சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பா ரஞ்சித் கூட்டணி விரைவில்

அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய குறைந்த முதலீட்டில் சராசரி வெற்றிப்படங்களை
கொடுத்த இயக்குநர் பா ரஞ்சித் அவர்கள் தமிழகத்தின் சூப்பர் ஸ்டாரென
அறியப்பட்ட திரையாளுமை ரஜினிகாந்த் அவர்களை வைத்து விரைவில்
திரைப்படமொன்றை இயக்கப்போவதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல் வெளியாகி
கொண்டிருக்கிறது . எல்லோரையும் போலவே வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு
நகர்ந்து போக முடியவில்லை , காரணம் சூப்பர் ஸ்டார் போன்ற ஆளுமைகள்
அடிசருக்கல் அடைந்த பின்னரே அதற்கான மீட்புடைக்காக சாதாரண இயக்குநர்களை
தேடிவருவார்கள் .அதுமட்டுமன்றி காரணம் . தொடர்ந்து தமது இயக்கத்தின்
மூலம் விளிம்புநிலை சமூகத்து வாழ்வியலை படமாக்கிய பா ரஞ்சித் அவர்களின்
உணர்வு பாராட்டப்டவேண்டியது இதனை மென்மேலும் மெழுகேற்றி தொடர்ந்து தனது
படங்களில் சமூகத்துப் பார்வையை காட்டுவதே எனது பணியெனவும் பா ரஞ்சித்
அவர்கள் பலமுறை தெரிவித்திருந்தார் . அவ்வாறு இருக்கையில்.பெண்ணடிமை,
தீவிர இந்துத்துவம் , திடீர் அரசியல் பேச்சு , தீடீர் இமயமலை சர்ச்சைகள்,
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு பெருந்தடையே கிருஸ்த்துவமென, பல யுகங்களாய்
மக்களின் அப்பாவித்தனங்களால் பெரும்புகழ் பெற்று சூப்பர் ஸ்டென
வளர்ந்துவிட்ட ரஜினிகாந்திற்கு நிச்சயமாக ஒரு சராசரி விளிம்புநிலை
மக்களின் வாழ்வியல் எதார்த்த காட்சிகளை பா ரஞ்சித் அவர்களால் அமைத்து
கொடுக்க முடியாதென்பதே உண்மையாக இருக்கிறது. இவ்வாறு பார்த்தோமானால் பா
ரஞ்சித் அவர்கள் சமூக எதார்த்த பார்வையிலிருந்து விலகி கதாநாயகனுக்கு
முக்கியத்துவமளிக்கும­் படத்தினை மட்டுமே கொடுக்க முடியும் . ஏற்கனவே
சூப்பர் ஸ்டார் ரஜினிந்தின் படமென்றாலே அவையனைத்தும் கதாநாயக
முக்கியத்துவ படங்களாகவே தயாரிக்கப்பட்டிருந்த­து. இதனை நன்குணர்ந்த
ரசிகர்களும், மக்களுமே மெல்லமெல்ல ரஜினிகாந்த் மீதான ஈர்ப்பிலிருந்து
தங்களை விடுவித்துக்கொண்டு. எதார்த்த நிகழ்வுகளை எடுத்துச்சொல்லும்
குறைந்த முதலீட்டுப் படங்களுக்கு கவனத்தை செலுத்தியிருக்கிறார்­கள் . இது
இயக்குநர் என்கிற முறையில் பா ரஞ்சித் அவர்களுக்கே தெரியும் . மேலும் சில
உண்மைகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை , தற்போதுள்ள சூழலில் ரஜினிகாந்த்
கதாநாயகனாக நடிப்பதையே மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, வயது வித்தியாசமின்றி
தந்தை ஸ்தானத்தில் ஜோடியாக டூயட் ரஜினிகாந்திற்கு தேவைதானா? என்கிற
விமர்சனமும் அனேக மக்களால் பேசப்படுகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் எனும்
தகவல் பரிமாற்றத்தில் பெரும் பிரபலமாக பேசப்பட்ட காணொளி நிச்சயம்
அனைவருக்கும் தெரிந்தே இருக்கும் அந்தளவிற்கு வாட்ஸ் அப் எனும் ஊடகம்
ஒவ்வொரு கையிலும் புழங்கும் ஊடகமாக உள்ளது . அந்த வாட்ஸ் அப் காணொளியில்
2050ல் இந்தியா என்கிற செய்திவாசிப்பு நகைச்சுவை நினைவிருக்கலாம் அதில்
ரஜினிகாந்த் அவர்களின் புதிய படத்திற்கு " தெய்வத்திருமகள் குழந்தை
நட்சத்திர நாயகி பேபிசாரா ஜோடியாக நடிக்கிறார், என்று நகைச்சுவையாக
காணொளியை அமைத்திருப்பார்கள். இந்த வசனத்தை உறுவாக்கியவரின் மனநிலையில்
எவ்வித தாக்கம் இருந்திருக்குமென்று உணர முடிகிறது .ஆகவே இவற்றையெல்லாம்
கருத்தில் கொண்டு இயக்குநர் பா ரஞ்சித் அவர்கள் நல்லதொரு இயக்கத்தின்
மூலமாக ஒரு சிறந்த படத்தினை உறுவாக்க இறுதியான வாழ்த்துக்களை
தெரியபடுத்தி விடலாம் . லிங்காவெனும் இழப்பிற்கு மீட்டொப்படைப்பு
திரைப்படமொன்று விரைவில் வெளிவரலாம் ஆனால் அதில் நிச்சயமாக சமூகம்
பேசப்போவதில்லை , சமூகப்பேச்சிற்கும் அதிலிடமில்லை. பார்ப்போம் ,
எதிர்பார்ப்புக்களோடு­,,,,,,

