யாகூப் மேமன் தூக்கு ஒரு அரசக்கொலைஇந்திய நீதித்துறையானது தனது நீதியை நிலைநாட்டும் நோக்கில் நிகழ்த்தப்பட வேண்டிய ஓர் உடனடித் தேவைக்கான அவசரமா? இல்லை இந்துத்துவத்தை வளர்தெடுக்கும் நோக்கம் கொண்ட உடனடிக் கொலையா? எனும் கேள்வி எழுகையில் முதற்கேள்வியை மண்ணில் புதைத்து விட்டு இரண்டாவது கேள்விக்கான பதிலை அரசக்கொலையாக தந்திருக்கிறது. இந்துத்துவத்தின் சூழ்ச்சமம் யாகூப் மேனனின் தூக்கில் அடக்கிவிட்டு சமநீதியை கயிற்றில் தொங்கவிட்டிருப்பது காலத்தின் கொடுமையெனச் சொன்னால் அது மிகையாகாது . டைகர் மேமனுக்குத் தம்பியாக பிறந்தது அவரின் குற்றமெனக் கருதும் நீதித்துறை நம்மை வியப்படையச் செய்வதோடல்லாமல் அதிர்ச்சியடையவும் வைக்கிறது.யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டு விட்டார். நேற்று – 30.07.2015 – காலை 7 மணிக்குள் மேமனைத் தூக்கிலிடாவிட்டால், நீதி செத்துவிடும் என்று பதறிய உச்ச நீதிமன்றம் இரவோடு இரவாக 6.40.மணிதுளிகளில் அவரை தூக்கிலிட்டிருக்கிறார்கள். நிற்க, அன்று யாகூப் மேமனின் பிறந்தநாள் மற்றும் தூக்கு தண்டனை கூடாதென்று புறக்கணித்த முன்னால் குடியரசுத் தலைவர் உயர்திரு அப்துல்கலாம் அவர்களின் இறுதிச்சடங்கு நாள்.
மும்பை குண்டுவெடிப்புக் குற்றவாளி ஒருவருக்கு தூக்குதண்டனை வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது, யாகூப் மேமனை தூக்கிலிடாமல் காலம் தாழ்த்துவதனால் மற்ற குற்றவாளிகளுக்கு அது சாதகமாகி விடுகிறதென்பது அனேகரின் வாதமாக இருக்கின்ற வேளையில் அவர்களுக்கான புரிதலை ஏற்படுத்துதல் தூக்கு தண்டனை எதிர்ப்புக்கான தகுந்த கடமையாக இருக்கின்றது . முற்றிலுமான தூக்கு தண்டனை எதிர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாதென்றாலும்
ஏற்றத்தாழ்வை கட்டிக்காக்கும் இந்துத்துவ பாசிஸத்தின் பிடியிலிருக்கும் நீதித்துறையின் ஒரு தலைபட்ச மனப்போக்கு நமக்கான சமநீதியை ஒருபோதும் நமக்களிக்காது நீத்துறையும் நமக்கானதில்லை அவ்வாறு இருக்கையில்
தூக்கு தண்டனை தீர்ப்பு விதிக்க மட்டுமல்ல,,, நீதி பரிபாலனை செய்ய இந்த இந்துத்துவ பார்ப்பானிய அரசுக்கும் அதன் சொல்படி கேட்கும் நீதித்துறைக்கும் எவ்வித உரிமையும் இல்லை என்கிற அடிப்படையில் மட்டுமே தூக்கு தண்டனை உத்தரவுகளை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது ஆகவே அதை நோக்கிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையை இந்த அரசும் நீதித்துறையும் ஏற்படுத்த காரணமாக இருக்கின்ற வேளையில் தூக்கு தண்டனையை எதிர்த்தே ஆகவேண்டியிருக்கிறது.

யாகூப் மேமனின் தூக்கு தண்டனை குறைப்புக்கான முதல் கருணை மனு நிராகரிக்கப்பட அன்றிரவே இரண்டாவது கருணை மனு சமர்பிக்கப்பட்டு அதன் மீதான விசாரணை அதிகாலை 2.30 மணியளவில் நடைபெற்றது (சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீல்களின் வாதம் வெளிச்சம் என்பது போல் உச்சநீதிமன்ற அடர்ந்த இருட்டில் வழக்குறைஞர்களின் வாதம் அங்கே நள்ளிரவில் விசாரணை இது இந்திய சரித்திரத்திலே முதன்முறையான நள்ளிரவு உச்சநீதிமன்ற விசாரணை நடவடிக்கை)

