Posts

Showing posts from June, 2015

காதல் தோல்வி

Image
அவன் என்னை
மறந்தும் கடந்தும் எங்கோ சென்று
விட்டதனால்

என் காதல்
தோல்வியை
தழுவியதாய்
காற்றிடம் புலம்பிய பொழுதுகளில்

அழுது விடாத
அதன் அரவணைப்பு
என் கண்ணீருக்கு ஆருதலானது

தோல்வி என்பதை வார்த்தைகளில் உபயோகிக்காதே

உனக்கான சூழலது சந்தர்ப்பங்கள்
சரிவர
அமையாமைக்கு
நீயே காரணம்

புல்லாங்குழல்
வாசிக்கப் பிறந்தவை
அன்றி
வெந்நீரூற்றி விளையாடுதல் முறையோ

துடைத்துவிடு
கண்ணீரை
அழாதே
என்முன்னால்

காற்றின் கரங்கள் எனைத்தழுவி
அரவணைக்க
ஆருதல் வார்த்தைகள்
மனதினை வருடிவிட

காதலில் நான்
தோற்றேனென
மீண்டும்
மறுமொழியிட
மனதிற்கு
தோன்றவில்லை

தோல்வியென்பது
என்றுமே
காதலுக்கில்லையென
இதமான இளங்காற்று உணர்த்திவிட்டு

நகர்கிறது
இன்னொரு காதல்
தோல்வி கண்ட
தோழியினடத்தில்,,,

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை

Image
சென்னையில் பல்வேறு சிக்கல்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு­­ மத்தியில்
மெட்ரோ ரயில் திட்டம் திறந்து வைக்கப்பட்டது . சென்னைக்கு வருகை
தருவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற இவ்வேளையில் மெட்ரோ
ரயில் திட்டம் ஒரு வரவேற்பான செயல்திட்டமாக கொண்டுள்ளது. இதற்கிடையில்
சுற்றுச்சூழலை மாசடையச் செய்கிறது மற்றும் பழம்பெரும் வரலாற்றுச்
சின்னங்கள் அழிக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் இத்திட்டத்திற்கு
எழுந்த வண்ணம் இருந்த போதிலும் மக்களின் போக்குவரத்துத் தேவை கருதி
பல்வேறு கட்டங்களாக திட்டம் செயல்பாட்டுக்கு வந்து அதன் முதற்கட்டமாக
திறப்பு விழாவும் நடைபெற்று விட்டது.
மெட்ரோ ரயில் சேவையில் பாராட்டுதலுக்குரிய விஷயம் அதன் ஓட்டுநர் சேவையில்
பெண்களை அனுமதித்திருக்கிறார்­­கள்
என்பதே,கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில்களை இயக்க பிரீத்தி
மற்றும் ஜெயஸ்ரீ என்ற அந்த இரு பெண் பைலட்டுகளை நியமித்துள்ளார்கள்.
தற்போது இவர்களுக்கு 20 வயதுதான் ஆகிறது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும்
கம்யூனிகேசன் படிப்பில் பட்டயம் பெற்றுள்ள இவர்கள், கடந்த 2013ஆம் ஆண்டு
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியில் ச…

அடிப்பதை நிறுத்தாதே அப்பா!

Image
விடியற் காலையில்
பால் வாங்க
நான் போகிறேன்
கடைக்கு,,,

மின்கட்டணம்
நாளை கட்டவேண்டும்
இன்றே கொடுத்துவிடு அட்டையை
என்னிடத்தில்,,,

நுகர்வோர்
அங்காடியின்
கூட்ட நெரிசலை
நான் தாங்குவேன்
கொடு இப்படி
என்னிடத்தில்
ரேஷன் அட்டையை,,,

இன்று முழுவதும் முகூர்த்த தினமாம் அனைத்து நிகழ்சிகளிலும்
நீயிருக்க வேண்டும் குழந்தைகளை
என்னிடம் விடு
காலை பள்ளியில்
விட்டு மாலையில் வீட்டுப்பாடங்களை
நானே கவனித்துக் கொள்கிறேன்,,,

ஞாயிறு விடுமுறை
வீட்டை நான்
நாய் போல காவல்
காக்கிறேன்
நீ கவலைமறந்து
செல் கடற்கரைக்கு,,,

இப்படி அனைத்துச் சுமைகளையும்
அணைத்துக் கொண்டு அடிமையாய்
வாழ்வதுனக்கு பிடித்திருந்தும்

வாழ வந்தவளின்
பேச்சைக் கேட்டு
சனி ஒழியட்டும்
என

அப்பா!!!
உன்னை எங்கு
நான் விற்று விட்டு
வந்தேனோ
அதே
முதியோரில்லச் சந்தையில்
என்னை விலைபேசுகிறான்
உன் பேரன்,,,

பேரம் படியவில்லை
இன்னும்
இழுத்தடிக்கிறான்
அவனோடு
என்னையும்,,,

தொடர் சங்கிலி
அறுபட அறிவை
அன்றே பெற்றிருக்க வேண்டும் நான்,,,

கோபம் வருகிறதப்பா உன்மேல்
தோளுக்கு மேல்
வளர்ந்த பிள்ளையை
அடித்து திருத்துதலை என்மீது முதலறி…

இந்துத்துவத்தின் பிடியில் ஈழத் தலைவரா?

Image
ஈழத்தின் விடுதலைத் தலைவர் மேதகு பிரபாகரனின் உருவச்சிலைகளை இந்துக்
கோவில்களில் நிறுவுவதும் அதனை அரசின் ஆணைக்கிணங்க காவல் துறையினர்
அகற்றுவதும் தொடர்கதையாகியிருக்கி­­றது. விடுதலைப் புலிகளின் இயக்கத்
தலைவர் பிரபாகரனை இந்துக்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஆகவேதான்
குறிப்பிட்ட இந்துத்துவ குலதெய்வ வழிபாட்டில் பிரபாகரனின் உருவச்சிலைகள்
இடம்பெறுகின்றன. முதலில் குலதெய்வ வழிபாடுகளான சிறு தெய்வங்கள் மற்றும்
ஊர் எல்லை காவல் தெய்வங்களான
மாரியம்மன்,அங்காளம்ப­­ன்,கருப்பு,முனி,ஐய்­ய­னாரப்பன், போன்ற தெய்வங்களை
வணங்குதல் என்பது இந்துத்துவத்தில் சேராதென்று கூறப்படுவதை ஏற்க இயலுமா
என்றால் முற்றிலுமாக ஏற்க முடியாதென்றே எடுத்துக்கொள்ளலாம். அவ்வகையான
சிறு தெய்வங்களை வணங்குதல் என்பதை இந்துத்துவத்தில் சேராதென்பதற்கு
அச்சிறு தெய்வங்கள் இடைநிலைச் சாதியினர்களால் வணங்கப்படுவது அதில்
அர்ச்சகர்கள்,பார்ப்ப­­னர்கள் இடம்பெறவில்லை மாறாக இனக் குழுக்களில்
ஒருவரான இடைநிலைச் சாதியரே பூசாரியாக அங்கம் வகிக்கின்றனர் ஆகவே
சிறுதெய்வ குல தெய்வங்களை வணங்குதல் இந்துத்துவத்தில் சேராதென்று
விளக்கமும் அளித்துவிடுகி…

