சசி பெருமாள் அவர்களின் மரணம் சாட்சி மது விலக்கிற்கு,,,

மது விலக்கு அமல்படுத்தக்கோரி "தற்கொலை செய்து கொண்டார் சசி பெருமாள்" என
எழுதத் தோன்றவில்லை காரணம் காணெளி காட்சி அவ்வாறாக அமைந்திருக்கவில்லை

ஊடகங்களால் "காந்தியவாதி" ஆக்கப்பட்ட சசி பெருமாள் தொடர்ந்து
மதுவிலக்கிற்காக பல உண்ணாவிரத போராட்டங்களை நடத்தியவர். அதன்படியே
மார்த்தாண்டம் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்காக்கொண்டிருந்த மதுக்கடையை
அகற்றக்கோரி இன்று தீக்குளிப்பு போராட்டத்தை அறிவித்திருக்கிறார்.­
ஏற்கனவே சம்மந்தப்பட்ட மதுக்கடையை அகற்றுமாறு மதுரைக்கிளை உயர்நீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்திருக்கிறது­ , அதையும் பொருட்படுத்தாமையால் இந்த
தீக்குளிப்பு போராட்டத்தை சசிபெருமாள் கையில் எடுத்திருக்கிறார்.

சம்பவ நிகழ்வின் போது சசி பெருமாளும் அப்பகுதி பேரூராட்சித் தலைவரும்
அருகில் இருக்கும் செல்போன் டவரில் கையில் பெட்ரோல் கேனுடன்
ஏறியிருக்கிறார்கள்.
எப்போதும் போல பதற்றம் முற்றிய பிறகு வந்த காவல்துறையும்,தீயணைப­்புத்
துறையும் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரையும் கீழே இறங்கச்
சொல்லியிருக்கிறார்கள். மேலேயிருந்த இருவரும் கீழே இறங்கி வர
மறுத்தமையால் தீயணைப்புத்துறையினர்­ பாதுகாப்பு கயிற்றுடன் செல்போன்
டவரில் ஏறியிருக்கிறார்கள்.இங்கே தான் "தற்கொலை செய்து கொண்டார் சசி
பெருமாள்" என்பது சாத்தியமில்லையெனத் தோன்றுகிறது. மேலே ஏறிய
தீயணைப்புத்துறையினர்­ சசி பெருமாள் மற்றும் பேரூராட்சித் தலைவரை
மீட்கப்போவதாகக் கூறி சசி பெருமாள் உடம்பில் கயிற்றைக் கட்டி
உச்சியிலிருந்து கீழே இறக்குகையில் குறுகிய கம்பிகளால் ஆன ஏணிப்படியில்
கயிற்றோடு கட்டப்பட்ட நிலையில் அங்கேயே அவருக்கு மூச்சுத் திணறல்
ஏற்பட்டிருக்கக் கூடும் அதற்கான முக்கிய காரணமாக காப்பாற்றுவதற்காக
கட்டப்பட்ட கயிறு இருந்திருக்கக் கூடும். தொலைக்காட்சியில் அதனை
பார்க்கையில் சில சந்தேகங்கள் எழத்தான் செய்கின்றன.

இன்றைய விவாத காட்சிபொருளாக ஒரு மரணம் ஊடகங்களுக்கு கிடைத்திருக்கிறது
இதைவிட வெறென்ன வேலை அவ்வூடகங்களுக்கு,,,‪ மறக்காமல் ‬கொண்டுவாருங்கள்
ஜெவின் அடிமைகளான செகுவையும்,நாஞ்சில் சம்பத்தையும்,

வருங்கால சமூகத்தை சிந்திக்க விடாமல் செய்யும் டாஸ்மாக் எனும் அரசு
மதுபானக்கடைகளை மூடுவதோடு மட்டுமல்லாம் ,சசி பெருமாள் மரணத்தில்
ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை போக்க வேண்டிய கடமை ஆளும் அதிமுக
முதலாளித்துவ அரசிற்கு இருக்கிறது. மேலும் தொடர்ந்து மக்கள் விரோதப்
போக்கினை கடைபிடிக்கும் அரசுக்கெதிரான போராட்டங்கள் திட்டமிட்டே ஆளும்
அரசானது நசுக்கப்படுவதையும், அதிலும் அரசியல் ஆதாயம் தேடுவதையும் அரசு
உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கலாம் இழப்பாக
இருக்கட்டும் சசிபெருமாள் இழப்பாக இருக்கட்டும் அவர்களுக்கான
கடன்பட்டவர்களாக தமிழ்ச்சமூக மக்கள் உணர்வார்களேயானால் முக்கியமாக
டாஸ்மாக எனும் அரசு மதுக்கடைகளுக்கெதிரான­ முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை
மேற்கொண்டேயாக வேண்டிய கட்டாயமும் கடமையும் இருக்கிறது.
குறைந்தபட்சம் நம் வருங்கால சந்ததிகளையாவது மதுவில் இருந்து விடுவிக்க
நாம் கடமைபட்டவர்களாக இருக்கின்றோம்.

Comments

  1. காந்திய வழியில் போராடி காந்தியிடமே சென்று விட்டார்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்