ஓர் "இசை(ஞானி)த்தேடல்"

அன்று விடுமுறை தினம் வேளைநாட்களில் எப்போதும்
ஒளிபரப்பப்படும் நிகழ்சிகளிலிருந்து வேறுபட்டு
விடுமுறை தினமாயிற்றே மக்களை வெளியில்
சுத்தவிடாதபடி பார்த்துக்கொள்ள
வேண்டுமே என்பதிலும் அதன் கூடவே
பார்வையாளர்களை கவர்ந்திழுப்பதில் போட்டியும்
அன்றைய விடுமுறை தினத்தில் முற்றிலுமாக
ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தது.எல்லா
தொலைகாட்சிகளிலும் ஒரே
ஓலக்குரல்களாக ஒருமித்த அதிர்வலைகளை
எழுப்பிக்கொண்டிருந்தான .
நானின்னும் எழுந்திருக்க வில்லை எனக்கது
பள்ளிப்பருவம் அரையாண்டுத் தேர்வுக்குப்
பிறகான விடுமுறை தினங்களை சுவாசித்துக்
கொண்டிருந்தமையால்
தூக்கமும்,விளையாட்டும்,விளையாட்டோடு குரும்பும்,
ஊர்சுற்றுவதுமாக காலத்தை கடக்க திட்டமிட்ட
பருவம் . எதைபற்றியும்
கவலைகொள்ளாத தூக்கம் அன்றைய
தினதூக்கம் .யாரும் மறந்திருக்க
மாட்டார்கள் அன்றைய தினத்தை, அன்று
26.12.2004 ஞாயிற்றுக் கிழமை . ஆம்
சுனாமியெனும் பேரலைகள் நம் சமூகத்தை
விழுங்கித்தின்ற தினமேதான் . என் தூக்கத்தை
கலைத்து துக்கத்தை அனுசரிக்க வேண்டும் சீக்கிரம்
எழுந்திரு எனச் சொல்வதுபோல என்னை
எழுப்பி விட்டது அந்த இசை, அதுவரை எங்கும்
கேட்டிராத இசை என் அடிமனதின் ஆழத்தைத்
தேடியே மிகவும் ஆழமாக சென்றுவிட்ட இசை
ஒலித்துக்கொண்டிருந்தது அந்தப்
பேரலைகள் விட்டுச் சென்ற பிணங்களின்
வாடையில் பக்குவமாய் நகர்ந்து போய் உலக
பாமரத் தோழர்களையெல்லாம் துக்கத்தை
அனுசரிக்கச் சொல்லி எழுப்பி விடுகிறது
அந்த இசை.சன்டிவி
தொலைகாட்சியானது தனது
ஞாயிற்றுக்கிழமை நிகழ்சிகளை தள்ளிவைத்துவிட்டு
ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தது
சுனாமியின் அகோர முகத்தையும் அதனால்
ஏற்பட்ட உயிரிழப்புகளையும்,
பொருளிழப்புகளையும் உலகுக்கு
காட்டிக் கொண்டிருந்தது. அதன்
பின்னனியில் ஒலித்துக்
கொண்டிருந்தது அந்த இசை
ரம்மியமான இசை
நிச்சயமாக உணரமுடிகிறது அழும் மனிதனின்
கூடவே வீணையும் அழுமென்று
ஆம் வீணை அழுதுக்கொண்டிருந்தது
அதன் பார்வையில்
எட்டாத ஏராளமான உயிர்களும்
சுனாமியெனும் கோரத்தை கண்டு
வீணையுடன் கூடவே அழுது
கொண்டிருந்தார்கள் .
அவர்களுக்குள் இருக்கும் இரக்கத்தின்
ஆன்மாவை வீணை
மீட்டுக்கொண்டிருந்தத­­ு
வீணை மீட்டியவர் இசைஞானி இளையராஜா,
இசையின் பெயர் "HOW TO NAME IT"
கேட்டதும் மனந்துடிக்க
கண்ணீரில் தேகம் சிலிர்க்க முதன் முதலாய்
ஒரு சோகத்தின் உயிர்த்துடிப்பை உணர்த்திய அந்த
இசையின் பெயரும் தெரியாது
வாசித்தவர் யாரென்றும்
தெரியாது
படைப்பாளி புதைக்கப்படுவதை பூமிதாங்குமா
என்ன?
தேடல்கள் தானே நமக்கான தீர்வுகளை
வாரிவழங்கும் தேடினேன் யாரென்று
கூடவே இசையையும்
தெரியவுமில்லை புலப்படவுமில்லை
ஆனால் இசையும் இசையோடு கலந்த
சுனாமியின் பேரழிவும் நெஞ்சை விட்டு
நீங்கிடவில்லை நானும் தேடலை நிறுத்துவதாக
இல்லை .
தொழில்நுட்பமோ, இணையமோ அப்போது
என்னிடமில்லை ஏழ்மையின் பிடியில் சிக்கியதால்
வந்த வினையாக இருக்கும்
வீணையை மீட்டெடுக்க ஏழ்மை
தடைசெய்யுமானால் தடையைமீறி
தேடுவதுதானே தவிப்புகள் அடங்கும் .
காத்திருந்தேன் கைகளுக்கு கிட்டியது
கைபேசியொன்று, அது
கைபேசியுகமென அனைவரும் அறிவார்கள்.