அன்று இளவரசன் இன்று கோகுல்ராஜ் நாளை யாரோ? தொடரும் கௌரவக் கொலைகள்

Image
தீர்வுகளைத் தேடி இன்னும் எவ்வளவு தூரம்தான் பயணிக்க வேண்டுமென்று
ஒருமுடிவும் தெரியவில்லை இந்த தமிழ்ச் சமூகத்தில் நிலவும் ஆதிக்க
இந்துத்துவ சாதி வெறியின் அவல நிலைகள் வழித்தடங்களை தடுத்து நிறுத்தி
திசைமாற்றிவிட்டு ஏளனம் செய்கின்றது. எதுவும் மாறிடப்போவதில்லை தொடரும்
எங்கள் கௌவரக் கொலைகளென்று மிகப்பெரும் சவாலையும் சவடாலிட்டுச் தமிழ்ச்
சமூகத்தை அதன் பிடியில் தக்கவைத்துக்கொ(ல்)ள்­­கிறது.அன்று தர்மபுரியில்
இளவரசன் இன்று நாமக்கல்லில் கோகுல்ராஜ் , பெயரும் ஊரும்தானிங்கே மாற்றமே
தவிர அதே தண்டவாளம்,அதே படுகொலை, அதே காதல்விவகாரம், அதே கௌரவக்கொலை, அதே
ஆதிக்கச்சாதி வெறி என்று தொடரும் சாதியாதிக்கத்தின் கட்டவிழ்க்கப்பட்ட
கௌரவக் கொலையென்பது தமிழ்ச்சமூகத்தின் சாபக்கேடென்று ஏன் உணர
மறுக்கிறார்கள்? ஏனென்றால் சாதிவெறியானது இங்கே தாண்டவமாடுவதனால் பல
காதலர்கள் தலைகள் இங்கே தண்டவாளங்களுக்கு இரையாக்கப்படுகிறது.
தமிழ்ச்சமூகத்திற்கான­­ இன்றைய தேவை சாதிமறுப்பு அல்லது கலப்பு
மணங்களேயென்றால் அது மிகையாகாது . ஒரு கவிஞன் எழுதினான் அடிக்கடி அந்தப்
பாடல்வரிகளை மட்டும் நினைவுக் கூர்ந்து மனதிலேற்றிவிடுவது

தமிழ்த்தேசியத்தில் எழும் "ஜ"ந்தேகம் ச்ச்சீ! "ச"ந்தேகம்

Image
தமிழ்தேசியத்தின் சிந்தனைகள் அப்படியே மெய்சிலிர்க்க வைக்கிறது . எப்படி
இவர்களிடத்தில் மட்டும் இப்படியான சிந்தனைகள் எழுகின்றது? கேள்விக்கான
விடையை அவர்களாகவே தந்துவிடுகிறார்கள் "நாங்கள் தமிழ்த்தேசியர்களென்ற­­ு"
தமிழ்த்தேசியவாதிகளின­­் முன்னெடுப்பு முறைகளில் கோமாளித்தனங்கள்
நிறைந்திருப்பதை மீண்டும் உறுதியாகியிருக்கிறது­­. தமிழ்ச்சமூகத்தில்
தற்போது அவர்களெடுக்கும் பரப்புரை முன்னெடுப்பு "சாதியத்தை ஒழிக்க
வேண்டுமெனில் "ஜா"தியம் என்பதை "சா"தியம் என்றெழுதினால் போதுமானது
சாதியம் ஒழிந்துவிடும்" வேடிக்கையாகல்லவா! இருக்கிறது இவர்களின் பரப்புரை
கூற்று,,, இந்துத்துவ பார்ப்பானிய வடசொற்களான "கிரந்த"எழுத்துக்களை­­
அழித்தால் உடனே சாதி ஒழிந்து விடுமா? அப்படி பார்த்தால் இதுவரை சாதிய
எதிர்ப்பு பற்றி நான் எழுதுகின்ற போதெல்லாம் "சாதியம்" என்றே எழுதுகிறேன்
எங்கும்,எவ்விடங்களில­­ும் "ஜாதியம்" என்று எழுதியதேயில்லை,
அப்படியிருக்கையில் சாதியம் ஒழிந்துவிட்டதா என்ன? சாதியாதிக்கம்
மெம்மேலும் அதிகரித்துக்கொண்டேதா­­னே இருக்கிறது,வேறுவ…

இரு தோழர்கள்!

Image
வாடைக்காற்றில் வயிற்றுப்பசியோடு சுற்றித் திரிந்த பறவையொன்று
எச்சில் இலையை
ஏக்கமாய் பார்த்துவிட

எனக்கே போதாதிது
நீ வேறு
வந்துவிட்டாயாவென
விரட்ட மனமில்லாமல் விரலசைத்து
அழைக்கிறது
பிஞ்சு மனசு

அருகில் வந்தமர்ந்த உடலோடு
இறக்கைகளும்
ஒட்டிப்போன பறவையினடத்தில்

பாசம் வைத்து
பந்தியில் இடம் பகிர்ந்தளிக்கிறானே
அவன் யார்?

விடைத்
தேடியலையும்
எச்சில் இலைகளுக்கு விவரம் போதவில்லை வீசப்பட்ட இலைகளோ விருந்துண்ணும்
பக்குவமாயிங்கே

மாயவித்தைகளை
மடியில் சுமந்தவனில்லையவன் மழைநீர் அவனது
விக்கலை விரட்டும்

என்றோ பிறந்தவன்
இன்னமும் தேடுகிறான் குப்பைத் தொட்டியில்
உணவை

பரிவுகாட்டிய பறவையினடத்தில் பட்டகதையை
விவரிக்கிறான்
அத்தனையும் சோகக்கதைகளே,,,

நொந்துபோகாமல்
செவிசாய்த்து
கேட்கிறது
அந்தப் பறவையும்

இறுதி உரையாடல்
இடியினை
விழுங்க
பறவையே கேள்!!!

