(ஓமந்தூர்) ராமசாமி ரெட்டியின் சொந்த ஊருக்கு வந்த சோதனை

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சுதந்திர இந்தியாவில் ஒருங்கிணைந்த சென்னை
மாகாணத்து முதல் முதலமைச்சராக இருந்தவர். மார்ச்,1947 –ஏப்ரல் ,1949
வரையில் முதலமைச்சர் பதவியில் அங்கம் வகித்து பல்வேறு மக்கள்நலத்
திட்டங்களை செயல்படுத்தினார் .காந்தியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு
இந்திய தேசிய காங்ரஸில் இடம்பெற்றிருந்த இந்து மத பற்றாளராய்
இருந்திருக்கிறார்(கா­­ந்தியின் யுக்தி) கடைசிகால ஆன்மீகத்தில்
ஈடுபாடென்று முடிகிறது அவரது பயணம் . விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனம்-புதுச்சேர­­ி தேசிய நெடுஞ்சாலை அருகில்,ஓமந்தூர் அரசு
மேல்நிலைப்பள்ளியின் பக்கத்தில் தமிழக அரசு அவரை சிறப்பிக்கும் வண்ணம்
"ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மணிமண்டபம்" நிறுவியுள்ளது. அவர் பிறந்த
ஓமந்தூர் கிராமத்தின் நிலை என்னவாய் இருக்கிறதென்று பார்வையிடத்
தேவையில்லை சமூகத்தின் அழிவுச் சம்பவங்களுக்கு சாட்சியாகவே நிற்கிறது
அக்கிராமம். அதுவும் இந்துத்துவ ஆதிக்கச் சாதியத்தின் பிடியில் முன்னாள்
முதலமைச்சரின் ஊரென்றால் ஏன் இதனை சமூகச் சீர்கேடாக பார்க்கக்கூடாது?
1947இல் சென்னை கோயில் நுழைவு அதிகாரமளிப்புச் சட்டத்தை ஏற்படுத்தி
அச்சட்டத்தின் மூலம் தலித்துகள், தாழ்த்தப்பட்டோர் இந்து கோயில்களுக்குள்
நுழைய வழிவகை செய்யப்பட்டது இவரின் காலத்தில்தான்,அதனை தன் சொந்த
கிராமத்திலும் செயல்படுத்தினார் . ஆனால் இன்றைய நிலை அவ்வாறில்லை சாதியக்
கலவரங்களோடு பிணைந்துவிட்டது என்றால் சட்டம் செயலற்றுக் கிடக்கிறதென்றே
பொருள்படுகிறது. நிகழும் சமூகவிரோதச் சம்பவங்கள் "நம்பிக்கையற்ற ஒரு
அரசிற்கு மத்தியில் நடைபிணமே மக்கள்" என்கிற பொதுபுத்திக்கு எளிதாய்
எட்டிவிடுகிறது.
ஓமந்தூர் கிராமத்தில் "ஓசியம்மன்" என்கிற கோவில்
தலித்துகளுக்கும்,வன்­­னியர்களுக்கும் பொதுவான வழிபாட்டுத் தளமாக பல
ஆண்டுகளாகவே இருந்துவந்தச் சூழலில் தற்போது அக்கோவிலை மையப்படுத்தி
சாதியக் கலவரங்கள் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த (8.6.2015)
திங்கட்கிழமையன்று ஓசியம்மன் கோவிலுக்கு ஊர்த்திருவிழா எடுக்கப்பட்டது.
அன்று தலித்துகள் கோவில் விழாவில் கலந்து கொண்டு அவர்களுக்கா
ஒதுக்கப்பட்ட (ஒதுக்குப்புறமாக) இடத்தில் பொங்கல் வைத்து வழிபாடு
செய்திருக்கிறார்கள் அப்போது அங்கிருந்த வன்னியச் சமூகத்தினர் கேலிக்
கிண்டலோடு அவர்கள் பொங்கல் வைத்த இடத்தில் பட்டாசையும் கொளுத்திப்
போட்டிருக்கிறார்கள்.­­ அதிர்ச்சியில் சிதறி ஓடியிருக்கிறார்கள்
தலித்துகள் . பிறகானச் சூழலில் மாலை ஆறுமணிக்குமேல் இரு சமூகமும்
கடுமையாக மோதிக்கொள்ள சாதியக் கலவரம் அங்கே மூண்டிருக்கிறது. திடீர்
தாக்குதலுக்கு தலித்துகள் ஆட்பட்டமையால் அவரவர் தங்கள் குடும்பங்களை
காப்பாற்றிக் கொள்ள குடும்ப உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள
வயல்வெளி யில் இரவுமுழுக்க தங்க வேண்டியச் சூழலுக்கு தலித்துகள் மீதான
