Mr.மோடி எங்கே ஓடுகிறீர்கள்?

"இந்தியா ஒரு தீபகற்ப நாடு" என்பதை இனி யாரும் உச்சரிக்கப் போவதில்லை
அதற்குப் பதிலாக "இந்தியா திருடர்கள் நாடு" என்றே அனைவரும்
உச்சரிக்கப்போகிறார்க­ள். அந்த அளவுக்கிங்கே மலிந்து கிடக்கிறது ஊழல் .
அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின் மூலம் தனியார்மையம் உட்புகுந்து
தங்களின் ஏகாதிபத்தியத்தால் இந்திய வளங்களைச் சுரண்டுதல்தான்
வளர்ச்சியென்று பாமர மக்களை நம்பவைப்பதில் ஆளும் பிஜெபி அரசானது வெற்றி
கண்டிருக்கிறதென்றால்­ இது அடிமைத்தனத்தின் உச்சமென உணர வேண்டும் நம்
இந்தியச் சமூகம்.ஊழலற்ற இந்தியாவை காங்கரஸாலும்,பிஜெபிய­ாலும் இனியும்
உறுவாக்கிவிட முடியாதென்பதற்குச் சான்றாக வான்தொடும் பூகம்பப்
பேரதிர்ச்சி ஊழல் மத்திய பிரதேசத்தில் " வியாபம்" என்கிற பெயரில்
அரங்கேற்றப் பட்டிருக்கிறதென்றால்­ இதற்கு பொருப்பேற்க வேண்டிய பிரதமர்
சர்வ சாதாரணமாக இயல்பான தோற்றத்தில் கடந்து போகிறார் இதுதான் மக்களுக்கு
அவர் அளித்த வாக்குறுதி போலும்,,,பத்தாண்டு கால காங்ரஸின் ஊழலாட்சியில்
இந்தியா சிக்கித் தவிப்பதாகவும்
ஊழலற்ற இந்தியாவை பிஜெபியால் மட்டுமே தரமுடியுமெனவும் அதோடல்லாமல்
தேர்தல் வாக்குறுதியாகவும் இந்துத்துவ ஆர் எஸ் எஸ் மோடி
மக்களுக்களித்தார்.இந்தியாவை அடிமைபடுத்தி தன் ஆளுமையால் நில வளச்
சுரண்டலையும்,மனித வளச் சுரண்டையும் மேற்கொள்வதில் என்றுமே இருதேசிய
கட்சிகளின் கரங்களும் இணைந்தே பாமர மக்களின் கழுத்தை நெறிக்கும்.
காங்ரஸின் ஊழலைச் சுட்டிக்காட்டிய பிஜெபி மோடி இன்று தன் கட்சி
செய்திருக்கும் ஊழலை பற்றி வாய்திறக்கவே மறுக்கிறார். இந்தியா
முதலாளித்துவத்தின் அடிமைச் சின்னமாகிறது என்பதற்கு மத்தியப் பிரதேச
மாநில "வியாபம்" ஊழல் தெளிவுபடுத்துகிறது.மத்தியப் பிரதேச மாநில அரசின்
கட்டுப்பாட்டில் இயங்கும் தொழில்முறை தேர்வு வாரியமான
"வியாபம்"(VYAVSAYIK PAREEKSHA MANDAL) மருத்துவம், பொறியியல் படிப்பு
மற்றும் அரசுப் பணி காலியிடங்களுக்கான தகுதித் தேர்வு நடத்துகிறது .
2007ம் ஆண்டு இவ்வாரியத்தில் மிகப்பெரிய ஊழல்முறைகேடு நடந்துள்ளதாக
தெரியவந்ததைத் தொடர்ந்து, மேலோட்டமாக ஒரு விசாரணைக்குழு அப்போது
அமைக்கப்பட்டது.அதன் பின்னர் அதன் செயல்திட்டதில் பல்வேறு முறைகேடுகள்
நடைபெற்றதால் மீண்டும் கண்துடைப்புக்காக 2013ம் ஆண்டில் அம்மாநில சிறப்பு
காவல் துறை ஆணையத்திற்கு மாற்றப்பட்டு அதன் முதற்கட்டமாக 2100 பேர்
கைதுசெய்யப்பட்டார்கள­் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த ஊழலை மறைக்கும்
நோக்கத்தோடு சாட்சியாளர்கள்,ஊழல் குற்றவாளிகளென்று 47 பேர் தொடர்ந்த
மர்மமான முறையில் இறக்கிறார்கள் . பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட
