பிணந்தின்னி மனிதர்கள் சூழ் தமிழகம்

மனித இனமானது தன் இனத்தை தானே உண்பதில்லை என்று நாமனைவருக்கும் தெரியும்.
அதில் சில நாடுகளுக்கு விலக்களிக்கலாம் . காரணம் ஆப்ரிக்கா,நைஜீரியா,
போன்ற நாடுகளில் வாழும் பழங்குடியின மக்கள் மனிதர்களை உணவாக்கிக்கொண்டு
வாழ்பவர்களாக இருக்கிறார்கள்.
இதில் மற்றொரு வகையினரும் இருக்கிறார்கள் , அவர்கள் உணவில் மனித உடலை
இறைச்சியாக கலப்படம் செய்து கள்ளச்சந்தையில் விற்பவர்கள். விலங்கின
இறைச்சியில் மனித உடலைச் சேர்த்து கள்ளச்சந்தைகளில் பணம் பார்க்கும்
வகையினரும் பிணந்தின்னிகளாக இங்கே பார்க்கப்பட வேண்டும் .
இச்செயல்புரிவோர் பெரும்பாலும் உலக நாடுகளெங்கும் பரவி கிடக்கிறார்கள்.
இந்தியாவில் மனிதப் பிணந்தின்னிகள் சற்று மாறுபாட்டு இருக்கிறார்கள் எந்த
வகையில் என்றால், உயிரற்ற மனித உடலை அடக்கம் செய்யாமல் திருட்டுத்தனமாக
அதை பதுக்கி வைத்துக்கொண்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க கற்றுக்
கொண்டிருக்கிறார்கள் என்றால் இவர்களும் பிணந்தின்னிகள் தானே,,
பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் வேறெங்குமில்லை நம் தமிழகத்தில்தான்
நடந்தேறியிருக்கிறது.

திருச்சியில் கருமண்டபம் எரிவாயு தகன மயானத்தில் இறந்த ஒரு மூதாட்டியை
எரிப்பதற்காகக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.­ சடலத்தை பெற்றுக்கொண்ட
ஊழியர்கள் சற்று நேரம் கடந்த பின்னர், சடலத்தை எரித்துவிட்டோம் என்று
சம்பந்தப்பட்ட உறவினர்களிடத்தில் சாம்பலைத் தந்திருக்கிறார்கள்.
அச்சாம்பர் சூட்டின் தன்மையை இழந்துவிட்டமையால் சந்தேகமடைந்த உறவினர்கள்,
தகன அறைக்குள் நுழைந்து உள்ளே சோதித்தபோது மூதாட்டியின் பிணத்துடன்,
வேறொரு சடலமும் எரிக்கப்படாமல் ஒரு மூலையில் மூட்டை கட்டி
வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். உண்மை
வெளிபட்டு குற்றம் வெளியுலகிற்கு தெரிந்தமையால் ஊழியர்கள் உடனே
அங்கிருந்து தப்பித்து விட்டதாகத்தெரிகிறது.

இச்சம்பவமானது நம்மவர்கள் பணத்திற்காக பிணந்தின்னிக் கழுகுகளை விட
கேவலமாக மாறியிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. பிணத்தில் பணம்
பார்க்கும் இவ்வகையினரும் பிணந்தின்னி மனிதர்களாகவே பார்க்க வைக்கிறது.
இதுபோல் இன்னும் எத்தனை சடலங்களை எரிக்காமல் மூடிமறைத்து பணம்
பார்த்திருப்பார்களோ நமக்குத் தெரியவில்லை, அந்த தகன மேடையில் தங்கள்
உறவினர்களின் சடலங்களை ஒப்படைத்தோர்கள் உண்மையாகவே சடலங்கள்
எரிக்கப்பட்டதா? என்கிற மன உளைச்சலையும்,மன வலியையும்,
தர்மச்சங்கடத்தையும் நிச்சயம் இம்மாதிரியான ஈனப் புத்திக்காரர்கள்
உணர்ந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனிதர்களாக மண்ணில் வாழ
பிடிக்காமல் கொடிய மிருகங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அனேகமாக
இதற்குப் பின்னால் மாபெரும் சதிக்கும்பல் இருப்பது மட்டும் உறுதியாகத்
தெரிகிறது, செயலிழக்காத உடற்கூறுகளை விற்கும் சமூக விரோதிகள், பிரேத
பரிசோதனையின் மூலம் மாணவர்களுக்கு பாடமெடுக்கும் மருத்துவக் கல்லூரிகள்,
இன்னும் இறந்த உடலில் பணம் பார்க்கும் எத்தனையோ முதலாளிகளென்று இதில்
யார், யார்? தொடர்புடையவர்களாக இருக்கிறார்களென்று நமக்குத் தெரியாது,
ஆனால் நிச்சயமாக ஒன்றைச் சொல்லி விடலாம் மனிதநேயமற்ற மக்கள் தமிழகத்தில்
பெருகிக்கொண்டு வருகிறார்கள் என்பதுதான் அது,,, சமூகச் சீரழிவிற்கான
மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இச்சம்பவம் இருப்பதை யாராலும் மறுத்துவிட
முடியாது. இதனை சமூகம் செய்யும் ஊழலாக எடுத்தாளப்பட வேண்டும். ஊழல் யார்
செய்தாலும் அது குற்றமே,,, என்கிற மனப்போக்கு அப்போதுதான் நமக்கு
ஏற்படும். இந்த அதிர்ச்சி சம்பவத்தை கேட்டதிலிருந்து
இத்தமிழ்ச்சமூகத்தின்­ மீது நம்பிக்கை இழக்க நேரிடுகிறது. பிணந்தின்னி
மனிதர்களிடமிருந்து பிணங்களே தங்களை காப்பாற்றிக் கொள்ளட்டும் என்கிற
மனப்போக்கு இத்தமிழ்ச்சமூகத்தில்­ வந்தாலும் ஆச்சர்யப் படுவதிற்கில்லை,,
கல்லறைகளும் காசாகத் தெரிவது மனிதர்களுக்கு மட்டுமே,,, என்கிற உண்மை
இச்சம்பவத்தின் மூலம் வெளிபட்டிருப்பது மிகுந்த வேதனையாக இருக்கிறது.மனித
இனம் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும்.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்