ஏழையாய் பிறந்தது தவறில்லை
ஏழையாய் வாழ்ந்து
மடிவது தவறென்று யாரோவொருவன்
சொன்னானாம்
சிரிப்புதான் வருகிறதெனக்கு

பிறந்தபொழுதே புதைக்கப்பட்டுவிட்டா­ல் பூமிக்கு ஒரு சுமையிருக்காது

வாழ்ந்தே விடுகிறேன் பூமியெனை திட்டுகிறது ஏனடா
சாகவில்லையென்…

காதல் துளிகள்

Image
உயிரை
வாங்கும்
கவிதைக்கு
உனது பெயரையே
சூட்டுகிறேன்
இம்சைகள்
மிக பிடிக்கும்
என்பதால்,,,

___

இளங்கதிர்
உதயம்
என்னவளின்
கழுத்தில்

___

கசியும்
மௌனம்
உள்ளே
தோய்ந்த
இதயம்

___

அவளின்
நினைவுகளில்
மிச்சமிருப்பது
என் காதல்
மட்டுமே,,,

___

நீலம்
கரைதொடும் முன்பே
நித்தமும்
உயிர்த்தெழ
துடிக்கிறேன்
உயிரே
எனைப் பிரியாதே,,,

___

முகம் சிவக்கிறது
தாமரைக்கு
உன்
சிறு கோபத்தை
சேமித்து வைக்கிறேன்
நான்,,,

___+___

நீயும் வா என்னோடு,,,

Image
ஓவியங்களை
உறங்குமாறு கட்டளையிடுகிறேன்

கனவினில் தெளிந்த
நீராகத்
தெரிகிறாய் நீ

பறிக்கத் துடித்தால் கண்ணை பறிக்கும்
மலர்களை
மேலோட்டமாய் திட்டித்தீர்க்கிறேன்

கள்ளத்தனமாய்
தேன் திருடும் இதயத்திருடியாகத் தெரிகிறாய் நீ

துள்ளியாடும்
தோகை இளமயிலிடம் கோபித்துக்
கொள்கிறேன்

சலங்கை காலாடும் சில்லிடும்
மழைத் துளிகளாகத் தெரிகிறாய் நீ

நீயும்
கவனித்திருப்பாய்
இந்தக் காதலனின் செய்கைகளை

இறுதியாக உயிரோடு உறவாடும் காதலெனும் மூவெழுத்திடம் மண்டியிட்டு மடியேந்துகிறேன்

சுவற்று
விரிசலைபோல
நம் காதலுக்கேதும் நேர்ந்து விடக்கூடாதென்று

நீயும் வா
என்னோடு

காதலெனும்
மூவெழுத்திடம்
வரம் கேள்
வளரும் பிறைபோல
நம் காதல்
வளரவும்,வாழவும் வேண்டுமென்று,,,

உன்னை மறந்து,,,

Image
நிஜம்தான் நிஜம்தான் உன்னை
மறந்தது நிஜம்தான்
நிழல் எதுவாக
இருப்பினும் நிஜமாக நீயாகத் தெரிவது
என் கண்கள்
செய்யும்
ஏமாற்று வேலை

விசித்திர பூச்சென்டுகள் போலியெனத்
தெரிந்தமையால்
புதைத்து விடுகிறேன்
என் காதலை

நிஜப்பூக்களை வருடி கார்கூந்தலில்
எப்போது
அமர்த்துகிறாயோ
அப்போது
தொலைத்து விடத் தயாராகிவிடுகிறேன் மறந்தது நிஜமென்பதை

அதுவரையில்
நீயாகவே சூடிக்கொள்ளும் காகித பூக்களுக்கு முன்னால்
காதலித்ததை
மறந்தும் மறுத்தும் கடந்து செல்கிறேன்

நிஜங்களுக்கிங்கே
வாழ வழியில்லையெனில் நிழல்களும்
குடை விரித்தல்
சாத்தியம் தானே

சத்தியம் செய்துவிட முடியவில்லை
மறந்தேனென்று
என்னால்

நிழலோடு நிஜமாகவே
வாழும் பூக்களுக்கு மத்தியில் பொய்யுரைக்க முடியவில்லை

தவிக்கிறேன்
துடிக்கிறேன்
இறுதியில் மூச்சுத்திணறி தவிர்க்கமுடியாதொரு தருணத்தை எட்டிவிட்டபடியால்
சொல்லிவிட்டேன் பூக்களிடத்தில்

பூக்களே
நிஜம்தான் நிஜம்தான்
அவளை மறவாமல்
மனதினில் பூட்டியது நிஜம்தான்

என்ன செய்ய
நான் என்ன செய்ய

அவளோ காகித பூக்களின் நிழலை விரும்புகிறாள்
நிஜமாக ஜொலிக்கும்
உன்னை மறந்து,,,

களத்து மேட்டு "கருப்பன்"

Image
பாறைகளென்றோ கூழாங்கற்களானது
மாற்றம் தந்த
மலை நதியைத்தான் காணவில்லையிங்கே

களவாடியவன்
கரன்சியில் புரள கட்டியழுவ
கண்ணீரும் வற்றிப்போனது களத்துமேட்டு கருப்பனுக்கு

திண்ண உணவு செரிக்கவில்லையாம்
தினம் குடிக்கிறார்கள் குளிர்பானத்தை

தாகமெடுத்தால்
தண்ணீரில்லை
திணறும் மூச்சோடு
தினம் கடக்கிறான் களத்துமேட்டு
கருப்பன்

உணவில் கலப்படமாம்
ஊரே அலறியது
களத்துமேட்டு
கருப்பன் மட்டுமே சிரித்தான்

உற்பத்திக்கு வழியில்லையெனில் கலப்படம் அவசியம்தானே,,,

பச்சை நிறங்களை
பார்த்தே நாளாகிப்போனதிங்கே நாறும் மனிதர்கள் உடலெங்கும்
பூசிக்கொண்டார்கள்
வாசனைத்
திரவியங்களை

களத்து மேட்டு
கருப்பன் கடைசியாய் அரை கூவலிடுகிறான்

அடேய் மானிடா
ஆற்றை காப்பாற்று
அழ தேவையில்லை
இனி அனைத்தும்
உன்மடியில்
உற்பத்தி தொடங்கிவிட்டால்
கலப்படம் அவசியமில்லை
கண்ணுற்று பாரடா
உற்பத்தி இங்கில்லை

உழுதவன் விதைநெல்லை ஊழல்செய்து விற்றுவிட்டார்கள்

கலப்படமில்லா
பொருள் வேண்டுமா?
களத்து மேட்டுக்கு
நீவாடா,,,
கருப்பனிங்கே காத்திருக்கிறேன்
கொஞ்ச நெல்லையும் காப்பாற்றவேனும்
களத்து மேட்டுக்கு
நீவாடா,,,

