச்சயமாக தங்கள் வலைதளத்திற்கு வருகை தருகிறேன் தோழர்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்