சென்னையில் மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் பல்வேறு சிக்கல்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு­­ மத்தியில்
மெட்ரோ ரயில் திட்டம் திறந்து வைக்கப்பட்டது . சென்னைக்கு வருகை
தருவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற இவ்வேளையில் மெட்ரோ
ரயில் திட்டம் ஒரு வரவேற்பான செயல்திட்டமாக கொண்டுள்ளது. இதற்கிடையில்
சுற்றுச்சூழலை மாசடையச் செய்கிறது மற்றும் பழம்பெரும் வரலாற்றுச்
சின்னங்கள் அழிக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் இத்திட்டத்திற்கு
எழுந்த வண்ணம் இருந்த போதிலும் மக்களின் போக்குவரத்துத் தேவை கருதி
பல்வேறு கட்டங்களாக திட்டம் செயல்பாட்டுக்கு வந்து அதன் முதற்கட்டமாக
திறப்பு விழாவும் நடைபெற்று விட்டது.
மெட்ரோ ரயில் சேவையில் பாராட்டுதலுக்குரிய விஷயம் அதன் ஓட்டுநர் சேவையில்
பெண்களை அனுமதித்திருக்கிறார்­­கள்
என்பதே,கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில்களை இயக்க பிரீத்தி
மற்றும் ஜெயஸ்ரீ என்ற அந்த இரு பெண் பைலட்டுகளை நியமித்துள்ளார்கள்.
தற்போது இவர்களுக்கு 20 வயதுதான் ஆகிறது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும்
கம்யூனிகேசன் படிப்பில் பட்டயம் பெற்றுள்ள இவர்கள், கடந்த 2013ஆம் ஆண்டு
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தனர்.
அதன்பின்னர் அவர்களுக்கு மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து முறையான
பயிற்சி அளிக்கப்பட்டு தற்போது பயிற்சி முடிவடைந்த நிலையில், மெட்ரோ
ரயிலை இயக்கும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள­­்.
அவர்களின் பணி சிறக்கவும் சேவையினை தொடரவும் வாழ்த்துக்கள். இவ்வகையிலான
கடினமான துறைகளில் பெண்களை பணிக்கமர்த்துவது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.அதே
வேளையில் மெட்ரோ ரயில் சேவையின் மிகப்பெரும் குறைபாடு அதன்
விலைப்பட்டியலாகும். மெட்ரோ ரயில் பயணக்கட்டணம் ஏழை பாமர மக்களுக்கும்
நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஏற்றதாக இல்லை, பெருமுதலாளிகளுக்கு
ஏற்றதாகவே நிர்ணயிக்கப்பட்டிருப­­்பதனால் இது ஏமாற்றமே தருகிறது. ஒரு
சராசரி வர்க்கப் பயணர் பேருந்தில் பயணிக்க திட்டமிடுகையில், தன்
கையிருப்புக்கேற்றவார­­ு மஞ்சல்பலகை,பச்சைப்பல­­கை, வெள்ளைப்பலகை, என
மாநகரப் பேருந்து வகைகளில் தன் கையிருப்பிற்கு ஏற்ற பேருந்தை
தேர்ந்தெடுத்து பயணிக்கிறான் இதில் சொகுசுப் பேருந்தும்,மிக சொகுசுப்
பேருந்தும் அவனது கவனத்தில் இடம்பிடித்ததே இல்லை இது எதார்த்த நடைமுறையாக
இருக்கிறது. இதிலும் பேருந்துப் பயணம் செலவு பிடிக்கிறது என்பதனால் மாநகர
மின்சார ரயில்சேவையையே அதிகம் விரும்புகிறார்கள் . இவற்றோடு
ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட மிக சொகுசுப் பேருந்தின் கட்டணத்திற்கு நிகராக
மெட்ரோ ரயில் பயணக் கட்டணம் இருக்கிறது. ஆக மீண்டும்
முதலாளித்துவத்திற்கா­­க ஆரம்பிக்கப்பட்டதே மெட்ரோ ரயில் சேவை என்பதை
அரசானது நேரடியாகவே தெளிவுபடுத்தியிருக்க­­ிறது. இதில் பாதிக்கப்பட்ட ஏழை
பாமர மக்களின் நிலமையை அரசானதது உணருமா? என்றும் தெரியவில்லை,அப்படி
உணர்ந்தாலும் மக்களை கண்டுகொள்ளாது என்பதையும் அரசின் செயல்பாடுகள்
நமக்கு நன்றாக உணர்த்துகிறது.எது எப்படியோ சென்னையில் மெட்ரோ
ரயில்திட்டம் மிகுந்த வரவேற்பு பெற்றிருந்தாலும் பாமர மக்களும் , நடுத்தர
வர்க்கத்தினரும் பயணப்படுவதை புறக்கணிப்பார்கள். நம்மை பொருத்தவரையில்
ஆடம்பர பொருளங்காடியை வேடிக்கை மட்டுமே பார்த்துவிட்டு காலி பாக்கெட்டை
துழாவி வெறுங்கை வீசி நடைபோட பழகிப்போனதின் பட்டியலில் மெட்ரோ ரயில்
சேவையும் சேர்த்துக்கொள்ளலாம் . அதை தவிர்த்து வெறெதையும் மெட்ரோ ரயில்
சேவை நமக்கு உணர்த்திடவில்லை. ஒருவேளை அன்னாந்து பார்த்தாலே காசு
கேட்பார்களோ என்கிற அச்சம்தான் மனதிலெழுகிறது,கேட்டா­­லும் கேட்பார்கள்
ஆளும் அதிகார வர்க்கத்தினர்.இதற்காக முகூர்த்த நாள்,நல்லநேரம்,ராகு, கேது
என்றெல்லாம் பார்த்து திறப்பு விழா வைத்தென்ன பயன்? கட்டணம் சிகரத்தில்
இருக்கையில் கண்சிவந்து மெட்ரோ ரயிலை வேடிக்கை மட்டுமே பார்க்க
வைத்துவிடுகிறது.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்