"விபச்சாரன்" பெண்ணியத்தின் கடைசி ஆயுதம்


நிகழ்காலத்து நவீன வரதட்சனை
சீர்கேடானது வளர்ந்து கொண்டேச்
செல்கிறதே தவிர குறைய
வாய்ப்பேயில்லை என்பதான
சூழலை நாம் காண நேரிடுகிறது.
கவுரவம் , அந்தஸ்து, ஆதிக்கம்,
பணத்தாசை, அடிமைபடுத்தும்
நோக்கம், போன்றவற்றால்
பெண்ணினத்தை
பிணையக்கைதியாக
பார்ப்பதும்,வியாபாரப் பொருளாக
பார்ப்பதும்,என்றுமே அடிமை
பட்டவள் பெண் என்கிற தோற்றத்தை
உறுவாக்குவதும் ஆணாதிகத்தின்
முதன்மைப் பணியாகவே இருந்து
வருகிறது, அந்த
வகையில்"வரதட்சனை"
என்கிற பெயரில் ஆணாதிக்கம்
பெண்ணினத்தை
அடக்கியாளுவதை ஒரு
கலையாகவே சித்தரித்து
செயல்படுத்தி வருகின்றதெனச்
சொன்னால் அது
மிகையாகாது."பணத்தை
பெற்றுக்கொண்டு உடலை விற்கும்
பெண்ணை "விபச்சாரி"
என்றழைக்கும் போது பணத்தை
பெற்றுக்கொண்டு உயிரணுவை
விற்கும் ஆணை ஏன்? "விபச்சாரன்"
என்றழைக்கக் கூடாது" எனக் கேள்வி
எழுப்புவதில் தவறேதும்
இருப்பதாக
தோன்றவில்லை.விபச்சாரியென்று
பெண்ணிற்கு பட்டமளித்தவர்கள்
போகும் ஆண்களுக்கு
உத்தமனென்று
முடிசூட்சியுள்ளார்களே,,,
இதிலும் ஆணாதிக்கம் தானே
முழுமை பெற்றிருக்கிறது.
விபச்சாரம் இழிதொழிலென்றால்
இருவுடலுக்கும் சேர்த்தே
இழிச்சொல்லை வைத்திருக்கலாமே
ஏன் பெண்ணை தாக்கி "விபச்சாரி"
என்ற ஒன்றை மட்டும்
விதைத்துவிட்டுச்
சென்றிருக்கிறார்கள் . கற்பை
பொதுவில் வைத்தால் ஆணாதிக்கம்
அழிந்துவிடுமென்பதை அவர்கள்
நன்கு உணர்ந்துள்ளார்கள். அதைப்
போலவே "தாய் வீட்டுச் சீதனம்"
என்றுச் சொல்வது பெண்ணிற்கு
கவுரவத்தை கொடுக்கும் என்கிற
போலி பிம்பத்தை உறுவாக்குவதை
செம்மையாக செய்துமுடிக்கிறது
ஆணாதிக்கம்.ஆகவே தான்
ஆணாதிக்க சக்திகளை "விபச்சாரன்"
என்றழைக்க வேண்டியிருக்கிறது
விபச்சாரத்திற்கும், வரதட்சனைக்கும்
என்னத் தொடர்பு இருக்கிறதென்று
எதிர் விமர்சனம் இங்கே எழலாம் .
இரண்டிலுமே மதிப்புப் பொருள்
பரிமாற்றத்தை கொண்டிருக்கிறது
ஆனால் இழிச்சொல் மட்டும்
பெண்ணினத்திற்கு வந்து
சேருகிறது,நமது சமூகத்தில்
ஆண்டாண்டுகாலமாக
தொடர்ந்திருக்கும் வழக்க
முறைகளில் மணமான பெண்
கணவன் வீட்டில் வாழ்தல் என்பதாகும்.
ஆகவே மணப்பெண் வாழ்நாளில்
பொருளாதாரச் சிக்கல்களை
சமாளிக்க முடியாமல் திணறக்
கூடாதென்பதற்காக சீதனம்
கேட்கின்றோம் அதையும்
பெண்வீட்டாரின் இஷ்டப்படியே
விட்டுவிடுகிறோம் என்று
வரதட்சனைக்கு புனிதச் சாயம்
பூசுவது யாரென்று
உற்றுநோக்கினால் தெளிவாகவே
தெரிகிறது முழுதும்
ஆணாதிக்கர்கள்தானென்று,,
இல்லற வாழ்வில் இன்பமோ துன்பமோ இருவருமே சரிநிகராகத்தான்
அனுபவிக்கிறார்கள் . ஆணுக்கு
பெண் பெண்ணுக்கு ஆண் என
நின்று வாழ்வியலின் இன்ப
துன்பங்களை பகிர்ந்து கொண்டு
வறுமைச் சவாலை
எதிர்கொள்ளுவது என்பதில்
தனிப்பெரும் சுவாரஸ்யம்
இருக்கிறது. பெண்வீட்டாரிடம்
பெரிய தொகையோ,அல்லது
பொருளையோ பெற்றுக்கொண்டு
இல்லற வாழ்வு சிறக்க ஆண்மகனை
நன்றாக படிக்க
வைத்திருக்கிறேன்,அவனுக்காக
சொத்து சேர்த்திருக்கிறேன் ஆகவே