கருப்பன் அழைக்கிறான்…

நன்றி சொல்ல வந்திருக்கிறேன் 200 பதிவுகள் முடித்த கையோடு,,,

Image
எத்தனையோ இன்னல்கள் வந்தாலும் எழுதுவதை நிறுத்த மனமில்லை எனக்கு,,, தோழனே
நீ எழுது நாங்கள் துணையாக நிற்கிறோமென்று ஏணிப்படியாய் எத்தனையோ முகங்கள்
எத்தனையோ தளங்களிலிருந்து ஏற்றிவைத்து என்னை அழகுபடுத்துவதனால் எழுதுவதை
உயிராகவே நேசிக்க இதயம் பழகித்தான் போனது . இவ்வாண்டில் (2015) 200
பதிவுகளை எழுதி முடித்திருக்கிறேன் அத்தனை பதிவுகளும் சராசரியாய் 100
பார்வையாளர்களுக்கு மேல் தாண்டியவை எனும்போது இரட்டை சந்தோஷம் எனக்குள்
முளைத்துவிடுகிறது. ஆகவே நன்றி! சொல்ல வந்திருக்கிறேன். மனிதம் இன்னமும்
உயிர்ப்போடிருப்பது அன்போடு கலந்தெழும் நன்றியில்தானே!
எனக்கு சமீப காலமாகத்தான் "வலைப்பூ" அறிமுகமானது எழுதும் வாய்ப்பு கடந்த
காலங்களில் எனக்கு கிட்டியதேயில்லை, இதனை எனது 100வது பதிவிலேயே
தெரிவித்துவிட்டேன். ஆனால் இன்றதை காணும்போது இத்தனை பதிவுகளை எழுதி
விட்டோமா! எனும் ஆச்சர்யத்திலிருந்து நான் மீளவேயில்லை, காரணம் இணைய
வெளியில் எனக்கு முதலறிமுகம் பேஸ்புக்கும் , ட்விட்டரும் மட்டுமே
அதைத்தாண்டி சென்றதேயில்லை, இவ்வாண்டில் சிகரத்தின் முதல்படியிலேயே
தொங்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் மீண்டெழுந்…

பிரபஞ்சத்தின் காதலியவள்

Image
தனிமையை தேடிப்போகிறாள்
அவள்

பூக்களை
மேய்ந்து விட்டு இன்பத்தேனை சுவைத்துண்டதும்
கண்டும் காணாமல்
உதறித் தள்ளிடும் வண்டுகளாய்
மேய்ந்த ஆண்மக்கள் விலைமகளென்று பெயரிட்டார்கள்
அவளுக்கு

நிர்வாண கோலத்தில் நிழலிருந்தாலும்
அனல் பார்வை வீச்சால்
அடைய துடிக்கிறார்கள் அவளின் அந்தரங்க
உடல் பாகத்தை

பார்வைகள் பலவிதமாய் ஒவ்வொன்றும்
புதுவிதமாய் பட்டுத்தெறித்தன

ரசனைகளின் வெளிப்பாடு
பிடித்த பகுதிகளை அவர்களே
தேர்வு செய்கிறார்கள் அவர்களே மதிப்பீடும் போடுகிறார்கள்
போகப் பொருளாகத்
தெரிகிறாளவள் ஆண்மக்களுக்கு

பேசிய பேரப்பணம்
வந்து சேரவில்லையாம் தரகனை திட்டிவிட்டு தரதரவென
அவளை இழுத்து
தாகம் தீரும்வரை புணர்ந்துவிட்டு கடைசியில் கைவிலங்கிட்டான் காவல்காரன்

வழக்கு வழுக்கி விழந்தது வாயிற்படியில்
அவளைப்போலே
எத்தனையோ
பெண்கள் வரிசையில்
அவளும் ஒரு
எண்ணிக்கை சேர்க்கையில்

நிச்சயமாய் அவள்
ஆடை அணிந்திருக்கிறாள் சாட்சிக் கூண்டில்
உடல் நிற்கிறது

நீதி தேவதையின்
கண்களோடு
காதுகளையும் சேர்த்திங்கேதான் கட்டியிருக்கிறார்களே

கடைசியாக நோட்டமிடுகிறாளவள்
சாட்சியம் கேட்கும் நீதிபதியை

அப்பப்பா!!!
ஒரே வ…

லலித் மோ(ச)டி , நரேந்திர மோ(ச)டி நடுவில் சுஷ்மா

Image
லலித் மோ(ச)டி , நரேந்திர மோ(ச)டி இரண்டு பேருக்கும் எந்தவொரு
வித்தியாசமும் இருந்ததில்லை இதில் சுஷ்மா துண்டுச் சீட்டுபோல செயல்பட்டு
லலித் மோடிக்கு விசா வழங்கியிருக்கிறார் அவ்வளவே ,, கண்ணுக்கெட்டிய
தூரத்தில் குதூகலத்தோடு குற்றவாளியொருவன் திரிகிறானென்றால் அதுயெப்படி
"தலைமறைவு" ஆகிவிடும் தேடப்படுவதில் தேவையற்ற அரசியல் இருப்பது நமக்கு
புலனாகிறதல்லவா, எதன் அடிப்படையில் விசா வழங்குனீர்கள் எனக்கேள்வி
எழுப்பினால் "நம்பிக்கை" அடிப்படையில் என்கிறார் சுஷ்மா . நம்பிக்கை
நட்சத்திரம் மோடியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிவிடுகிறார் . ஆக
ஊழலுக்கெதிரான ஆட்சி என்பதை பிஜெபியால் தரவே முடியாது என்பது
ஓராண்டிற்குள்ளாகவே தெரிந்து விடுகிறது. இதைத்தானே காலங்காலமாக
எதிர்க்கின்றோம் . அப்போதெல்லாம் எங்களுக்கு
"தீவிரவாதி,மதவெறி,கல­கக்காரன்" என்றெல்லாம் பட்டம் சூட்டி பாசிஸத்திற்கு
பெரும்பான்மை அளித்த நல்லுங்களுக்கு "ஆழ்ந்த நன்றி! சொல்வதைத் தவிர
வேறெதுவும் தோன்றவில்லை, சமீபத்தில் மோடியின் ஓராண்டு சாதனைக்கு தனி
புத்தகமே அச்சிட்டு வெளியிட்டது மாலைமலர் . ஊடகத்தில் செயல்படு…

ஆர் கே நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் மகேந்திரனை பற்றி,,,(கம்யூனிஸ்ட்)

