M.S.V ஐயா! மன்னித்துவிடுங்கள்.இது சரியா?தவறா? தெரியவில்லை

தமிழிசைக்கு கட்டற்ற களஞ்சியமாக காலத்திற்கும் அழியாத இசையை தந்தளித்து
தமிழுக்கும், தமிழிசைக்கும் மிகப்பெரிய தொண்டாற்றிய நம் மெல்லிசை மன்னர்
எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயா இம்மண்ணில் உயிர் துறந்தார் எனும் போது அதை
ஏற்றுக்கொள்ளவும்,மனத­ிலேற்றிக்கொள்ளவும் மிகக்கடினமாகத்தான் இருக்கிறது.
இசைப் படைப்பாளி ஒருவரை தமிழகம் இழந்து கண்ணீரால் நனைவதை காண முடியாமல்
நம் தொண்டைகளில் துக்கம் அடைத்து ஆழ்மனதிலோர் அழியா மனவேதனையானது
மரத்தில் அடித்த ஆணிபோல பாய்கிறது. தன் வாழ்நாள் முழுவதையும்
தமிழிசைக்காக அர்ப்பணித்த மனிதரை மறக்க முடியாமலும் அவர் மரணத்தை
ஜீரணிக்க முடியாமலும் அவரின் இசைகேட்டு துக்கத்தில் பங்கெடுக்கிறார்கள்
தமிழர்கள்.முதியோர்கள் முதல் இளையோர்கள் வரையில் எம் எஸ் வி ஐயாவின்
இசைக்கு அடிமைபட்டவர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைய
இளைஞர்களுக்கும் ஐயாவின் இசை பிடித்திருக்கிறதென்ற­ால் இசைக்காகவே அவர்
உழைத்திருக்கிறார் என்பது தெள்ளந்தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. ஈழ
உணர்வை இளைஞர்களுக்கு பாய்ச்சிய "விடைகொடு எங்கள் நாடே" பாடலானது
இன்னமும் அவரவர் மனங்களில் அழியா இன உணர்வை ஊட்டியிருக்கிறதென்றால்
எம்.எஸ்.வி ஐயா வின் குரலுக்குள்ள வீரியம் வயதானாலும் குறைந்து போகவில்லை
என்பதை உணர்த்திவிட்டுச் செல்கிறது. அதோடல்லாமல் சிறந்த குனச்சித்திர
நடிகராக தோன்றி தன்திறமையின் மூலம் மக்களை கவர்ந்திழுத்த மெல்லிசை
மன்னரவல்லவா அவர்.ஆழ்ந்த துயரத்தோடு அவரின் இறுதி ஊர்வலத்தை தமிழ்த்
தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒட்டுமொத்த திரையுலகினரும்,
அரசியல் தலைவர்களும்,மற்ற கலைத்துறையிர்களும்,வ­ளரும்
இசையமைப்பாளர்களுமாக அங்கே கூடியிருந்தார்கள் துக்கம் அனுசரிக்க,,,
இதற்கிடையே அவரவர் எம்.எஸ்.வி ஐயாவுடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்த
வண்ணமிருந்தனர்.உயிரற்ற அவருடலை (உயிரற்றிருந்தாலும் அவ்வுடலில் இசை
வாழ்கிறது) அடக்கம் செய்வதற்கு இறுதி ஊர்வலம் தயார்நிலையில் இருக்கையில்
சட்டென கண்ணில் பட்டது அந்த விளம்பரம். உற்று கவனிக்கையில் அது தெளிவாகத்
தெரிந்தது.எம்.எஸ்.வி அவர்களின் சடலத்தின் மேல் அவருக்காக உருவாக்கப்பட்ட
அதிகாரப் பூர்வ இணைதள முகவரி பொறிக்கப்பட்ட போர்வை
போர்த்தப்பட்டிருந்தத­ு. அந்த இணையதள முகவரி
www.msvtimes.comஆகும். இசைக்காக உழைத்தவருக்கு இணையதள
உருவாக்கப்பட்டிருக்க­ிறது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதனால் உலகம்
முழுக்க அவரின் இசையும்,புகழும் பரப்பப்படும் என்பதில் மிக்க மகிழ்சியே ,
ஆனால் இணையதளத்தை அறிமுகப்படுத்திய விதம் மிகுந்த சங்கடத்திற்கு
உள்ளாக்கியுள்ளதென்றே­ உணரப்படுகிறது. அவர் வாழ்ந்த காலத்திலேயே
இந்நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம் அதை விடுத்த அவரின் சடலடத்தின் மூலம்
அறிமுகப்படுத்தும் இம்மாதிரியான செயல்களை வரவேற்க வேண்டுமா? இல்லை
வருத்தப்பட வேண்டுமா? என்றுகூட ஒரு முடிவெடுக்க முடியாத இக்கட்டான
சூழ்நிலைகளோடு அவருக்கு அஞ்சலி செலுத்த
வேண்டியிருக்கிறது.எதையும்,எப்போதும் சரியான காலத்தில் செய்யும்
எம்.எஸ்.வி ஐயாவுக்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தை
அறிமுகப்படுத்துதலுக்­கு அவரின் மரணத்தை உபயோகப்படுத்துவது சரியானச்
செயலா? அவர் உயிரோடிக்கும் போதே இணையதள அறிமுகத்தை செய்திருந்திருந்தால்­
அதன் தன்மையும்,பார்வையும்­ எப்படி இருந்திருக்கும், உயிரோடிருக்கும்
போது அறிமுகப் படுத்துதலுக்கும், இறப்பில் அறிமுகப்ப டுத்துதலுக்கும்
பிரபலப்படுத்துதல் சார்பாக சிக்கல் எழ வாய்ப்புள்ளதா? என்று எந்த
கேள்விகளுக்கும் விடையறியாமல் இன்னமும் அவரின் இசையோடு பயணிக்க
வைக்கிறது. இது எதார்த்தங்களை மிஞ்சிய படைப்பாளியின் வளர்ச்சியென்று
மிகச் சாதாரணமாக கடந்து போகவும் முடியவில்லை, இன்னமும் நம்மால்
எம்.எஸ்.வி ஐயா இறந்துவிட்டாரென்று நம்பக்கூட முடியவில்லை, அந்தளவிற்கு
அவரின் இசை நம்மை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. எங்களால் ஆன
உதவியாக,நீங்கள் தமிழிசைக்கு செய்த சேவைக்குப் பலனாக நாங்கள் அந்த
இணையதளத்தை புகழின் உச்சிக்கு நிச்சயம் எடுத்துச் செல்வோம் என்பதுமட்டும்
உறுதி.இம்மண்ணிற்கு நீங்கள் செய்த இசைப் பணிக்காக உங்களுக்கு நாங்கள்
கண்ணீர் அஞ்சலி செலுத்த கடமைபட்டுள்ளோம் எம்.எஸ்.வி ஐயா ! உங்கள் ஆன்மா
சாந்தியடையட்டும்.

