"மாற்றம்,முன்னேற்றம்" பா.ம.க வின் விளம்பரமும்,ஊடகமும்

நேற்றைய தினத்தில் (12.7.2015) ஒரே நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து
செய்தி பத்திரிக்கைகளிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக தமிழகத்து
முதல்வர் வேட்பாளராக? அறிவிக்கப்பட்ட தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர்
அன்புமணி ராமதாஸ் அவர்களின் "மாற்றம்,முன்னேற்றம்­" என்கிற சொற்களோடு
அவரது அதிகாரப்பூர்வ இணையதளமான www.anbumani4cm.comஐயும் சேர்த்து
விளம்பரம் செய்யப்பட்டது . சமூக வலைதளங்களில் சாதியாதிக்கமும் தற்போது
சேர்ந்துள்ளது தான் மாற்றம் ,முன்னேற்றமாகும்
ஒரே நாளில் இவ்வளவு விளம்பரத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியுமா?
ஏன் முடியாது இதே இந்துத்துவ பிஜெபி மோடியின் யுக்திதானே அது, அந்த
யுக்தியையே அன்புமணி ராமதாஸ் கையில் எடுத்திருக்கிறார். பணம் படைத்த
முதலாளி வர்க்கத்திற்கு விளம்பரம் செய்ய இங்கே ஒட்டுமொத்த ஊடகங்களும்
போட்டிப்போட்டு காத்துக்கொண்டிருப்பத­ை சாதியாதிக்க முதலாளித்துவர்கள்
நன்கு அறிவார்கள். நேற்று வெளியிடப்பட்ட பாமக வின் "மாற்றம்,
முன்னேற்றம்" விளம்பரத்தை பல்வேறு தரப்பினர்கள் கேலி கிண்டலுக்கு
உள்ளாக்கினார்கள் இது அரசியலில் தெளிவின்மை என்பதையே சுட்டிக்காட்டுகிறது
. காரணம் விளம்பர யுக்தியின் செயல்பாடுகள், அதன் நோக்கம், சமூகத்தில்
எந்த மாற்றத்திற்காக அவர் மாற்றம், முன்னேற்றம் என்கிற முழக்கத்தை
முன்வைக்கிறார் என்பதை சிந்திக்க மறந்த மக்கள் சிரித்துப் பழகுகிறார்கள்
என்றேச் சொல்லலாம் . உண்மையில் மிகப்பெரிய சதிவலைகளை தமிழகத்தில்
செயல்படுத்த வேண்டுமென்பதே அம்முழகத்தின் நோக்கமாக இருக்கிறது.
முக்கியமாக சாதிய மனுதர்ம வர்ணாசிரமத்தை
உயர்த்திப்பிடித்தல்,­இந்துத்துவத்தை வளர்த்தெடுத்தல்,இந்த­ுத்துவ ஆர்
எஸ் எஸுக்கு ஆதரவு அளித்தல்,தலித்துகளின­் தலைகளை வெட்டி தண்டவாளத்தில்
வீசுதல், பெயருக்கு பின்னால் சாதி ஒட்டு வைக்க
வலியுறுத்தல்,பெண்ணடி­மைக்கு ஆதரவு அளித்தல், ஆணாதிக்கத்தை
நியாயப்படுத்துதல்,சே­ரிகளை கொளுத்தி சூறையாடுதல், தமிழகத்தை இரண்டாக
பிளத்தல்,திராவிடத்தை­ அழிக்கும் முயற்சியில் ஈடுபடுதல், மருத்துவமனை
மற்றும் கல்லூரிகளில் ஊழல் செய்து அதன்மூலம் குடும்பச் சொத்துக்களை
வளர்த்தெடுத்தல்,வாரி­சு அரசியலை மீண்டும் தமிழ்நாட்டிற்கு
அமல்படுத்துதல், மது விலக்கென்று கூறி தன் சாதிய மக்களை மது விற்க
வலியுறுத்துதல்,தன் தைலாபுர தோட்டத்தை பாதுகாக்க