Image
ஆர் கே நகர், இடைத்தேர்தல் சூடுபிடிக்கத் தொங்கியிருக்கிறது . வருகின்ற
27ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதால் இடைத்தேர்தலில்
போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்தாகவிட்ட நிலையில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தோழர் மகேந்திரன் களத்தில்
இருக்கிறார். ஏற்கனவே ஆளுங்கட்சியின் அதிகார பலமும், பண பலமும்
தொகுதியில் ஆக்கிரமித்துள்ளதாலும­்,தேர்தல் அதிகாரத்தின் மீதான
நம்பிக்கையின்மையாலும­் ஆர் கே நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக,
தி.மு.க., - பா.ஜ., - காங்., - தே.மு.தி.க., - பா.ம.க., உள்ளிட்ட
தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும், போட்டியிடாமல் ஒதுங்கின.
இந்நிலையில் பெருஞ்சவாலை எதிர்கொள்ளும் இடதுசாரியத்தின் வேட்பாளர் தோழர்
மகேந்திரன் அவர்களை பற்றி சின்னத்திரை (சீரியல்) இயக்குநர் தோழர் கவிதா
பாரதி (Kavitha Bharathy) தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை அவரது
முகபுத்தகத்தில் பதிந்தார். முகபுத்தகத்தில் இடதுசாரியத்தின் மீது
பற்றுள்ளவராய் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னால் தோழர் கவிதா பாரதி
எனக்கு அறிமுகமானார். கூடுமானவரை இணையத்து தோழமைகளை நேரிலோ அல்லது
கைபேசியிலோ நட்பு உற…

தமிழ்ச் செய்தியாளர்களுக்கு வாழ்த்துக்களும் அதனோடு ஒரு இணையதள கவனஈர்ப்பும்

Image
தமிழ்ச் செய்தி ஊடகத்துறையில் சிறந்ததொகுப்பாளர்கள் பட்டியலை http://www.thenewsminute.com/article/star-anchors-driving-tamil-tv-news-uprising  வெளியிட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிஅளிப்பதாக இருக்கிறது . உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் நிகழ்வுகள் வரை மக்களுக்கு பயன்படும் வகையில் தங்களின் உடலுழைப்பை சமூக சேவைக்காக அர்ப்ணிக்கும் சிறந்த தமிழ்ச் செய்தியாளர்களுக்கு நன்றியோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தல் நமது கடமையாகும்.அதே வேளையில் இதுஒருபுறமிருக்க இன்னொரு கவலையும்தமிழ்ச் செய்தி ஊடகத்துறையை சுற்றிவளைத்திருக்கிறது. எவ்வழியிலென்றால்"இணையம்" வழியில் தமிழ்ச் செய்தி ஊடகம்சுற்றிவளைத்து மிகப்பெரும்அதிர்ச்சியினை தந்திருக்கிறது. சிலதினங்களுக்கு முன்னால் http://arumbithazh.blogspot.in/2015/06/blog-post_2.html          02-6-15 அன்று "தமிழ்ச் செய்தி ஊடகங்களின்கவனத்திற்கு,,," என்கிற முன்னரே எழுதியபதிவுக்கான ஏற்ற புகைப்படத்தினைதேர்வு செய்வதற்காக கூகுள்தேடுபொறியில் "Tamil News Reader" எனச்சொடுக்கி என் பதிவுக்கு பொருத்தமான"அனைத்து தமிழ்ச் செய்திவாசிப்பாளர்களின் கூட்டுப் புகைப்…

சாதி உங்களுக்கு என்ன செய்தது?

Image
சாதியத்தை உயர்த்திப் பிடித்து சாதியானது சமூகத்திற்கு மிகத்தேவையென
சுயசாதி பெருமைபேசும்
மனிதர்களிடம்,
"சாதி உங்களுக்கு என்ன செய்தது?" எனும் கேள்வியை முன்வைக்கையில் எவ்வித
சிந்தனைகளுக்கும் இடம்தராமல் பட்டென பதிலுரைப்பார்கள் ஒற்றை காரணத்தை,,,
"சாதிதான் எங்களுக்கு கீழே அடிமைகளை உறுவாக்கித் தருகிறது" என்பதுதான்
மனிதர்களின் வாயில் தெறிக்கும் பதிலாக இருக்கிறது. இங்கே சக மனிதனை
அடிமைபடுத்துவதென்பது­­ மிகச்சரியானதுதானென வாதிடப்படுகிறது. சாதி
சமூகத்திற்கு தேவையான ஒன்றென அடிமைபட்ட அடித்தட்டு மக்களிடம்
எளிமையாகவும் கூடவே அதிகாரத்தோடும் நியாயப்படுத்தப்பட்டு­­
செயல்படுத்தப்படுகிறத­­ு.
ஏழை,பணக்காரன் என்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை விட
சக மனிதனை அடிமைபடுத்த தொழில்,பிறப்பு, தெய்வ வழிபாடு போன்றவற்றில் எழும்
மூல சமூக கட்டமைப்புச் சாதியத்தால் மிகச்சாதாரணமாக மற்றவனை
அடிமைபடுத்திவிடலாம் என்கிற பொதுபுத்திக்கு வந்துவிட்டது சாதி ஆதிக்கச்
சமூகம். தங்களின் பொருளாதரத்தை மேம்படுத்தவும்,போலிய­­ான கவுரவத்தை
நிலைநிறுத்திக் கொள்ளவும் , சக மனிதன் மீது அடிமை விலங்கை கட்டுவித்தல்
த…

(ஓமந்தூர்) ராமசாமி ரெட்டியின் சொந்த ஊருக்கு வந்த சோதனை

Image
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சுதந்திர இந்தியாவில் ஒருங்கிணைந்த சென்னை
மாகாணத்து முதல் முதலமைச்சராக இருந்தவர். மார்ச்,1947 –ஏப்ரல் ,1949
வரையில் முதலமைச்சர் பதவியில் அங்கம் வகித்து பல்வேறு மக்கள்நலத்
திட்டங்களை செயல்படுத்தினார் .காந்தியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு
இந்திய தேசிய காங்ரஸில் இடம்பெற்றிருந்த இந்து மத பற்றாளராய்
இருந்திருக்கிறார்(கா­­ந்தியின் யுக்தி) கடைசிகால ஆன்மீகத்தில்
ஈடுபாடென்று முடிகிறது அவரது பயணம் . விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனம்-புதுச்சேர­­ி தேசிய நெடுஞ்சாலை அருகில்,ஓமந்தூர் அரசு
மேல்நிலைப்பள்ளியின் பக்கத்தில் தமிழக அரசு அவரை சிறப்பிக்கும் வண்ணம்
"ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மணிமண்டபம்" நிறுவியுள்ளது. அவர் பிறந்த
ஓமந்தூர் கிராமத்தின் நிலை என்னவாய் இருக்கிறதென்று பார்வையிடத்
தேவையில்லை சமூகத்தின் அழிவுச் சம்பவங்களுக்கு சாட்சியாகவே நிற்கிறது
அக்கிராமம். அதுவும் இந்துத்துவ ஆதிக்கச் சாதியத்தின் பிடியில் முன்னாள்
முதலமைச்சரின் ஊரென்றால் ஏன் இதனை சமூகச் சீர்கேடாக பார்க்கக்கூடாது?
1947இல் சென்னை கோயில் நுழைவு அதிகாரமளிப்புச் சட்டத்தை ஏற்படுத்தி

