உழைத்து வாழ வேண்டும் - ஷீலா கோஷ்

ஷீலா கோஷ் என்கிற முதியவருக்கு தற்போது 87 வயதாகிறது இன்னமும் அவர்
உழைத்துக் கொண்டிருக்கிறார். யாருடைய உதவியும்,அனுசரிப்பும் இன்றி தன்
சொந்த உழைப்பில் உயிர் வாழ்கிறாரென்றால் தன்மானத்தில் கூட உழைப்பும்
கலந்திருக்க வேண்டுமென்று நமக்கு அவர் உணர்த்துகிறார் என்றே பொருளாகும்.
இந்தியாவின் கிழக்குப்பகுதியான
மேற்குவங்கம் மாநிலத்தில் பாலி என்ற ஊரில் வசிக்கும் இவரை 2012ம் ஆண்டு
முகநூலில் ஒரு தோழர் பகிர்ந்திருந்தார் . அன்று கண்ட அதே உழைப்பு ,அதே
சுறுசுறுப்பு அவரிடத்தில் இன்றளவும் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம்
உழைப்புதான் முன்னிலை பெறுகிறது. நிலப்பிரபுத்துவம் பிரபலமடைந்து தன்
ஆதிக்கத்தின் கீழ் அனைத்து உழைப்பாளர்களையும் சுரண்டி மேலெழும்
காலனியத்தின் நடுவில் தன் அயராத உழைப்பால் மட்டுமே நான் உயிர்வாழ்வேன் என
உறுதியெடுத்து அதன்படியே வாழ்ந்தும் காட்டி வர்க்கச் சுரண்டல்களுக்கு
இவர் சவால் விடுகிறார். தனக்கு உறுதுணையாக இருந்த ஒரே மகனை
இதயநோயானது பிடித்துக்கொள்ள 2012ம் ஆண்டு அவர் மரணித்துவிடுகிறார்.
தனக்கென துணையாக யாருமில்லாத தனியொருவராய் சமூகத்தில் தள்ளப்பட்ட
அம்மூதாட்டி விரக்கதியடையவில்லை அதற்கு மாறாக விழித்தெழுகிறார் முழுமையாக
உழைப்பின் மீது நம்பிக்கை வைக்கிறார்.
உழைப்பெனும்
உன்னத எண்ணத்தில்
தினமும்
பாலியிலிருந்து
கொல்கத்தாவுக்கு வந்து
தின்பண்டங்களை விற்று
அதில் கிடைக்கும் வருமானத்தில் தன்னுயிரை தன்மானத்தோடு மரணத்திடமிருந்து
மீட்டெடுத்து வாழ்கிறார்.
அவரது கண்ணியமும் உழைப்பின் மீதான அதீத நம்பிக்கையும்
வாழ்வின் இறுதிவரை
உழைத்து வாழ வேண்டுமென்கிற சிந்தனையை நமக்குள்ளே விதையாகிறது. பல
தொண்டு நிறுவனங்கள்
அவரின் நிலை கண்டு உதவ முன்வந்த போதும்
முதாட்டி தன் உழைப்பால் வாழ்க்கையை தீர்மானிப்பதே சரியாக இருக்கும் ஆகவே
எனக்காக உதவ விரும்புவோர் என் திண்பண்டங்களை வாங்குங்கள் , வாங்கிய
திண்பண்டங்களை ஒருபோதும் வீணடிக்காதீர்களென்று­ அன்பாக கூறி சொந்த காலில்
நிற்க முனைந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறாரென்றால்
இது உழைப்பிற்கு கிடைத்த வெற்றிதானே,,,இன்று அவர் ஸியாம்பஜார் என்கிற
இடத்தில் தினமும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
நம் தமிழ்க் கவிஞன் படைத்து விட்டுச் சென்ற "உழைத்து வாழ வேண்டும் ,
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே" என்கிற உன்னதமான வரிகளானது உண்மை
உழைப்புக்கு ஊன்றுகோலாய் அமையத்தானே செய்கிறது.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்