வன்முறை அரங்கேறியிருக்கிறது.­­ வழக்கம் போல காவல்துறையினர்
காலதாமதத்தோடு அக்கிராமத்திற்குச் சென்று முதற்கட்டமாக தலித்துகள்
தரப்பில் இருபத்தைந்து பேரையும்,வன்னியர்கள்­­ தரப்பில் பத்து பேரையும்
கைது செய்திருக்கிறது. வன்முறையால் மிகவும் பாதிக்கப்பட்ட தலித்
சமூகத்தின் மீதுதான் வழக்கம்போல சட்டம் பாய்ந்திருக்கிறது. பிறகு
செவ்வாய் அன்று தலித் சமூகத்தில் ஒரு நபரை வன்னியச் சமூகத்தினர் கல்லால்
அடித்திருக்கிறார்கள்­­ மீண்டும் பதற்றநிலை அங்கே சூழ்ந்திருந்த வேளையில்
காவல்துறையினர் இரண்டாம் கட்டமாக அதே தலித் சமூகத்தினர் பத்துபேரை
கைதுசெய்திருக்கிறது.­­ கலவரச் சூழலின் காரணமாக தற்காலிக ஊரடங்கு உத்தரவு
அறிவிக்கப்பட்டு வெள்ளியன்றுதான் ஓரளவிற்கு முடிவுக்கு வந்தது
சாதிக்கலவரம். கடந்து பத்து ஆண்டுகளாகவே தொடர்ந்திருக்கிறது ஓமந்தூரில்
சாதிய மோதல். முன்சம்பங்கள் அனைத்தும் அவ்வளவான பெருந்தாக்கத்தை
ஏற்படுத்தியல்லை ஆனால் சாதிய ஆதிக்கத்தின் உச்சநிலையை இன்றைய
காலக்கட்டத்தில் ஒரு முன்னால் முதலமைச்சரின் சொந்த கிராமம்
சிக்கிக்கொண்டிருக்கி­­றது. வழக்கம்போல தங்களின் பேனாவின் ஜால
எழுத்துக்களால் வெறுமனே "இருதரப்பினரிடயே மோதல்" என்கிற இயலாதத் தனத்தோடு
செய்தி வெளியிட்டிருக்கிறது தமிழ்ச் செய்தி ஊடகங்கங்கள். சுதந்திர
இந்தியாவின் முதல் தமிழக முதலமைச்சரின் சொந்த கிராமம் சாதியில் சிக்கி
சீரழிவதையும் வேடிக்கைதான் பார்க்கிறது இந்தச் சமூகமும் , சமூகத்தை
வழிநடத்தும் அரசும்,, தொடர் தலித் விரோத போக்கு, சாதியாதிக்கத்தின்
வன்முறை வெறியாட்டம், அடிமைபடுத்துவதில் மும்முரம், இந்துத்துவ
பார்ப்பானிய வளர்த்தெடுப்பு, என்று ஒட்டுமொத்தமாக தமிழ்ச்சமூகத்தை
பிளவுபடுத்தி கடைசிவரையில் அடிமைச் சமூகத்தை ஆதிக்கம் செய்வதிலேயே
உயர்ந்து நிற்கும் சாதிவெறிகளுக்கு மத்தியில் மனிதத்தை மீட்டெடுக்காமல்
செயலற்று நிற்கும் தமிழகத்தின் நிலையை எண்ணிப்பார்க்கையில்
வெறுப்பைத் தவிர வேறோன்றும் எழவில்லை, கல்வி பயின்றாலும் கடைசி வரை
தூக்கி பிடுப்போம் சாதியை ஏனெனின் நாங்கள் ஆண்டப்பரம்பரையென பெருமைபட
பேசும் சமூகத்திற்கு முன்னால் தமிழத்தின் முதல் முதலமைச்சர் ராமசாமி
ரெட்டியின் நலத் திட்டங்கள் தோற்றுத்தானே போகும், எது எப்படியானாலும்
தொடர்ந்தே அரங்கேறும் இங்கே சாதிக் கலவரங்கள் ஏனெனில் இந்துத்துவம்
தமிழகத்தை வீழ்த்தாமல் உறங்காது என்பதே அதன் வளர்ச்சியின்
வெளிபாடாயிருக்கிறது.­­ "ஜனநாயகம் சிறந்தோங்குகிறது" என்பதன் மேல்
நம்பிக்கையில்லா தீர்மானத்தை முதலில் கொண்டுவர வேண்டும்.

Comments

  1. அந்தக் காலத்ததை விட இந்தக் காலத்தில் படித்தவர்கள் மத்தியில் கூட சாதி வெறி அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம்? அரசும், கல்வியும், பொது சமூகமும் சாதி ஒழிப்பில் தவறியுள்ள என்பது தான். சாதி சங்கங்கள், சாதிக் கட்சிகள், சாதி ஊடகங்கள் என தொடர்ந்து இருந்து வருமானால் என்று தான் சாதி ஒழியும் சொல்லுங்கள் .. :((

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்