மழைக் காதலர்கள்

Image
கவலைகள் மறந்து
கருவிழிகளை
காற்றோடு அலைபாய
விட்ட தருணத்தில்
தவங்கலைந்த
மேகங்கள் கண்ணீரின்
தாகந்தணிக்க
வந்திறங்கியதோ

கழுத்துச் சுளுக்கிற்கு
கவலைபடவில்லை
கண்ணீரே தினம்
காணும் சோக
முகங்களிங்கே
ஏராளம்

சுகமளிக்க இறங்கி
வரும் மழையே
மான்போல துள்ளுகிறது
மனது உனை
பார்த்தவுடனே

ஓங்கி எழும் பெருமழையில்
ஒருதுளி
மழைத் துளியை
கண்ணத்தில்
கசிய விட்டதில்

கண்ணீர்க் குடம்
நிரம்பி வழிகிறது
இது கவலைகள்
சுமந்த காலிக்குடமல்ல
காதலை சுமந்த
காட்டாற்று வெள்ளம்
நிரம்பி வழிகிறது பார்
ஆனந்தக் கண்ணீராலே

அனைத்தையும்
அணைத்துக் கொள்வதனால்
காதலை திருடும்
கற்சிலைகளும் துள்ளியாடுகிறது
அவைகளின் வரவேற்பறையில்
நீ

பெருங்காற்றில்
பரவுகிறது பலமொழிகள்
பத்திரப் படுத்து
மழையே

பார்முழுதும் விரிந்து
கிடக்கிறார்கள்
பல
மழைக் காதலர்கள்,,,

"நாம் தமிழர் கட்சி ஆவணம்" இதோ! இங்கே!

Image
இதற்கு ஏன் இவ்வளவு ரகசிய பாதுகாப்பென்றே எப்போதும் தோன்றுகிறது. பல முறை
வாசித்துவிட்டேன் "நாம் தமிழர் கட்சி ஆவணத்தை" எளிதாக கடந்து போகும்
ஒன்றாகவே எடுத்தாளப்பட்டுள்ளது­ எழுத்துக்கள். பிறகு ஏன் நாம் தமிழர்
இந்நூலை ரகசியப் படுத்துகிறார்களென்றா­ல் நூல் தாங்கிநிற்பது
"இந்துத்துவம்" ஒன்றை மட்டுமே எனச் சொன்னால் அது மிகையாகாது. "நாம்
தமிழர் கட்சி ஆவணம்" குறித்து பல்வேறு தரப்பினர்கள் தங்களின் விமர்சனத்தை
கொட்டிவிட்டார்கள் என்கிறபடியால்,இந்நூல­ுக்கான விமர்சனத்தை எழுத
அவசியமில்லை என்றே கருதுவதனால் அப்படியே விட்டுவிடுகிறேன். ஆகவே "நாம்
தமிழர் கட்சி ஆவணம்" நூலினை தறவிறக்கம் செய்யும் சுட்டியை மட்டும்
தருகிறேன். "நாம் தமிழர் கட்சி ஆவணம்" தறவிறக்கம் செய்ய இதோ எனது
மின்னூலிணைப்பு,,,,

https://www.google.com/url?q=https%3A%2F%2Fwww.dropbox.com%2Fs%2F39dpms45anfpqz1%2F%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2520%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2520%25E0%25AE%2595%25E…

சாதி இந்துக்களை எதிர்க்க "தேவை ஒற்றுமை"

Image
மிக அவசரத்தின் முன்னேற்பாடாக தமிழகத்தில் "இந்துத்துவம்" வளர்த்தெடுக்கப் படுவதாக மட்டுமே நமது சிந்தனைகள் திசைமாறிச் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். இன்று நேற்றல்ல தமிழகத்தில் பல நூற்றாண்டு காலமாகவே இந்துத்துவம் கால்பதித்துள்ளது. அதுவரையில் திராவிடத்தால் முறியடிக்கப்பட்ட நிலையில் இன்றிருக்கும் திராவிடமானது மெல்ல மெல்ல பார்ப்பானியம் பக்கம் தங்களை ஈடுபடுத்திக் கொண்டமையால்,இந்துத்துவமானது தன் மக்கள் விரோத போக்கினை வெளிப்படையாகவே அரங்கேற்றுவது நம் பார்வைக்கு வருகிறது அவ்வளவே, அதையும் தாண்டி எவ்வித காரணகாரியங்களும் இடம்பெற்றிடவில்லை.தமிழகத்தில் இந்துத்துவத்தின் இன்றைய எழுச்சியை முதல்நிலை பார்ப்பானியத்தை விட இடைநிலை சாதி இந்துக்களே அதிதீவிரமாக முன்னெடுத்துச் செல்கிறார்கள்.சாதிய அடிப்படையில் மட்டுமே இந்துத்துவத்தை மீட்டெடுக்க முடியும் என்பதை கண்டறிந்தமையாமல் அவர்களின் சிந்தனைகள் ஒரே நேர்கோட்டில் செல்கிறது எனலாம்.ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் சாதிய ரீதியலான இயக்கங்கள் மிகக்குறைவாகவே இருந்திருக்கிறது, நேரடியாக சாதி இந்துக்கள் தங்களின் இயக்கங்களுக்கு சாதி ஒட்டு இடாமல் "தமிழ்"…

(தடை நீங்கியது)அம்பேத்கர் , பெரியார் வாசிப்பு மாணவர் அமைப்பின் மீதான தடை நீக்கலும், இந்துத்துவ தொடர் பரப்புரை நிகழ்வுகளும்,,,

