இந்துத்துவத்தின் பிடியில் ஈழத் தலைவரா?

ஈழத்தின் விடுதலைத் தலைவர் மேதகு பிரபாகரனின் உருவச்சிலைகளை இந்துக்
கோவில்களில் நிறுவுவதும் அதனை அரசின் ஆணைக்கிணங்க காவல் துறையினர்
அகற்றுவதும் தொடர்கதையாகியிருக்கி­­றது. விடுதலைப் புலிகளின் இயக்கத்
தலைவர் பிரபாகரனை இந்துக்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஆகவேதான்
குறிப்பிட்ட இந்துத்துவ குலதெய்வ வழிபாட்டில் பிரபாகரனின் உருவச்சிலைகள்
இடம்பெறுகின்றன. முதலில் குலதெய்வ வழிபாடுகளான சிறு தெய்வங்கள் மற்றும்
ஊர் எல்லை காவல் தெய்வங்களான
மாரியம்மன்,அங்காளம்ப­­ன்,கருப்பு,முனி,ஐய்­ய­னாரப்பன், போன்ற தெய்வங்களை
வணங்குதல் என்பது இந்துத்துவத்தில் சேராதென்று கூறப்படுவதை ஏற்க இயலுமா
என்றால் முற்றிலுமாக ஏற்க முடியாதென்றே எடுத்துக்கொள்ளலாம். அவ்வகையான
சிறு தெய்வங்களை வணங்குதல் என்பதை இந்துத்துவத்தில் சேராதென்பதற்கு
அச்சிறு தெய்வங்கள் இடைநிலைச் சாதியினர்களால் வணங்கப்படுவது அதில்
அர்ச்சகர்கள்,பார்ப்ப­­னர்கள் இடம்பெறவில்லை மாறாக இனக் குழுக்களில்
ஒருவரான இடைநிலைச் சாதியரே பூசாரியாக அங்கம் வகிக்கின்றனர் ஆகவே
சிறுதெய்வ குல தெய்வங்களை வணங்குதல் இந்துத்துவத்தில் சேராதென்று
விளக்கமும் அளித்துவிடுகிறார்கள்­­.அவ்வாறு நோக்கினால் இனக் குழுக்களின்
ஒருவரான சக இனத்து பூசாரி தலைமை ஏற்கிறார் என்பதற்காக மட்டுமே சிறு
தெய்வங்கள் இந்துத்துவத்தில் இடம்பெறாதென்றுச் சொல்லிவிட முடியாது.
சிறுதெய்வ வழிபாட்டின் அனைத்துச் சாங்கிய சடங்குகளும் அப்படியே
இந்துத்துவத்தில் இடம்பெறச் செய்கிறது மேலும் இந்துத்துவத்தில் மட்டும்
ஏன் சிறுகடவுள்,பெரியகடவு­­ள் இருக்கிறார்கள் என்கிற கேள்விகளுக்கெல்லாம்
விடைதேடுதலென்பது
ஆற்றில் அளந்துபோடும் அரசிக்குச் சமம் . அந்தளவிற்கு எத்தனையோ தெய்வங்கள்
இந்துத்துவத்தில் இடம்பெற்றிருக்கின்றன­ . சிறுதெய்வ வழிபாட்டில் மேதகு
பிரபாகரனை வணங்குதல் முறையா? என்றால் அதுவும் மூடத்தனமல்லாமல் வேறெதுவாய்
இருக்க முடியும். ஒரு இனக்குழுக்களின் அனைத்து வீடுகளிலும் நிச்சயமாக
சாமியறை,அல்லது கடவுளின்குடில் ஒன்று இருக்கும் அச்சாமியறையில் இடம்
பெறாத மேதகு பிரபாகரனின் உருவம் பொதுவெளியில் பங்கு போடப்படுகிறது.
சாமியறை என்பதும் இங்கே ஏற்கப்படாதென்றாலும் சுட்டிக்காட்டுதலுக்க­­ு அது
தேவைப்படுகிறது.
