பிரபஞ்சத்தின் காதலியவள்

தனிமையை தேடிப்போகிறாள்
அவள்

பூக்களை
மேய்ந்து விட்டு இன்பத்தேனை சுவைத்துண்டதும்
கண்டும் காணாமல்
உதறித் தள்ளிடும் வண்டுகளாய்
மேய்ந்த ஆண்மக்கள் விலைமகளென்று பெயரிட்டார்கள்
அவளுக்கு

நிர்வாண கோலத்தில் நிழலிருந்தாலும்
அனல் பார்வை வீச்சால்
அடைய துடிக்கிறார்கள் அவளின் அந்தரங்க
உடல் பாகத்தை

பார்வைகள் பலவிதமாய் ஒவ்வொன்றும்
புதுவிதமாய் பட்டுத்தெறித்தன

ரசனைகளின் வெளிப்பாடு
பிடித்த பகுதிகளை அவர்களே
தேர்வு செய்கிறார்கள் அவர்களே மதிப்பீடும் போடுகிறார்கள்
போகப் பொருளாகத்
தெரிகிறாளவள் ஆண்மக்களுக்கு

பேசிய பேரப்பணம்
வந்து சேரவில்லையாம் தரகனை திட்டிவிட்டு தரதரவென
அவளை இழுத்து
தாகம் தீரும்வரை புணர்ந்துவிட்டு கடைசியில் கைவிலங்கிட்டான் காவல்காரன்

வழக்கு வழுக்கி விழந்தது வாயிற்படியில்
அவளைப்போலே
எத்தனையோ
பெண்கள் வரிசையில்
அவளும் ஒரு
எண்ணிக்கை சேர்க்கையில்

நிச்சயமாய் அவள்
ஆடை அணிந்திருக்கிறாள் சாட்சிக் கூண்டில்
உடல் நிற்கிறது

நீதி தேவதையின்
கண்களோடு
காதுகளையும் சேர்த்திங்கேதான் கட்டியிருக்கிறார்களே

கடைசியாக நோட்டமிடுகிறாளவள்
சாட்சியம் கேட்கும் நீதிபதியை

அப்பப்பா!!!
ஒரே வியப்போடு பேரதிர்ச்சியும்
அவளுக்கு

என்னை விட
அதிகமாக நீதிதேவதைதான் வன்புணர்ச்சிக்கு ஆளாகியிருப்பாள்
உண்மைகளை
உணர்ந்த பொழுதில்
தரகர் கட்டினான்
அபராதப் பணத்தை

இனி கூடுதலாய் புணர்தலுக்கு
நேரமொதிக்கியாக வேண்டுமவள்

கிடைக்கும் இடைவெளிகளில் இயற்கையை
ரசித்துவிட
தனிமையை தேடிப்போகிறாள்
அவள்

மனதிலெழும் இன்பத்தின் பிம்பத்தை எப்போதும் தூரத்திப் பிடிக்கத் துடிக்கும்
பிரபஞ்சத்தின் காதலியவள்
கடைசிவரை
காட்சிப் பொருளாகவே
இருக்கிறாள்

மனசாட்சிகள் பல
அவளுக்குப் பின்னால்
இன்னமும்
சிரித்துக் கொண்டே தானிருக்கிறது,,,

Comments

  1. உணர்வுப்பூர்வமான அருமையான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்