Image
அம்பேத்கர் , பெரியார் வாசிப்பு மாணவர் அமைப்பின் மீதான தடையை சென்னை ஐஐடி நிர்வாகம் விலக்கியுள்ளதென்பது வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. சமத்துவம், சகோதரத்துவம் இம்மண்ணிற்கு மிக அவசியமான ஒன்றென்று உணர்ந்து பிளவுபட்டுக் கிடந்த முற்போக்காளர்கள் ஒற்றுமையுடன் கைகோர்த்து தோழமையை நிறுபித்து இந்துத்துவத்திற்கு எதிராக ஓரணியில் செயல்பட்டதால் "அம்பேத்கர்,பெரியார் வாசிப்பு மாணவ அமைப்பு" மீதான தடை உடைத்தெறியப்பட்டிருக­­்கிறது எனலாம், இந்த ஒற்றுமையின் பலத்தை கண்டு பார்ப்பானியம் நடுங்கியிருக்கிறது என்றாலும் , நம் முற்போக்குச் சிந்தனைகளுக்கு எதிராக இந்துத்துவம் ஒரு விதத்தில் வளர்ச்சியின் பாதையில் சில அடிகளை எடுத்து வைத்துள்ளதென்றுச் சொன்னால் அது மிகையாகாது.தமிழ்ச் செய்தி ஊடகங்களின் வியாபார விவாத காணொளிகளே இதற்கு சாட்சியாக அமைகின்றது , மத்திய பிஜெபியின் இந்துத்துவ தீவிர பற்றுதல் காரணமாக அதே இந்துத்துவ பார்ப்பானிய ஐஐடி நிர்வாகம் விதித்த அம்பேத்கர் பெரியார் வாசிப்பு அமைப்பின் சாரம்ஸங்களை அப்படியே உள்வாங்கி வியாபார ரீதியலான தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்திய விவாதங்களில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர…

அம்பேத்கர் உரையில் மும்பை வாழ் தமிழர்களுக்கான உரிமைக்குரல்

Image
மும்பை வாழ் தமிழர்களின் உரிமைகளுக்காக
புரட்சியாளர் அம்பேத்கர் பேசியது,,,
-----------
சிறுபான்மையினரின்
பண்பாட்டு உரிமை பற்றியும், அந்த உரிமையின்படி சிறுபான்மை மக்கள்
தங்களின் தாய்மொழி வாயிலாகவே தத்தம் ஆரம்பகால
கல்வியைப் பெற முடியுமா?

இவ்வுரிமையை அடிப்படை உரிமையாக
நமது அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறதா?
என்று நாடாளுமன்றத்தில்
கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

"சிறுபான்மையினர்" என்ற சொல், மத
சிறுபான்மையினர் என்ற
சொல்லோடு தொடர்புடையது அல்ல. மத
சிறுபான்மையினரின்
நலன்களை நமது அரசியல் சட்டம் பாதுகாக்கும்
நோக்கத்தோடு, நாடாளுமன்றம் மற்றும்
சட்டப்பேரவைகளில்
அவர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்குகையில்,
எண்ணிக்கையில் ஒப்பிடும்போது குறைந்த
எண்ணிக்கையில்
உள்ளவர்களை "மொழி" சிறுபான்மையினர்
என்று நான் குறிப்பிடுகிறேன்.
எடுத்துக்காட்டாக, சென்னையை பூர்வ இடமாகக் கொண்டு வாழ்ந்த தமிழர்கள்,
வேலை தேடி பம்பாயில் குடியேறுகின்றனர்.
இவர்கள் பொதுவாக, "வந்தேறி"யாக
அல்லது மொழி ரீதியாக இந்தியா முழுமையும்
ஒப்பிட்டுப் பார்க்கும் போது,
சிறுபான்மையினராகக் கொள்ளப்படா விட்…

கையில் ஒரு ரூபாய்

Image
தெருவெங்கும்
தேங்கி கிடக்கும்
கழிவுநீரில்
தாகம் தீர்க்கத்தான்
நான் போனேன்

கழிவுநீரால் வயிற்றுப்பசி அடங்கியதாய் தெரியவில்லை அத்தனை புழுக்களும்
அடிவயிற்றை அடைத்துக்கொள்ள
அதுகளுக்கேனும்
உணவு தேட வேண்டுமே!

கழிவு நீரில்
என்னிரு கைகளை
நுழைத்து துழாவிக் கொண்டிருந்தேன்
துர்நாற்றம் தென்றலானது
எனக்கு

விடாமல் அலசி
ஆராய்ந்ததில் எதுயெதுவோ என் கைகளில் சிக்க
இதுவெல்லாம் இங்கே
புழக்கத்தில் உள்ளதா! என்றெண்ணம் விட்டு விலகாத விழிகளின்
குறியீடுகளை யாரும்
கவனித்ததாய்
தெரியவில்லை

கவனித்தல் அவசியமற்றதென்று
நீண்ட தேடலுக்குப்பின்
துருபிடித்த
ஒருரூபாய் என்னிரு
கைகளை முத்தமிட்டு
உணர்த்தியது

என் முகத்தில் பூத்த
புன்னகையை
எப்படி அறிந்தனவோ
தெரியவில்லை
மகிழ்சியில்
வயிற்றுப் புழுக்கள்

அன்றைய உணவு
அவைகளுக்கு கிடைத்துவிட்டது
நானும் காசு பார்த்துவிட்டேன்
என் கையில்
ஒரு ரூபாய்,,,

வசந்தகால இரவொன்றில்,,,,

Image
வசந்தகால இரவொன்றில்
காற்றுக்கு இரையாகி
சலசலக்கும் சலங்கையொலியை
செவிகளுக்கு வந்துசேர
தடையில்லாமல்
இருப்பதென்னவோ
என் ஜன்னலாகத்தான்
இருக்கிறது

கேளாய்! நீ! கேளாய்!
சருகிலைகளின்
இறுதிச் சடங்கொலியை
கேளாய்! என
ஜன்னல் எனை
துணைக்கு அழைக்க

தூக்கம் தொலைத்தேன்
நான்
எழுந்தேன் மெதுவாக
சோர்வெனை சோதனைக்குட்படுத்த
அதில் மீண்டெழ
உடல் துடிப்பதை
உணர்ந்தவனாக
என்னை நானே
தயார் படுத்திக்கொண்டேன்

சருகுகளின் அழுகையோசை அப்போதும் என் செவிகளில் சூட்டுத்தன்மையை
ஏற்படுத்திக் கொண்டேயிருக்க

தானாகவே
வழிந்தோடிய கண்ணீர் என் பாய்விரிப்பையும் நனைத்து விட
என் ஜன்னலோர
நாற்காலியில் வந்தமர்ந்தேன்

அழுவது சருகுகளேதானென உணர்ந்தேன்
ஏனழுகிறதென்ற
உண்மையும் அப்போதுணர்ந்தேன்

தலைநிமிர்ந்து
வானத்தில் வட்டமிடும் பறவைகளுக்கு
தங்கும் மாளிகையாய் இருந்து மனிதனால் கொலைசெய்யப்பட்ட ஆலமரமொன்று
மரணித்து கிடக்கிறது

