மழையின் மடியில்,,,

விசால தோற்றத்தில்
ஒருதுளி மழைத்துளி
எனை தீண்டிவிட்டுச்
செல்ல

திணறும்
மூச்சுக்காற்றை
திசையெங்கும்
எடுத்துச் செல்கிறது எனக்காகவே
பெய்யும் மழை

அடர் இருட்டை கிழிக்கும் மின்னல்
என் மகிழ்சி வெள்ள
முகப் பொலிவை
புகைப்படமெடுக்க


நான் வைக்கும்
தேநீர் விருந்துக்கு தேடித்தேடி
கொடுத்தேன் அழைப்பிதழை
அழகான மழைக்கும்,
படமெடுத்த
மின்னலுக்கும்,
பார்த்து சிரித்த இடிகளுக்கும்

ஆகாச வெளியில்
மழைக்காகவே
காத்திருக்கின்றன
எத்தனையோ
முகங்கள்

அத்தனை
முகங்களும் ஒரே நேரத்தில் பார்த்தமையால்
வெட்கத்தில்
என்தோட்ட
பூஞ்செடிகள்

மண்வாசம் நாசியில் நுழையும் போதே
விழித்துக் கொண்டேன் நானில்லை நனையப்போவது நாதமென்று

மழையை
திட்டுகிறார்கள் மதிகெட்டவர்கள்
துற்றும் உதடுகளை தூக்கியெறியென்று
எனதுள்ளம்
எப்போதும் சொல்லும்
மழையிடம் என்மனதை பறிகொடுத்தமையால்

பற்றுண்டு கிடக்கும்
பற்றாத நெருப்பாக
அது இருக்கலாம்

அன்புக்கு ஆள்தேட வேண்டியதில்லை
மழையன்பின்
மடியில்
நானுறங்குவதால்

மழையெனக்கு
இன்னொரு தாய்
தாய் மடியில்
தவழ்கிறேன்
நான்,,,

Comments

 1. அருமையான மழைக்கவிதை ரசித்தேன்.

  ReplyDelete
 2. மழையெனக்கு
  இன்னொரு தாய்
  தாய் மடியில்
  தவழ்கிறேன்
  நான்,,,// கவிதையின் உச்சம் .வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்