மதுவுக்கு அடிமையான சமூகம் மெய்பிக்கிறது சம்பவங்கள்

சமூகம் எங்கெல்லாம் பெருந்திரளாக கூடுகின்றதோ அங்கெல்லாம் தங்களின்
வர்க்கச் சுரண்டலுக்காக
அரசானது டாஸ்மாக் எனும் மதுகடைகளை திறந்து வைத்துக்கொண்டு வாருங்கள்!
தமிழ்ச்சமூகமே உங்களின் மூளைகள் இங்கே விலைக்கு வாங்கப்படுமென்று,,,
சந்தை விரித்து சங்கை அறுக்கும் கொலை குற்றப் பணியை செய்கின்ற வேளையில்
சமூகமானது சீரழிந்துபோகத்தானே செய்யும். இதில் எவ்வித
தயக்கமோ,பின்வாங்குதல­ையோ இதுவரை நாம் காண கிடைத்ததில்லை என்பதே
குற்றத்திற்கான உடந்தையாகிறது.
கோவை பள்ளி மாணவி குடித்துவிட்டு வந்து சலசலப்புச் செய்த சம்பவமாகட்டும்
, திருவண்ணாமலையில் இளைஞர்களால் நான்கு வயது குழந்தைக்கு மது கொடுத்து
குடிக்கச்செய்து கட்டாயப்படுத்திய சம்பவமாகட்டும் இரண்டையும் கடந்து செல்பவர்கள் இளைய தலைமுறைகளையும்,
பெற்றோர்களையும் மட்டுமே திட்டிவிட்டு
அதன் பின்விளைவுகள் ஏதும் அறியாமல் முகமூடிகளுக்குள் ஒளிந்துகொண்டு
தங்களை உத்தமர்களாக காட்டிக்கொள்கிறார்கள­். எதை முதன்மையாக எதிர்க்கப்பட
வேண்டுமென்பது அம்முகமூடிகளுக்கு தெரிந்தும் மௌனம் மட்டுமே பதிலாக
அளிக்கிறார்கள். இதற்கெதற்கு வேஷமிடுகிறீர்கள் தயவுகூர்ந்து உத்தம வேஷம்
போடாதீர்கள் அந்தச் சிறுமி குடித்திருக்கிறார் என்றாலோ, அந்த இளைஞர்கள்
குழந்தைக்கு மது கொடுத்து தீங்கிழைத்திருக்கிறா­ர்கள் என்றாலோ அதற்கு
முழுக்க முழுக்க அரசும்,சமூகமே காரணம். இதிலிருந்து சமூகம்
தப்பித்துக்கொள்ள
பழியை பெற்றோர் வளர்ப்பில் போடுகிறார்கள் , அரசு தப்பித்துக் கொள்ளவும்
பெற்றோர் வளர்ப்பையே பலிகாடாக்குகிறது. வளர்ப்புச் சரியில்லை என்பது ஒரு
காரணமேத் தவிர அதுவே முதன்மைத் தவறாக இருக்கவில்லை ஏனெனில் அவ்வாறான
கண்ணோட்டத்தில் நோக்கினால் டாஸ்மாக் எனும் மதுக்கடைகள்,அரசு,சமூ­கம் என
மூன்றுமே தப்பித்துக்கொள்ளும்.­ முடிந்தால் திறந்து கிடக்கும் டாஸ்மாக்
கடைகளை மூடுங்கள் . இல்லையேல் வாய்மூடி மதுவுக்கு அடிமையாய் கிடந்து
குடல்வெந்து சாகுங்கள். இவ்விரு சம்பவங்களையும் விட மிகவும் வேதனை தரும்
தகவல் என்னவென்றால் ஒட்டுமொத்த சமூகமும் குடிப்பதை
நியாயப்படுத்துதலையும­், குடிப்பதை பெருமையடிபபதலும் மிகச்சாதரனமாக
எடுத்துக்கொள்கிறது என்பதுதான் அது,,, மனிதன் பிறப்பில் தொடங்கி
அம்மனிதனின் இழப்பால் ஆன இழவு வீடு வரையில் இங்கே மதுபோதை இல்லாமல்
மக்கள் ஒன்றுகூடல் இல்லையென்றேச் சொல்லலாம் . பல திருமணங்களில் மணமகன்கள்
குடித்துவிட்டுதான் மணமேடையேறுகிறார்கள் அந்தளவிற்கு இச்சமூகம் குடியை
நியாயப்படுத்தி பெருமையடித்துக்கொள்க­ிறது.இணையத்தில் சண்டே
ஸ்பெஷல்,வீக்கெண்ட் ஸ்பெஷல், சாட்டர்டே ஸ்பெஷல், என்று மதுபாட்டிலோடு
பெருமையாக புகைப்படமெடுத்து போடும் சமூகத்தில் வெறென்ன மாற்றத்தை
எதிர்பார்க்க முடியும் . இதில் இன்னொரு கள்ள முடிச்சு பணியும் நடந்து
கொண்டுதான் இருக்கிறது , என்னவென்றால் ஆணாதிக்க பார்வை கொண்ட ஆதிக்கர்கள்
அந்த சிறுமியின் புகைப்படத்தையும்,காண­ொளியையும் பதிந்து கலாச்சாரத்தைப்
பற்றி பேசுகிறார்கள் அப்படி பேசுகிறவர்கள் எவரும் ஆண்மக்கள் மது
அருந்துவதற்கு ஆதரவாக இருக்கிறார்கள் . எது எப்படியோ விடியலைத் தேடாத
சமூகம் வீழ்ச்சியடைந்தே தீரும் .
"கேட்டியாக்கா சேதியென்று! நகர்ந்து போகும் மனநிலை உங்களுடையதெனில்
நாளை உங்கள் பிள்ளைகளும் குடித்துவிட்டு வரலாம் மறக்காலம் துடைத்து
வையுங்கள் உங்கள் கேமராவை,,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்