இவ்விடத்தில் தூக்கு தண்டனைக்கான ஆதரவும் அதற்காக வக்காளத்து வாங்குவோரின் போராட்டங்களை எதிர்பார்த்தால் அதில் இசுலாமியனோ,கிருஸ்துவ­­னோ,வெகுசன இந்துக்களோ யாரையும் காணவில்லை,அதற்கு முரணாக அந்த வெகுசன இந்துக்களை வழிநடத்தும் மிகக்கொடிய ஆர்எஸ்எஸ் சங்பரிவங்கள் நள்ளிரவில் கூடிய நீதிமன்றத்திற்கு முன்னால் அவர்களும் கூடிநின்று "யாகூப் மேமனை தூக்கிலிடு" என்கிற முழக்கத்தோடு அனைவரையும் கதிகலங்க வைத்திருக்கிறார்கள்.­­ போலவே அதிகாலையில் யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இவ்வாறு குறிப்பிடுகிறார். "மனு நெறிகளுக்குட்பட்டே தூக்கு தண்டனை யாகூப் மேனனுக்கு தீர்ப்பாக வழங்கினோம்" இந்தியாவின் முதன்மை சட்டம் "மனு" என்று நீதித்துறை எதனடிப்படையில் எடுத்தாள்கிறதென்று பார்த்தால் நீதித்துறையின் மீதான நம்பிக்கை நிச்சயம் சந்தேகப்பட வைக்கத்தான் செய்யும், காரணம் குற்றங்களின் மீதான சட்டநடைமுறைகளில் நீதிமன்றம் பயன்படுத்தும் குற்றவியல் நடைமுறைச் சட்டம்,இந்திய சாட்சிய சட்டம்,இந்திய தண்டனைச் சட்டம்,இவற்றுக்கெல்ல­­ாம் செல்லுதன்மையளிக்கும்­­ முதன்மை இந்திய அரசியலமைப்புச் சட்டம் என எச்சட்டத்திலும் எழுதப்படாத அல்லது இல்லவே இல்லாத "மனு" நெறி நீதிமான்களால் முதன்மைச்சட்டமாக்கப்­­பட்டதுதான் வியப்பின் சரித்திரக் குறியீடு.
நிற்க,,அனைத்துக்கும்­­ முதன்மையான இந்திய அரசியலைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்கள் இந்துத்துவ பார்ப்பானியத்தை கடுமையாகச் சாடியவர் தனது சட்ட இயக்கத்தில் மனு தர்மத்தை எப்படி அவரால் புகுத்தி விட முடியும். இவற்றையெல்லாம் ஆராய்ந்தால் இந்திய நீதித்துறையில் இந்துத்துவ பார்ப்பானியத்தின் ஆளுமை பரந்து விரிந்திருப்பது வெளிப்படையாகவே தெளிவுபடுத்துகிறது.

சரி அதையெல்லாம் ஒரு புறம் ஒதுக்கித்தள்ளிவிட்டு­­ மேலும் ஏதேனும் நியாயத்தன்மைகள் இந்திய நீதித்துறையிடம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டால­­் அதிலும் ஏமாற்றமே மிச்சமாகிறது என்னவெனில் இந்தியாவில் சிறைதண்டனை அனுபவிக்கும் பெரும்பான்மையினர் தலித்துகளும்,சிறுபான­­்மை இசுலாமியர்களும் இருக்கின்றனர் என்று மத்திய குற்றப் புலனாய்வு ஆய்வறிக்கை தெரித்துள்ளது. ஒருமுறை நடிகவேள் எம் ஆர் ராதா அவர்கள் சிறையிலிருக்கும் போது திருட்டு வழக்கில் கைதானவரை "ஐயரே! என்று கத்திக் கூப்பிடுவாராம் அதற்கு காரணம் ஐயர் என்றால் யோக்கியன் என்று புரிந்துகொண்டவர்களுக­­்கு புத்திவரட்டும் எனும் நோக்கத்தின் படி அவ்வாறு செய்ததாக இருக்கிறது. இன்றளவும் தன்னை யோக்கியன் என்று காட்டிக்கொண்டு தலித்துகளையும்,சிறுப­­ான்மை இசுலாமியர்களையும் பலியிட்டுக்கொண்டிருக­­்கிறது பார்ப்பானியம் என்பது நம் கண்முன்னே வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ளது.

