நான்! குயில்! காதல்!

என் இமைகளை
திறந்தே வைத்திருக்கிறேன்

இரவில்
தூக்கம் பிடிக்கவில்லை எனக்கு

தூரத்தில் குயிலொன்று கூவக்கேட்டேன்

தன் காதலியை
பிரிந்த குயிலாக இருக்கலாம்
துக்கம் தெரிந்தது
அதன் குரலில்

எனக்குள் ஆன
வியப்பில் விழிகள்
தானே பிதுங்கக்
கண்டேன்
இரவில் குயிலோசையா!
குழந்தை மனமல்லவா
அதற்கு!

தனிமையில் நானிருப்பதாக உணரவில்லை
துணைக்கு குயிலிருப்பதனால்

நானும் அதுவும்
பிரிந்த காதலால் ஒன்றானோம்

இரவில் நான் விழித்திருக்க
எனை பிரிந்த
காதலியின் அழியாத
நினைவுகளென்று
குயிலுக்கும் தெரிந்திருக்குமோ

இயற்கையின் படைப்பிதுதானோ
எத்தனையோ கனவுகளையும்
நினைவுகளையும்
சுமந்தபடியே
நானும்,குயிலும், காதலும்,இரவும்

என்னிரவுக்கு
வருகை புரிந்த
குயிலை
காலையில் காணவில்லை

என் கல்லறையில் தேடுகின்றேன்
குயிலை

மரணம் கண்டும்
மனம் மகிழ்சியில்
புதைத்து விட்டார்கள் எனதருகில்
குயிலை

காதலுக்கு இரு
சாட்சிகள் தேவையாம் காதலை
பிரித்தவர்களே எனதருகில் புதைத்து விட்டிருக்கிறார்கள்
குயிலை

ஏ!
காதலே
பிரிவின்
வலியை குயிலுக்கு உணர்த்திய நீ!

மனிதனுக்குணர்த்த
மறந்தது ஏனோ
மன்னிக்க இயலவில்லை
என்னால்

தண்டனை நானுக்கு தருகிறேன்
எம்மிருவர்
கல்லறைக்கும்
நீதான் இன்றுமுதல்
காவலாளி,,,

Comments

  1. அற்புதம்
    மீண்டும் மீண்டும் படித்து இரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்