ஈழத்தை பொறுத்தவரையில் போர்வீரர்களை மட்டுமே தமிழ்ச்சமூகம்
எடுத்துக்கொள்கிறது மாறாக விடுதலைப்புலி போர்வீர்களின்
படைப்புகள்,கலை,இலக்க­­ியம், படைப்புத்திறன்,நிர்வ­­ாகத்திறன் ஆகியவற்றை
புறந்தள்ளியதன் விளைவுதான் தமிழ்ச்சமூகத்தில் மேதகு பிரபாகரன்
கடவுளாக்கப்படுகிறார்­­. புலிகள் வெறும் போர்வீரர்கள் இல்லை அதையும்
தாண்டி படைப்புலகச் சிந்தனையாளர்கள் என்பதை முதலில் உணர்த்தப்பட
வேண்டும். பிரபாகரன் உருவத்தை சிறுதெய்வ வழிபாட்டில் வைத்து வணங்குதலை
விட அவரின் சிந்தனைகள்,செயல்பாடு­­கள் ,ஈழப்படைப்புகள்,போர்­­ யுக்திகள்,
ஆகிய புத்தகங்களை நாமும் படித்து நமது சந்ததிகளையும் படிக்கவைத்து
பார்ப்பதே மிகச் சிறந்தவையாக எண்ணவேண்டும்.இம்மாதம் (ஜூன்) 5ம் தேதி
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில்
அமைக்கப்பட்டிருந்த தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில், சேவுகராய
அய்யனார் கோவிலில் வைக்கப்பட்டிருந்த மேதகு பிரபாகரன் சிலையாகட்டும்,
சென்ற வாரம் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் எல்லைக்குட்பட்ட
சடையாண்டிகுப்பம் கிராமத்தில் ஊருக்கு வெளியே ஐய்யனாரப்பன் கோயிலில்
நிறுவப்பட்ட மேதகு பிரபாகரன் சிலையாகட்டும் இரண்டுமே வெளிபுரத்தில் ஈழ
உணர்வை கொண்டிருப்பதுபோல் தெரியுமே தவிர மறைமுகமாக இன குழுக்களின்
இந்துத்துவத்தையே கொண்டிருக்கிறது. அதுவும் ஒருசார் இன குழுக்களின்
ஆதிக்கம் தலைசிறந்து விளங்க வேண்டுமென்ற நோக்கத்திற்காக மேதகு
பிரபாகரனையும்,ஈழ விடுதலையையும் கேடயமாக பயன்படுத்த முனைந்துள்ளார்கள்
என்பது தெளிவு. உண்மை ஈழ உணர்வும் மேதகு பிரபாகரனும் வெளிபட வேண்டுமெனில்
அது பயிற்சி முறையிலும் புத்தக உறுவாக்க முறையிலும் , பொது இடத்தில் சிலை
நிறுவுதல் முறையிலும் மட்டுமே சாத்தியப்படுமேயொழிய இந்துத்துவ சிறுதெய்வ
குலதெய்வ வழிபாடுகளில் என்றுமே சாத்தியப்படாது என்பதே தெளிவு.
இவ்வெவ்வேறு இடங்களில் ஆளும் அதிகார வர்க்க அரசானது மேற்கொண்ட மேதகு
பிரபாகரன் சிலை அகற்றுதல் நடவடிக்கைகளை இதன் மூலம் நியாயப்படுத்தி
பார்க்கும் கண்ணோட்டம் இருக்குமாயின் அதுவும் இந்துத்துவத்தின்
அடிமைத்தனமாகவே இருக்கும். காரணம் ஆளும் அதிகார வர்க்க அரசானது முழுமையாக
இந்துத்துவத்தை ஏற்றுக்கொண்டதொரு அரசாகும். அதன் பொருட்டு எழும்
செயல்பாடுகளை கண்டித்தல் அவசியப்படுகிறது ஏனெனில், மதம் புனிதமென்றால்
புரட்டுகளே மதமாகும்
என்பதில் தெளிவு
விட்டுவிடுவோம்
அதற்கப்பால்
அது அவர்களது நம்பிக்கை
அவர்களது நிலம்
அவர்களது புரிதல் அதுவாதுவே அவர்களுக்குக் கற்பித்திருக்கிறது
அதனிடமிருந்து வெளியேற கால அவகாசம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது
விரைவில் இந்துத்துவத்திலிருந்­­து அவர்கள் வெளியேறி விட வாய்ப்பும்
உரிமையும் அவர்களுக்கு உண்டு ஆகவே
எழுப்புகிறார்கள் கடவுள் சிலையை
பிரபாகரனாக,,,
ஒருவேளை பிரபாகரன்
ஆதிக்கச் சர்வாதியாக இருந்திருந்தால் ஆளும் அரசானது பாலபிஷேகமே
அரங்கேற்றியிருக்கும்­­. இரவோடு இரவாக ஒரு சிலை அகற்றப் படுகிறதென்றால்
"பிரபாகரனை" பார்த்து பயப்படுகிறது அரசென்று போலிவீரம் பேசுவதை தவிர்த்து
உற்று நோக்கினால்
தெளிவாகத் தெரியும் ஜெவின் "சர்வாதிகாரம்"
சர்வாதிகாரம் களையெடுக்க வேண்டுமெனில் தமிழ்ச் சமூகத்தில் இந்துத்துவ
கடவுளாக மேதகு பிரபாகரனை பாவிக்கும் பார்வை அகற்றப்பட்டு அவரது
சொல்,செயல் சிந்தனைகளே எடுத்தாளப்பட வேண்டும்.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்