கொடு பணத்தையென்று
பெண்வீட்டாரிடம் பிடுங்குவது
பச்சைக் கொலைக்குச் சமமாக
இச்சமூகம் பார்வையை திருப்புதல்
வேண்டும், வரதட்சனை பணம் அல்லது
பொருள் பெருதலை மோசடி
என்றோ திருட்டு என்றோ
சொன்னால் அதுவொரு
சிறுகுற்றமாக பார்க்கக்கூடும்
என்பதால் கொலைக்கு நிகராகவே
பார்க்கப்பட வைக்கிறது.எரிவாயு ,
மண்னெண்ணெய், மின்சாரம்,விறகு ,
இப்படியான எத்தனையோ
அடுப்புகளில் "உலை"
கொதிக்கிறதோ இல்லையோ
ஆனால் பெண்ணின் "உடல்"
தினந்தினம் கொதித்து
தீக்கிரையாகி உலைகொதிக்கும்
பாத்திரத்தின் அடியில் சுண்டி கரி
பிடிப்பது போல பெண்ணும் உடல்
கருகி உயிரை பறிக்கும் பல்வேறு
நிகழ்வுகளை பார்த்த வண்ணம்
"வேண்டும் அவளுக்கு வரதட்சனை
கொடுத்திருந்தால் உயிரை
விட்டிருப்பாளா! நம்ம சம்ரதாய
சடங்கை உசாதீனப்படுத்தினாளே
வேண்டும் அவளுக்கு" என்று
நியாயப்படுத்தி விட்டு கடந்து
போகும் அற்ப மனநிலையும்
ஆணாதிக்கத்திற்கு என்றோ
வந்துவிட்டது.இக்கேவல
மனநிலைக்காகவே
ஆணாதிக்கத்தை "விபச்சாரன்"
என்றழைக்கப்பட வேண்டுமேயொழிய
வரதட்சனை கொடுமைகளை
வளர்த்துவிட்டு நாமும் வேடிக்கை
பார்த்தால் வளரும் சமூகத்தில்
எண்ணிலடங்கா அனாதைப்
பிள்ளைகள்,தாய் இழந்த
பிள்ளைகளென்று பெருகி விடும்
அபாயத்திலிருந்து தப்பிக்கவே
முடியாது. பிறக்கும் போதே கணத்த
சுமைகளொடு பிறப்பது
பெண்ணினமாகத் தான் இருக்க
முடியும் பெற்றெடுப்பவளும்
பெண்ணாகத்தான் இருக்கிறாள்
ஒரு தாயாக,,, இதனோடு கூடவே
இச்சமூகம் திணிக்கும் பல்வேறு
சுமைகளை தாங்கிக் கொண்டு
அதனோடு கூடவே பல்வேறு
இழிச்சொற்களை சுமந்து கொண்டு
வாழ்வதற்கு பதில் சாவதே
மேலென்ற எண்ணத்தையும்
இறுதியில் பெறும்
பெண்ணினத்திற்கு
ஆணாதிக்கத்திடமிருந்து
விடுதலை வேண்டுமெனில்
நிச்சயம் அவர்களிடத்தில் "விபச்சாரன்"
பட்டம் புகுத்தப்பட வேண்டும்.
ஆதிக்கத்தை அழியாமல்
இன்றுவரையில் பாதுகாத்துக்
கொண்டிருக்கும்
"வரதட்சணை,கொடை,சீதனம்,சீர்"
என்று பல்வேறு பெயர்களில்
வலம்வரும் சமூகத்து
சீர்கேடுகளுக்கும் , தொடரும்
கொலை மற்றும்
கொடுமைகளுக்கு,
ஆணினத்திற்கு மிகப்பெரும்
பங்குண்டு என்பதால் "விபச்சாரன்"
என்கிற பட்டம் அவர்களித்து
பெண்ணினம் எழுச்சி பெற
வேண்டிய காலச் சூழலை இன்றைய
பெண்ணினச் சமூகம்
பெற்றிருக்கிறது. பட்டத்தை
சுமத்துவதால் ஆணினம் வெட்கி
தலைகுணிந்து நிச்சயம்
பெண்ணினத்திற்கு
விடுதலையளிக்கும் காலம்
வெகுதூரத்தில் இல்லையென்றுச்
சொன்னால் இலக்கை
அடையப்போகிறோம் என்பதில்
இருக்கிறது பெண்ணின
சமூகத்தின் எழுச்சி. ஒவ்வொரு
இடத்திலும் "விபச்சாரன்" என்கிற
முத்திரை குத்தப்பட வேண்டும் .
அது வரதட்சனையிலிருந்து
தொடங்கப்பட வேண்டும்.(2013. Sep 27 ல் ட்விட்டரில் நான் (செந்தழல்.சே "sethu_ss") பதிந்தது.சில காரணங்களால் கணக்கை என்றோ செயலிழக்கச் செய்து விட்டாலும் எண்ணங்கள் உயிர்ப்போடு அப்படியே இருக்கத்தான் செய்கிறது)

Comments

  1. சிறந்த கருத்து.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்