Comments

 1. அந்த நகைச்சுவை செய்தி வாசிப்பு

  https://m.youtube.com/watch?v=eYeCbJVW_yo&itct=CDwQpDAYACITCPWJofG1qMUCFYgzqgod1WsAmVIYaG93IHRvIGluZGlhIDIwNTAgY29tZWR5&client=mv-google&gl=IN&hl=en-GB

  ReplyDelete
 2. அதென்ன உறுவாக்க? புதுசா தமிழ் கத்துக்கொண்டு இருக்கீங்களா? எழுத்துப்பிழை, கருத்துப் பிழைனு எல்லாமே இந்தப் பதிவில் இருக்கு!

  கொஞ்சம் பொறுமை காக்கிறது?! ரஞ்சித் என்னதான் படம் எடுக்கிறாருனு? எதுக்கு இந்த அவசரம்??

  ReplyDelete
 3. ரஜினியை வைத்து நிச்சயமாக படத்தை (உறுவாக்க,,?) முடியுமேத் தவிர பா ரஞ்சித்தால் படைப்பாளியாக படைத்திட முடியாதென்பது புரிதல் ,,,

  கைபேசியில் தட்டச்சு செய்வதன் மூலமாக பிழைகள் ஏற்படுகின்றது திருத்திக் கொள்கிறேன்

  ReplyDelete
 4. படம் பூஜை போடும் முன்னாலேயே படத்தைப் பத்தி தெளிவான முடிவுக்கு வந்துட்டீங்க போல இருக்கு. உங்க அபாரத் திறமைக்கு என் வாழ்த்துகள்! அப்படியே ஒரு விமர்சனத்தையும் உங்க யூகத்தின் படியே எழுதி இப்போவே முடிச்சிடலாமே? உங்களைப் போல் திறமைசாலிகள் எதுக்கு படம் எடுத்து அதை வெளியிட்ட பிறகு அதைப் பார்த்துட்டு விமர்சனம் எழுதணும்? விரைவில் உங்க கற்பனையால் உருவாக்கப்பட்ட ரஞ்சித்-ரஜினி படத்துக்கு, "இந்தப்படம் ஒரு திராபை" னு சொல்லி நீங்க முடிவு செய்த ஒரு விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன், ஐயா!

  ReplyDelete
 5. தோழரே திரைப்பட விமர்சனம் எழுதுவது என்பணியில்லை அதற்கு எத்தனையோ விமர்சகர்கள் இருக்கிறார்கள் . பா ரஞ்சித் அவர்கள் தனது சமூகப் பார்வையிலிருந்து விலகிவிடுவார் எனும் உறுதியின்பால் எழுதிய பதிவு இது, தமிழகத்தில் ரஜினிக்கான எதார்த்த நிலை இதுதானே,,

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்