மார்க்ஸ்,அம்பேத்கர்,­பெரியார் சிலைகளை நிறுவி அவர்களின் கொள்கை
கோட்பாடுகளை புதைகுழியில் தள்ளுதல், தலித்தல்லாதோர் பாதுகாப்பு அமைப்பை
தமிழகம் முழுதும் இயக்கச் செய்தல், அடிமை படுத்துதல் மனிதனின்
கடமையென்கிற அறிவுரையை பாட புத்தகங்களில் சேர்த்தல்,தமிழ்வழிக்­ கல்வியென
கூறி முதலாளித்துவ தோழமைகளுக்கு அதில் விலக்களித்தல் போன்று மெம்மேலும்
நீளும் சமூக அநீதிகளுக்கு ஆதரான செயல்திட்டங்களை "மாற்றம் , முன்னேற்றம்
என்கிற இரண்டே வரிகளில் அடக்கி அதையும் மிகப்பிரபலமாக விளம்பரம்
செய்திருக்கிறார் என்றால் இதனை வெறும் கேலி கிண்டலுக்கு ஆட்படுத்தும்
மக்கள் அரசியலை அறியாதவர்களென்று சொல்வதில் எவ்வித தயக்கமும் ஏற்பட்டுவிட
வில்லை.இதற்கிடையே தன்னை நடுநிலையாளர்களாக காட்டி பெரும் புகழ்பெற்ற
தமிழ் இந்து நாளிதழ் தனது இந்துத்துவ பார்ப்பானியத்தின் உண்மை முகத்தை
மிக அழகாக தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறது . நேற்று பா.ம.க.கோவையில்
பொதுகூட்டம் நடத்திய செய்தியினை தமிழ் இந்து இவ்வாறு தலைப்பிட்டு
எழுதியிருக்கிறது "வளமான தமிழகத்தை உருவாக்க பா.ம.க.தலைமையில் புதிய
ஆட்சி"
சாதியத்தை உயிர்த்திப்பிடித்து அதன் பிடியில் வன்னியச் சமூக மக்களை
சிந்திக்கவும், செயல்படவும் விடாமல் தடுத்து நிறுத்தி தன்னுடைய அரசியல்
ஆதாயத்தை தக்கவைப்பதைத் தான் வளமான தமிழகமென்று இவர்கள்
குறிப்பிடுகிறார்கள் . இவ்வகையிலான ஊடகங்கள் தங்களுக்கு தெரிந்த அல்லது
அறியப்பட்ட சமூக அவலங்களை வேண்டுமென்றே மூடிமறைப்பதில் கெட்டிக்காரர்களாக
இருக்கிறார்கள். தமிழகத்தில் வன்னியர்கள்,கவுண்டர்­கள் வாழும்
பெரும்பான்மையான கிராமங்களில் இந்துத்துவ மனு தர்மத்தின் ஆதரவு பெற்ற
"பெண்கல்வி" மறுப்பு அமலாக்கத்தில் உள்ளது. அதற்கான
நியாயப்படுத்துதலுக்க­ாக சொல்லப்படும் காரணம் என்னவெனில் கல்வி கற்றால்
ஆண்களை பெண்கள் மதிப்பதில்லை என்பதே,, இந்த அவல நிலையானது நிச்சயமாக
பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அதற்காக பாடுபடும் தமிழ்ச் செய்தி
ஊடகங்களுக்கும் நிச்சயமாக தெரிந்திருந்தும் உண்மைகளை மறைத்து
முழக்கமிடுகிறார்கள் "மாற்றம்,முன்னேற்றம்­" என்று,,, அதற்கு ஊடகங்கள்
உறுதுணையாக இருப்பதில் எவ்வித வியப்புமில்லை.

Comments

  1. கொஞ்சம் கூட உண்மையில்லாத தகவல்களை பரப்பி உள்ளீர். இந்த விளம்பரம் மூலம் உங்கள் வயிற்றெரிச்சல் மட்டுமே வெளிபட்டுள்ளது. அன்புமணி திறமைக்குறித்து விவாதிக்க தயாரா ?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்