அன்று இளவரசன் இன்று கோகுல்ராஜ் நாளை யாரோ? தொடரும் கௌரவக் கொலைகள்

தீர்வுகளைத் தேடி இன்னும் எவ்வளவு தூரம்தான் பயணிக்க வேண்டுமென்று
ஒருமுடிவும் தெரியவில்லை இந்த தமிழ்ச் சமூகத்தில் நிலவும் ஆதிக்க
இந்துத்துவ சாதி வெறியின் அவல நிலைகள் வழித்தடங்களை தடுத்து நிறுத்தி
திசைமாற்றிவிட்டு ஏளனம் செய்கின்றது. எதுவும் மாறிடப்போவதில்லை தொடரும்
எங்கள் கௌவரக் கொலைகளென்று மிகப்பெரும் சவாலையும் சவடாலிட்டுச் தமிழ்ச்
சமூகத்தை அதன் பிடியில் தக்கவைத்துக்கொ(ல்)ள்­­கிறது.அன்று தர்மபுரியில்
இளவரசன் இன்று நாமக்கல்லில் கோகுல்ராஜ் , பெயரும் ஊரும்தானிங்கே மாற்றமே
தவிர அதே தண்டவாளம்,அதே படுகொலை, அதே காதல்விவகாரம், அதே கௌரவக்கொலை, அதே
ஆதிக்கச்சாதி வெறி என்று தொடரும் சாதியாதிக்கத்தின் கட்டவிழ்க்கப்பட்ட
கௌரவக் கொலையென்பது தமிழ்ச்சமூகத்தின் சாபக்கேடென்று ஏன் உணர
மறுக்கிறார்கள்? ஏனென்றால் சாதிவெறியானது இங்கே தாண்டவமாடுவதனால் பல
காதலர்கள் தலைகள் இங்கே தண்டவாளங்களுக்கு இரையாக்கப்படுகிறது.
தமிழ்ச்சமூகத்திற்கான­­ இன்றைய தேவை சாதிமறுப்பு அல்லது கலப்பு
மணங்களேயென்றால் அது மிகையாகாது . ஒரு கவிஞன் எழுதினான் அடிக்கடி அந்தப்
பாடல்வரிகளை மட்டும் நினைவுக் கூர்ந்து மனதிலேற்றிவிடுவது
அவசியமாகப்படுகிறது.
"காதலை பாடாத காவியம் இங்கில்லை
ஆனாலும் காதல்தான் சாபம்!
ஜாதியும் தான் கண்டு ஜாதகம் கண்டானே யாரோடு அவனுக்கு கோபம்!
ராஜாக்கள் கதையெல்லாம் ரத்தத்தின் வரலாறு
ரோஜாக்கள் கதையெல்லாம்
கண்ணீரின் வரலாறு
உறவுக்கும் உரிமைக்கும் யுத்தம் உலகத்தில் அதுதானே சட்டம்!

கடைசி வரியில் இடம்பெற்ற எழுதப்படாத சட்டம் தன் இயக்கத்திலிருந்து
சற்றும் மாற்றிக்கொள்ளவில்லை கௌரவக் கொலையென்று அது இயங்கி
காதலையும்,காதலர்களைய­­ும் கொன்றழிப்பதிலேயே குறியாய் இருப்பதற்கான
சான்றுதான் இந்நிகழ்வு
அன்று இளவரசன் இன்று கோகுல்ராஜ் நாளை யாரோ......... ஒவ்வொரு சாதிவெறி
நிகழ்வுகளுக்கும் சொல்லப்படும் அதே அம்பேத்கரின் வாக்கு இங்கே மீண்டும்
மீண்டும் பதிந்துவிடுதல் தேவைப்படுகிறது அது
"சாதிதான் சமூகமெனில் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்" என்பதே
நிகழ்வு இனி ஒரு பார்வை ,,,
சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார்
பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்து முடித்துள்ளார்.அதே கல்லூரியில்
படித்த சுவாதி என்ற பெண்ணை காதலித்து வந்தார். கோகுல் ராஜ் தலித்
சமூகத்தைச் சேர்ந்தவராக அறியப்படுகிறார். இருவரும் படிப்பை முடித்துவிட்ட
நிலையில், கோகுல்ராஜ் தன் காதலியான சுவாதியை சந்திப்பதற்காக
திருச்செங்கோட்டுக்கு­­­ வந்துள்ளார். இதனிடையே கோகுல்ராஜை பின்தொடர்ந்த
சாதிவெறிக்கும்பல் அவரை கடத்திச் சென்றிருக்கிறது . மகனை காணவில்லையென்று
கோகுலின் தாயார் காவல்நிலையத்தில் புகார் ஒன்றையும் பதிவு செய்துவிட்டு ,
பெற்றோர்களும் காவல் துறையும் தேடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த
வேளையில்,கிழக்கு தொட்டிப் பாளையம் ரயில்வே பாதையில் தலை நசுங்கிய
நிலையில் கோகுல்ராஜின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கோகுல்ராஜை கடத்திய
ஆதிக்கச் சாதிவெறி கும்பலானது கொலை செய்து தண்டவாளத்தில்
வீசியிருக்கிறது. காதலுக்கு சாதியம் ஒரு தடையெனில் சவுக்கடி
காதலுக்கு விழவேண்டுமே தவிர சாதியத்தின் மீது விழுந்துவிடக் கூடாதென
ஆதிக்கச் சாதிவெறியர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் என்பதற்கு கோகுல்
ராஜின் ரத்தவெள்ளம் உணர்த்தி
விட்டுச்சென்றிருக்கி­றது.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்