அதன் பிள்ளைகள்
வாடி கூடிநின்று அழுகிறார்கள்
விரைவில் அவைகளும் உரமாகலாம்
மண்ணிற்கு

உள்ளத்தால்
ஊமைக் கனவுகளாய்
ஓர் அஞ்சலி அதற்கு செலுத்தி விடுவதை
தவிர வேறென்ன
செய்துவிட முடியும் என்னால்

இரவு …

"விபச்சாரன்" பெண்ணியத்தின் கடைசி ஆயுதம்

Image
நிகழ்காலத்து நவீன வரதட்சனை
சீர்கேடானது வளர்ந்து கொண்டேச்
செல்கிறதே தவிர குறைய
வாய்ப்பேயில்லை என்பதான
சூழலை நாம் காண நேரிடுகிறது.
கவுரவம் , அந்தஸ்து, ஆதிக்கம்,
பணத்தாசை, அடிமைபடுத்தும்
நோக்கம், போன்றவற்றால்
பெண்ணினத்தை
பிணையக்கைதியாக
பார்ப்பதும்,வியாபாரப் பொருளாக
பார்ப்பதும்,என்றுமே அடிமை
பட்டவள் பெண் என்கிற தோற்றத்தை
உறுவாக்குவதும் ஆணாதிகத்தின்
முதன்மைப் பணியாகவே இருந்து
வருகிறது, அந்த
வகையில்"வரதட்சனை"
என்கிற பெயரில் ஆணாதிக்கம்
பெண்ணினத்தை
அடக்கியாளுவதை ஒரு
கலையாகவே சித்தரித்து
செயல்படுத்தி வருகின்றதெனச்
சொன்னால் அது
மிகையாகாது."பணத்தை
பெற்றுக்கொண்டு உடலை விற்கும்
பெண்ணை "விபச்சாரி"
என்றழைக்கும் போது பணத்தை
பெற்றுக்கொண்டு உயிரணுவை
விற்கும் ஆணை ஏன்? "விபச்சாரன்"
என்றழைக்கக் கூடாது" எனக் கேள்வி
எழுப்புவதில் தவறேதும்
இருப்பதாக
தோன்றவில்லை.விபச்சாரியென்று
பெண்ணிற்கு பட்டமளித்தவர்கள்
போகும் ஆண்களுக்கு
உத்தமனென்று
முடிசூட்சியுள்ளார்களே,,,
இதிலும் ஆணாதிக்கம் தானே
முழுமை பெற்றிருக்கிறது.
விபச்சாரம் இழிதொழிலென்றால்
இருவுடலுக்கும் சேர்த்தே
இழிச்சொல்லை வ…

தமிழ்ச் செய்தி ஊடகங்களின் கவனத்திற்கு,,,

Image
நமது தமிழ்ச் சமூகத்தில் மிகச்சிறந்த நன்னெறிகளில் ஒன்று
"எதிரியையும் மதிக்கப் பழகு" என்பதேயாகும். இப்பொன்மொழியின் பொருள்
விளக்கம் இன்றைய காலத்தில் கோனலாக புரிந்துணரப்படுகிறது­­. நமக்கு  எதிரியாக தென்படுபவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையானது எதிரியையே மனமாற்றத்திற்கு ஊன்றுகோலாய் அமைய வாய்ப்பினை நாமே எதிரிக்கு உறுவாக்கித் தருதலின் மூலம் வீழ்த்திவிடலாம் என்கிறது முன்னோர் கொடுத்துவிட்டுச்
சென்ற மேற்கண்ட பொன்மொழி.மற்றவரை நாம் மரியாதையுடன் அழைப்பதற்கு
தமிழிலுள்ள அழகு வார்த்தைகளை போல வேறெந்த மொழிகளிலும் அறவேயில்லை. வயதில்
மூத்தோர்களையும்,வயதி­­ல் சிறியவர்களையும்,மூத்­­த குடிமக்களையும்,
பெண்டீர்களையும் மரியாதையுடன் அழைக்க நமது தமிழ்மொழி பரிந்துரைத்த வார்த்தைகளை புறக்கணிப்பது சரியா? அதிலும் மக்களுக்கான நேரடித்
தொடர்புநிலையில் சமூகப்பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊடகங்கள்
புறக்கணிப்பதென்பது மிகவும் வேதனைதரும் விஷயமாகும். தமிழ்த்தாய் நமக்காக
விட்டுச் சென்ற "திரு,திருமதி,செல்வி­­, ஐயா,தோழர்" போன்ற வார்த்தைகளை
தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்ச் செய்தி ஊடகங்கள் …

பகுத்தறிவு பிச்சை

Image
பகுத்தறிவு பிச்சை
கேட்டு கண்ணில்படும்
கதவுகளையெல்லாம்
தட்டினோம்

திறக்காத கதவுகளின்
இடுக்கில் விரட்டும்
ஒலிசப்தம்
போ!!! போ!!! பூசையறையில்
பூனைபோல
நுழையாதே
போ!!! வென விரட்டியடிக்க

பக்கத்தில் பார்ப்பானியமோ
பிச்சைக்காரனே
பிழைப்புக்கு வழிதேடு
பகுத்தறிவு பிச்சை பாத்திரம் என்றுமே
நிரப்பாதொன்றும்

அதுவொரு காலிகுடம்
தூக்கிக்கொண்டு
திரியாதே என்றும்
புத்திசொல்ல வந்துவிட்டான்

புழுவாய் துடிக்கிறோம்
பகுத்தறிவு பிச்சைக்காரர்கள்
நாங்கள்

பார்ப்பானியத்தை
உற்றுப் பார்க்கையில்
உழுதவன் சோற்றுப்
பருக்கைகள்
ஒட்டியிருந்தது அவர்களின் கைகளில்

இந்துத்துவத்தை
தின்று கொழுத்து போயிருந்தார்கள்
அவர்கள்

தவறுகள் எங்களின்
மீதேயிருக்க
எப்படி நிரம்பும்
பகுத்தறிவு பிச்சை பாத்திரம்

தலித் திராவிடத் தமிழ்தேசியப்
பொதுவுடைமையென
ஒன்றுவிடாமல்
ஒன்றோடொன்று
மோதவிட்டு இன்று

அதே இந்துத்துவத்து
மோட்சம் தேடி கைலாயம் போக
பகுத்தறிவெனும்
பிச்சையை
நாங்களும் பிழைப்புக்கு
ஏந்தினோம்

பார்ப்பானியம் எங்களுக்கு
பைத்தியமென
மகுடம் சூட்டுவதற்கு
நாங்களே காரணமாகி நின்றோம்

கடைசிவரை ஓயவில்லை
எங்களின் இய…