பெத்த கடனுக்கு,,,

வெவரமில்ல
வெலாசமில்ல
வயித்துக்குள்ள
நாயிருந்தேன்
கொழந்தையா

பத்து மாசமா
தொப்புள் கொடியில
ஊஞ்சல் கட்டி
நானும்
வெளையாடினேன்

வலிச்சிருக்கும்
ஒனக்கு
சொகமா நீயும்
அனுபவிச்ச
அந்த வலிய

ஒலகம் எப்படியிருக்குதுனு ஊட்டு வேல
செஞ்சபடியே
சொல்லி கொடுத்த
எதையும் மறக்கல
நான்

எல்லாத்தையும்
காதுல வாங்கி
கடைசில எட்டி
ஒதச்சேன்
வயித்துல

நான் ஒதச்சதுல
வெளிய வர
துடிக்கிறேன்னு
நீ தெரிஞ்சி
பிரசவ வலிய
தாங்கின

கவருமெண்ட்டு ஆஸ்பித்திரில
நான் அழுதபடியே
கெடக்கறேன்

காரணம்
எனக்கு மட்டுந்தான் தெரியும் அம்மா

என்னைய
வெளிய எடுக்க
உன் வயித்த
கிழிச்சி தச்சியிருங்காங்களே
அதுக்காகதாம்மா
நான் அழரேன்,,,

அதுகூட தெரியாம
பசிக்கு நான்
அழரேன்னு
பாலூட்ட துடிக்கிறியே பாவமா இருக்குதுமா
உன் நெலம

என்னைய பெத்த
கடனுக்காக
இப்பவே ஒனக்காக
மனசுல பதிஞ்சு வச்சிட்டேன்மா

எத்தன
வருஷமானாலும் ஒனக்கு நான்
தாயாக இருப்பேன்னு
இப்பவே ஒனக்காக
மனசுல பதிஞ்சு வச்சிட்டேன்மா,,,

Comments

 1. "என்னைய
  வெளிய எடுக்க
  உன் வயித்த
  கிழிச்சி தச்சியிருங்காங்களே
  அதுக்காகதாம்மா
  நான் அழரேன்,,," என்ற
  உண்மை வரிகளை
  நான் விரும்புகின்றேன்!

  ReplyDelete
 2. தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்