Posts

Showing posts from August, 2015

சோசலிஸம் எதற்காக?

Image
சோசலிஸம் எதற்காக?
(ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்)

பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன்.

விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம். வானியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் சாராம்சமான நடைமுறை ரீதியான வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதுபோலத் தோன்றலாம்: இரு துறைகளையும் சார்ந்த விஞ்ஞானிகள் ஒரு வரம்புக்குட்பட்ட தொகுப்பில் அடங்கிய நிகழ்வுகளுக்கு இடையேயான பரஸ்பரத் தொடர்பினைக் கூடுமானவரைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அந்த நிகழ்வுகளின் தொகுதிக்குப் பொதுவாக ஏற்றுக் கொள்ளத் தக்க விதிகளைக் கண்டறிய முயல்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் அத்தகைய நடைமுறை ரீதியான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், பொருளாதார நிகழ்வுகள் பெரும்பாலும் அனேகக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அக்காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே மதிப்பீடு செய்வது மிகவும் கடினம் ஆகும். இத்தகைய சூழ்நிலை, பொருளாதாரத் துறையில் செயல்படும் பொதுவான விதிக…

கம்யூனிசத்தின் கோட்பாடுகள்

Image
கம்யூனிசத்தின் கோட்பாடுகள்
(ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

[கம்யூனிஸ்ட் லீக்குக்காக 1847-இல் ஏங்கெல்ஸ் இரண்டு வரைவுத் திட்டங்களை (Draft Programmes) கேள்வி-பதில் வடிவில் தயாரித்தார். முதலாவதை, ஜூன் மாதத்தில், “Draft of a Communist Confession of Faith” என்ற பெயரிலும், இரண்டாவதை, அக்டோபர்-நவம்பர் மாதத்தில், “Principles of Communism” என்ற பெயரிலும் எழுதினார். இவற்றுள் முதல் வரைவு 1968-ஆம் ஆண்டில்தான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு, 1969-இல் ஹம்பர்க்கில் வெளியிடப்பட்டது. இரண்டாவது வரைவான இந்த நூல் முதன்முதலாக 1914-இல் ஜெர்மனியில் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி இதழில் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில மூலம் 1969-இல் மாஸ்கோவில் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் முதல் தொகுதியில் 81-97 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. ஆங்கில மொழியாக்கம் செய்தவர் பால் ஸ்வீஸி என்பவர். இரண்டு வரைவுகளையும் ஒப்பிட்டு நோக்கினால், “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த இரண்டாவது வரைவு, முதலாவது வரைவின் திருத்தப்பட்ட வடிவமாகத் தோன்றுகிறது. கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாட்ட…

"தாய்ப்பால்" - சிறுகதை

Image
கொஞ்சம் கூட சலனமில்லாமல் எப்பொழுதும் போல அலார மணி அடித்தால் எழுந்து சோம்பல் முறிக்கும் மனிதர்களை போல பறவைகளின் கீச்சிடும் குரலை கேட்டுக்கொண்டே விழி திறக்கத் தொடங்கியிருந்தது விடியல்.

யாரிடத்திலும் ஏற்றத்தாழ்வுகளை காட்டுவதில்லை அது,,, அனைவருக்குமான பொதுவுடைமையாய் எழுந்திரு தோழா!! விடிகிறது காலை என்றழைக்கிறது விடியல். தினமும் தன் வேலையை தானே தொடங்கி வைக்கிறது அது,,, எல்லாரிடமும் ஏதோவொரு தொடர்பு வைத்திருக்கத்தான் செய்கிறது. துக்கமோ,மகிழ்சியோ அனைத்திலும் கலந்து கொண்டு ஆகப்பணியாற்றுதல் அதற்கு சிரமமாகப்படவில்லை,,,

அப்படியான விடியற்காலையில் எழுந்திருக்கலாமா? வேண்டாமா? எனும் அரைதூக்கத்திலும் தனக்கே உரித்தான அதிகார மொழியை அவிழ்த்து விடுகிறாள் கங்கா,,,

ஏய்!!! கலா,,, எங்கடி போய் தொலஞ்ச இங்க வாடி,,,
தோ!!! வந்துட்டன்மா,,, காபி பக்கத்துல வச்சிருக்கேன்,குளிக்­க வெந்நீரும் தயாரா கீதும்மா,டிபன் ரெடியா கீது,ஆபீசுக்கு போட்டுகினு போர துணிய கொடுத்தீங்கன்னா இஸ்திரி போட்டு வச்சிட்டுவேன்,,,கலாவின் பேச்சில் அப்படியொரு பணிவு,, பத்து வருடங்களாய் கங்காவின் வீட்டு வேலைக்காரி அவள்தான்,

ம்ம்ம்,,,எதுவுமே உனக்கு லே…

மானைக் கொன்றால் கைது,மனிதனைக் கொன்றால்????

Image
"மான் வேட்டை" என்றதும் உடனே நமக்கு நடிகர் சல்மான்கான் தான் நினைவுக்கு
வருவார், சிறைவாசம்,பெயில், மீண்டும் சிறைவாசம் மீண்டும் பெயிலென்று,,,
இடைவிடாது திரையுலகிலும் தலைகாட்ட சட்டமும் அவருக்கு அனுமதி
வழங்கித்தானிருக்கிறது. ஆனால் சல்மான்கானை ஒதுக்கித் தள்ளிவிட்டு
தமிழகத்தை திரும்பிப் பார்த்தால் இன்றைய செய்தியொன்று நம்மைப் பார்த்து
ஏளனம் செய்ய ,, யாருக்கும் அச்செய்தி அவ்வளவு வேகமாக பரவியிருக்கவுமில்லை
என்பது நமக்கே கொஞ்சம் தாமதமாகத்தான் புத்திக்கு எட்டுகிறது.

குமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் வனச்சரகத்தில் வனவிலங்குகள்
வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் தீவிர ரோந்துப் பணியில்
ஈடுபட்டிருந்த நேரத்தில் அங்கே "மிளா" எனும் வகையிலான மானொன்றை
வேட்டையாடி அதன் மாமிசத்தை சேகரித்துக்கொண்டிருக்கும் நால்வர் அடங்கிய
கும்பலை வனத்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர் . அவர்களின்
விவரம் வருமாறு,,,
கொற்றிக்கோடு பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் , புதுக்கடையை சேர்ந்த
கோபாலகிருஷ்ணன் , அய்யப்பன் , விழுப்புரத்தைச் சேர்ந்த மார்டின்
பிரேம்ராஜ் . இதில் கிறிஸ்டோபர் என்பவரு…