Comments

 1. பதிவில் சில மாறுதல்கள் செய்தால் படிக்க சுலபமாக இருக்கும். 1. வரிகளுக்கு இடையில் இடைவெளி அதிகப்படுத்த வேண்டும். 2. பத்தி பிரித்து எழுதவேண்டும். 3. பத்திகளுக்கு இடையே ஒரு வரி காலியாக இருக்கவேண்டும்.

  நீங்கள் சிரமம் எடுத்து எழுதுவது மற்றவர்கள் படிக்கத்தானே. அவர்கள் சுலபமாகப் படிப்பதற்கு உண்டான வழிகளையும் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 2. உறுவாக்குதல் தவறு. உருவாக்குதல் என்று இருக்கவேண்டும்.

  ReplyDelete
 3. பிழையை திருத்திவிட்டேன் ஐயா!
  சிரமத்திற்கு மன்னிக்கவும் நான் கைபேசி மூலம் Email Post செய்வதனால் எவ்வளவு முயன்றும் பிரச்சனையை சரிசெய்ய முடியவில்லை. மேலும் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனும் ஒழுங்கமைவு தர மறுக்கிறது. கூடுமானவரை முயற்சி செய்கிறேன் ஐயா!
  தங்கள் வருகைக்கு நன்றி ஐயா!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்