புகைப்பட கலைஞர்களை கேலிசெய்யும் இணையம்


ஒரு புகைப்படமெடுக்க உயிரை
பணயம் வைத்தால்தான்
முடியுமென்றால் அதைச்
செய்பவர்களை பாராட்டும்
மனமின்றி கேலிகளுக்கு
இரையாக்குவதை காணுகின்ற
பொழுது இந்த மனிதர்கள்
படைப்பின் மீதுள்ள பற்றினை
என்றோ கழட்டி
எரிந்துவிட்டார்களென்றேத்
தோன்றுகிறது. மேற்கண்ட
புகைப்படம் அந்த வகையறாக்களின்
கைகளில் சிக்கியதுதான்
காலத்தின் கொடுமை.
இயற்கையையும்,இயற்கையின்
பரிணாம வளர்ச்சியையும்
அதனூடாக வெளியுலகைக்
காணும் உயிர்களையும்
பெரும்பாலும் புகைப்படங்களே
நமக்கு எடுத்துச்சொல்கிறது. அந்த
வகையில் அப்புகைப்பட
கலைஞர்களை பாராட்டக்கூட
தேவையில்லை
கேலிகிண்டலுக்கு
உட்படுத்தாதீர்கள் என்பதே
வேண்டுகோளாய் இருக்கிறது.
மேற்காணும் புகைப்படமானது
இணைய வெளியில் "சாவுடா
மவனே" "எதுக்கிந்த வேல"
இதுபோன்று பல்வேறு கேலிக்
கிண்டலுக்கு ஆட்படுத்தப்பட்டு வலம்
வந்துக் கொண்டிருக்கிறது.
எனக்கே அவ்வகையான கேலிக்
கிண்டலுக்கு ஆட்படுத்தப்பட்டு
வாட்ச் அப் எனும் இணைய
வெளியில்தான் கிடைத்தது.
பார்த்தவுடன் பதறிப்போய்
அரைமணி நேர விவாதத்தால்
அனுப்பிய நபரை மனம்மாற்றிய
தருணம்,ஒரு புகைப்பட
கலைஞனின்
வலிகளையும்,வேதனைகளையும்
ஒருவருக்கேனும்
உணரச்செய்தோமே என்கிற ஆத்ம
திருப்தியடைந்தேன். கையில் ஒரு
கேமரா எடுத்தவனெல்லாம்
கலைஞனா? எனப்
பெரும்பான்மையானோர்
கேட்கிறார்கள். ஆமாம் அவன்
கலைஞன்தான்! தன் கையுள்ள கேமராவினால் தன்
கண்களை
தூய்மைபடுத்துகிறானே அவன்
கலைஞனில்லாமல் வேறென்னவாக
இருக்க முடியும் . அதற்காக
தன்னுயிரை கூட துட்சமென
எண்ணி உலகிற்கு புகைப்படம்
மூலம் புலப்படாத பல விஷயங்களை
தகவல்களாக நமக்குத் தருகிறானே
அவன் கலைஞனில்லாமல்
வெறன்னவாக இருக்க முடியும்.
இதல் கையில் கிடைத்த கேமராவை
கவலையின்றி குற்றச்
செயல்களுக்கு கொண்டுசெல்லும்
மூடர்களை இணைத்துக்
காட்டிவிடாதீர்கள். உண்மையையும்
,பொய்மையையும்
நேர்மையும்,நெறிதவறுதலையும்
எதிரெதிரேதானே நாம் வைத்துப்
பார்க்கிறோம் அந்த வகையில்
உண்மை உழைப்புகளை நாமேன்
கேலிக்குள்ளாக்குகிறோம்,
சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு புகைப்பட கலைஞனிடம்
உனக்கு உயிர் முக்கியமா?
புகைப்படக் கலை முக்கியமா?
எனக்கேட்டால் புகைப்படக் கலையே
முக்கியமென்பான் ஏனென்றால்
அவன் புகைப்படக் கலையைத்தான்
உயிராக நேசிப்பவனாக
இருக்கிறான்.
"என் கற்பனையில் முளைத்தெழும்
கவிதைகளை யாரோ ஒருவன்
எடுத்த புகைப்படம்
காட்சிபடுத்துகிறது
கவிதைக்காரனை
காட்சிக்காரனே
வெளிபடுத்துகிறான்" என்பதை
நானெப்போதும் என்மனதினில்
ஏற்றிவிட்டேன். உணர்ந்து நீங்கள்
செயல்பட்டால் உதவாத
கேலிப்பேச்சுகள் ஒழிந்து
போகுமென்பது உண்மை.

என்னை சமூகத்தின் மீது
பார்வையை திருப்பு!
அவர்களுக்காவே நீ வாழ்ந்திட
வேண்டுமென்று! உணர்த்தியது
ஒரு புகைப்படம் என்றுச்
சொன்னால் அப்புகைப்படமெடுத்த
படைப்பாளியை எப்படி என்னால்
கேலிசெய்ய முடியும்.
முதன்முதலாக இதுதான்
உன்சமூகம் இவர்கள் படும்
வேதனை,வலிகள் இதுதானென்று
எனக்கு உணர்த்தியது 1984ல் நடந்த
போபால் விஷவாயு விபத்தில்
உயிரிழந்து மண்ணில்
புதையுண்டு கிடந்த அந்தக்
குழந்தையின் புகைப்படம்தான்.
உயிரின் வலியை உணர்த்திய
அப்பச்சிளம் குழந்தையை
புகைப்படமெடுத்து போபாலின்
அவலநிலையையும்,இந்தியாவின்
அடிமை நிலையையும்,உலக
ஏகாதிபத்தியத்தின் கோர
முகத்தையும் வெளியுலகிற்குக்
காட்டிய அந்த ரகு ராய் (Raghu Rai)
எனும் புகைப்படக் கலைஞனை
கலாய்த்துவிட்டு
மிகச்சாதாரணமாய் கடந்து
போனால் நானுமொரு
குற்றவாளி தானே! புரிந்து
கொள்ளுங்கள் என் சமூகமே
உணர்வுகளுக்கும்
அவ்வுணர்வுகளை வெளிபடுத்தும்
புகைப்படத்தையும்,புகைப்பட
கலைஞர்களையும் இணைய
வெளியிலோ அல்லது
பொதுவெளியிலோ
கூடுமானவரை கேலிக்
கிண்டலுக்கு உட்படுத்தாமல்
மதிப்பு கொடுங்கள். மனமிருந்தால்
பாராட்டி விடுங்கள்.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்