வியாபம் ஊழலானது பொதுநல வழக்கின் மூலம் உயர் நீதிமன்றத்திற்கு
சென்றதையடுத்து இறுதியாக சிபிஐவிசாரணைக்கு உத்திரவிட்டது. இந்த ஊழலின்
மதிப்பு சரியாக இன்னமும் கணக்கிடப்படவில்லை பரவலாக இருபதாயிரம்
கோடிரூபாய் எனத் தெரியவருகிறது. வியாபம் ஊழலில் மத்தியப்பிரதேச மாநில
ஆளுனர் ராம் நரேஷ் யாதவ், அம்மாநில பிஜெபி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
மற்றும் அவரது மனைவி சாதனா, உமா பாரதி ஆகியோர்களுக்கு நேரடியாகவே
தொடர்பிருப்பது தற்போது தெரியவந்துள்ளது . இது வேடிக்கை என்னவெனில்
தொடர்புடையவரே பதவியின் உதவியுடன் பல்வேறு ஆணைகளை பிறப்பித்து வருகிறார்
என்பதுதான், இவற்றையெல்லாம் பார்க்கும்போது இந்திய ஜனநாயகம்
இறந்துக்கொண்டிருப்பத­ை திடமாக உணர்த்துகிறது. மேலும் இந்த வழக்கை
விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் தங்கள் கைவசம் இருந்த 10
டன் ஆவணங்களை டிரக்கரில் ஏற்றி சி.பி.ஐ., அதிகாரிகளிடம்
ஒப்படைக்கவுள்ளனர்.
ஆவணங்களே 10டன் என்றால் பணத்தின் மதிப்பு எனவாயிருக்குமென்று ஓரளவு
ஊகிக்க முடிகிறது.அதுபோக வியாபம் ஊழல் உங்களுக்கு வேண்டுமென்றால்
பெரியதாக இருக்கலாம், எங்களுக்கு சிறிய சம்பவம்தான் என்று அம்மாநில
பாரதீய ஜனதா மந்திரி கைலாஷ் விஜய்வார்கியா கருத்து தெரிவித்துள்ளார்.
ஊழலிலே வளர்ந்தவர்களிடத்தில்­ இம்மாதிரியான கருத்துக்கள்தான் வருமென்பது
எதிர்பார்க்கப்பட்டது­தான். இதற்கு பிஜெபி மோடி எப்போதும் தன்கைவசம்
வைத்துள்ள அதிகார வார்த்தையான "அது அவரின சொந்த கருத்து" என்பதையே
பயன்படுத்துகிறார்.ஊழல் விவகாரங்களாகட்டும் மக்கள் விரோதச்
செயல்களாகட்டும் ஒரு அரசு தவறு செய்கின்றபோது அந்த அரசானது "நீங்கள்
மட்டும் ஊழல் செய்யவில்லையா?" என்கிய மாய நியாயத் தோற்றத்தை உறுவாக்கி
ஊழலிலிருந்தும், மக்கள் விரோத செயல்களிலிருந்தும் தப்பித்துக் கொள்ளும்
அல்லது மறைந்து கொள்ளும். பிஜெபி மோடி அவர்கள் மீண்டும் அதை
பிரயோகப்படுத்திவிட்டு அதானிகளிகளுக்கும்,அம­்பானிகளுக்கும்,லலித்­
மோடிக்களுக்கும் தொண்டு செய்ய வெளிநாட்டிற்குச் சென்று
தலைமறைவாகிறார்.ஊழலற்ற இந்தியாவை உறுவாக்குவோம் என்று வாக்குறுதி
அளித்தீர்களே Mr.மோடி எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள்.­ ஊழலை மறைக்க
திட்டம் தீட்டும் யுக்திதான் உங்களுக்கு கைவந்தக் கலையாயிற்றே! இந்திய
மக்கள் மறதியில் வாழ்ந்து பழகியவர்கள் ஆகவே தைரியமாக வெளியேவந்து
வெளிப்படையாகவே திட்டம் தீட்டுங்கள். தேசம் சுடுகாடாக ஆவதில்தான்
உங்களுக்கு மிக பிடிக்கும் என்று "வியாபம்" வியந்து வியந்து உங்களை
பாராட்டுகிறது.

Comments

  1. வியாபமா?வியாபாரமா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்