நன்றி சொல்ல வந்திருக்கிறேன் 200 பதிவுகள் முடித்த கையோடு,,,

எத்தனையோ இன்னல்கள் வந்தாலும் எழுதுவதை நிறுத்த மனமில்லை எனக்கு,,, தோழனே
நீ எழுது நாங்கள் துணையாக நிற்கிறோமென்று ஏணிப்படியாய் எத்தனையோ முகங்கள்
எத்தனையோ தளங்களிலிருந்து ஏற்றிவைத்து என்னை அழகுபடுத்துவதனால் எழுதுவதை
உயிராகவே நேசிக்க இதயம் பழகித்தான் போனது . இவ்வாண்டில் (2015) 200
பதிவுகளை எழுதி முடித்திருக்கிறேன் அத்தனை பதிவுகளும் சராசரியாய் 100
பார்வையாளர்களுக்கு மேல் தாண்டியவை எனும்போது இரட்டை சந்தோஷம் எனக்குள்
முளைத்துவிடுகிறது. ஆகவே நன்றி! சொல்ல வந்திருக்கிறேன். மனிதம் இன்னமும்
உயிர்ப்போடிருப்பது அன்போடு கலந்தெழும் நன்றியில்தானே!
எனக்கு சமீப காலமாகத்தான் "வலைப்பூ" அறிமுகமானது எழுதும் வாய்ப்பு கடந்த
காலங்களில் எனக்கு கிட்டியதேயில்லை, இதனை எனது 100வது பதிவிலேயே
தெரிவித்துவிட்டேன். ஆனால் இன்றதை காணும்போது இத்தனை பதிவுகளை எழுதி
விட்டோமா! எனும் ஆச்சர்யத்திலிருந்து நான் மீளவேயில்லை, காரணம் இணைய
வெளியில் எனக்கு முதலறிமுகம் பேஸ்புக்கும் , ட்விட்டரும் மட்டுமே
அதைத்தாண்டி சென்றதேயில்லை, இவ்வாண்டில் சிகரத்தின் முதல்படியிலேயே
தொங்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் மீண்டெழுந்து முன்னேற்றப் பாதைக்கு
முத்தமிடுவேன். தமிழ்ச் சமூகம் என்னை தூக்கி வளர்த்திருக்கிறது,
நன்றியுணர்வோடு செயல்படுதல் என்பதென் முதற்கடமையாகும். ஊக்கமளித்து
எழுதத் தூண்டிய அனைத்துள்ளங்களுக்கும­் என் மனமார்ந்த நன்றியினை
தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பிட்ட நபர்களைக்கூட நான் கைகாட்ட
முடியாது,எனது கைகளுக்கு வலுசேர்த்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
பேஸ்புக்,ட்விட்டர், கூகுள்ப்ளஸ் ,வலைப்பூவுலகம்,­ என அனைத்து
தோழர்களையும் வணங்கி என் நன்றியை சமர்ப்பிக்கிறேன். பெயர் பட்டியல்
வெளியிட்டால் பெயர் விடுபட்டுவிடுமோ! என்கிற அச்சம் எனக்கிருக்கிறது.
ஆகவே மீண்டுமொருமுறை என் தமிழ்ச் சமூகத்தையும்,தோழர்கள­ையும்,
நினைவுபடுத்தி மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறே­ன்.

"புதியதோர் ஜனநாயகம் பூத்துக் குலுங்கிடவே தமிழ்தாய் ஊட்டிய
பாலில் ஒருதுளி
விதைகளுக்கிடுகிறேன்
விரைவில் அவை முளைத்தெழலாம்"

Comments

  1. மென்மேலும் சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்