இந்துத்தவ பார்ப்பானிய ஆர்எஸ்எஸ் இன் துணையோடு ஆட்சியை பிடித்த நரேந்திர மோடி அவர்கள் தன் இந்துத்துவத்தை இந்தியாவில் பரப்பி இந்தியா மதசார்பற்ற நாடு மற்றும் சனநாயக நாடு என்பதை உடைக்கும் பொருட்டு முதலில் கைப்பற்றியது இந்திய நீதித்துறையைத்தான், அதன் மூலம் தான் சார்ந்த இந்துத்துவ மத வெறியர்களை தத்தம் குற்றங்களிலிருந்து விடுவித்து நீதியை பொய்யாக்கி சுதந்திரமாய் அவர்களை விடுதலை செய்ய வைத்ததில் இருக்கிறது பார்ப்பானிய சூழ்ச்சமம் இதன் நம்பகத்தன்மையை மெய்பிக்கும் சாட்சியாக 97 இசுலாமியர்களை கொன்றொழித்த. 2002ம் ஆண்டு, நரோடா பாட்டியா வழக்கில் மோடி முதல்வராக இருந்த பொழுது தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மாயா கோட்னானிக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து அதன் பின்னர் தற்போது பிரதமராக இருக்கையில் யாகூப் மேனன் தூக்கிலடப்பட்ட அதே நாளில் மாயா கோட்னானிக்கு "பிணை"
வாங்கிக் கொடுத்திருக்கிறார் . இது ஒருதலைபட்ச நீதி பரிபாலனை என்பது தூக்கு தண்டனை ஆதரவாளர்களுக்கு நிச்சயம் உறுத்தியிருக்கும். அதே வேளையில் அதே நாளில் இந்துத்துவ பார்ப்பானிய மோடி அரசு தமிழகத்தில் உயர் நீதிமன்றம் ராஜீவ் காந்தி கொலைவழக்கு (அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பது உலகறிந்த உண்மை) தொடர்புடைய முருகன்,சாந்தன்,பேரற­ிவாளன் ஆகிய எழுவர் விடுதலையை எதிர்த்து இரண்டாவது மேல்முறையீட்டை செய்திருக்கிறது. அதில் ஏழுபேர் ஏற்கனவே தூக்கு தண்டனையிலிருந்து சலுகை பெற்று ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஆகவே விடுதலை எனும் இரண்டாவது சலுகை அவர்களுக்கு அளிக்கக் கூடாதென்று வலியுறுத்தி மனுதாக்கல் செய்திருக்கிறது. இதுவும் நிச்சயம் தூக்குதண்டனை ஆதரவாளர்களை உறுத்தியிருக்கும். அதோடல்லாமல் ஒரு ஊழலுக்கான ஆவணமே 20டன் எடையிருக்கும் மிகப்பெரிய "வியாபம்" ஊழல் குற்றம் புரிந்தோர் இன்றளவும் சுதந்திரமாக ஆட்சியதிகாரம் பெற்று முதலாளியாக இருக்கிறார்கள் அது பற்றி வாய்திறக்கக் கூட மறுக்கும் இந்துத்துவ பார்ப்பானிய மோடியிடமும் , மோடி இயக்கும் நீதித்துறையிடமும் சம நீதி கேட்கும் பாமரன் உண்மையில் பாவப்பட்டவனாகத் இருக்கிறான்.
லிபரான் கமிசனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆட்சி அதிகாரத்தில்,,,
கிருஷ்ணா கமிசனால் குற்றம் சாட்டப்பட்டவனுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்,,,
குஜராத் கலவரத்தின் முக்கிய குற்றவாளிகள் நாட்டின் உயர் பதவிகளிலும், பிரதமராகவும்,,,
இதையெல்லாம் வைத்துக்கொண்டு "நம்புங்கள் இந்தியா மதசார்பற்ற நாடு"
"நம்புங்கள் இந்திய சனநாயக நாடு" என்றால் இதைவிட ஒரு கேவலமான பரப்புரை வெறெதுவும் இல்லை.

தூக்கு தண்டனை எதிர்ப்பாளர்களுக்காக­ கடைசியாக ஒரு நினைவு கூறுதல் அவசியப்படுகிறது
"ஒவ்வொரு தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்படும் போதும் மனித உரிமை எனும் "கொடி" அரைக்கம்பத்தில் பறக்கிறது" இக்கூற்று மிகச்சரியானதாகவும் உண்மையை உணர்த்துவதாகவும் உலகுக்கு உரக்கச் சொல்கிறது. சொன்னவர் வேறுயாருமில்லை -நீதியரசர் கிருஷ்ணய்யர் சொன்னது.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்