ஆண்டு 2006 கைபேசியில் காசை போட்டு கூகுள்
தேடுபொறியில் தேடலனானேன்
கிட்டவில்லை , எப்படி கிட்டும்? இசை படைப்பாளி
யாரென்றே தெரியாது, இசையின்
பெயரும் தெரியாது, அது
இசைகோப்பா? இல்லை ஏதேனும் படத்தில்
இடம்பெற்றதா என்று எதுவுமே
தெரியாமல் எப்படி கூகுள் பதிலளிக்கும்,
அப்பொழுதுதான் அந்த இசையை
மீட்டுக் கொடுத்தார் ஒருவர் , அவர்
யாரென்றே தெரியாது ,
சென்னையிலிருந்து செங்கல்பட்டு
செல்லும் மிண்சார ரயிலில் கைபேசி அழைப்பு
மணியாக முப்பது வினாடிகள் கேட்டேன் அந்த
இசையை,,,அவர் தூங்கிக்கொண்டிருந்தா­­
ர் அலைச்சலாக இருக்கலாம் அல்லது
பயணக்களப்பாகவும் இருக்கலாம் .
எழுப்பேனேன் "சார் போன் வருது" என்றேன்
தூக்கத்திலிருந்து மெதுவாக சோம்பலை
முறித்துக்கொண்டு திடீரென்று
கைபேசியை பதற்றோடு எடுத்து " இதோ கிட்ட
நெருங்கிட்டேன்மா பொத்தேரி
ரயில்வே ஸ்டேஷன்ல இருக்கேன் இதோ
வந்துவிடுவேன்" என்றுச் சொல்லி
முடித்துவிட்டு கைபேசி அணைத்தார் 35வயது
மதிக்கத்தக்க மனிதர்.
தேடிக்கொண்டிருக்கும் இசையை கேட்ட
மாத்திரத்திலே பறித்துவிட வேண்டுமென்று
தோன்றியது தைரியமாக கேட்டேன்
(சிரித்துக்கொண்டு) "சார் அந்த
ரிங்க்டோனை என் செல்லுக்கு அனுப்பங்களேன்
எனக்கு ரொம்ப பிடிச்ச மியூசிக் சார்
அது பல வருஷமா தேடிகிட்டு இருக்கேன்,,, கொஞ்சம் அனுப்பி விடுங்களேன்
சார்" என்று கேட்டேன் . அவர்
சிரித்துக்கொண்டே
ஃப்ளூடூத் இருக்கா என்றார் . இருக்குசார்
என்றேன் ,(motorola v360 வாழ்வில்
மறக்கமுடியாத கைபேசி அதுயெனக்கு) சரி
ஆன் பன்னுங்க அனுப்பி விட்ரேன் என்றார்
அவர்,
ஏற்றிக்கொண்டேன். அழைப்பு
மணியாக கிடைத்த மகிழ்சியில் எதுவும்
புலப்படவில்லை எனக்கு அவர் இறங்கிய
பின்னர்தான் இசையை பற்றி விசாரிக்க மறந்து
விட்டோமே என்று என்னை நானே
வருத்திக்கொண்டு " சரி பரவாயில்லை
இசையாவது கிடைத்ததே என்கிற சந்தோஷப்
பட்டுக்கொண்டேன் . பிறகு நான் வீடு
வந்து சேர்ந்ததும் கவணித்த விஷயம் தான்
அழைப்புமணியின் தலைப்பு "HOW TO NAME IT "
என்றிருந்தது அதை அப்படியே கூகுள்
தேடுபொறியில் தேடலானேன் முதல்
பக்கத்தை முழுதும் யூடுப் அடைத்துக்
கொண்டது இளையராஜா
புகைபடுத்துடன் ,, யாரென்று
தெரிந்துவிட்டது இசைஞானிதான் அந்த
இசைக்கு சொந்தக்காரரென
அறிந்த பிறகுதான் அவரின் தீவிர ரசிகனேன்.
பிறகு மூன்று நான்கு பக்கங்களை திருப்பியபின்
"How to name it" தறவிறக்க வலைதளம் சிக்கியது
www.123musiq.com என்பது அவ்வலைதளம் ,
இன்று அவ்வலைதளம் இல்லை பாவம்
உரிமையாளர் வேறுயாருக்கோ விற்றுவிட்டார்
போலும் . ஒருவழியாக தரவிறக்கம் செய்து
இன்றும் அவ்விசையை பாதுகாத்து
கேட்டுக்கொண்டிருக்கிறேன் , தேடலின்
நினைவுகளாய், சுனாமியின் நினைவுகளாய்,
என் நெஞ்சில்
குடிகொண்டிருக்கிறார் இசைஞானி
இளையராஜா அவர்கள்,, எத்தனை யுகங்கள்
கடந்து சென்றாலும்
இதுபோலொரு அனுபவத்தை ஏதேனும் ஒரு
இசை நமக்கு தந்துவிட்டுப்போகிறது
தேடலுக்கான தூண்டலையும் சேர்த்தே ,,,
தேடலில்தான் அளவுகடந்த சுகமிருக்கிறது
எதையாவது தேடிக்கொண்டே இருப்போம்
கெட்டதை தவிர்த்து" "How to name it" இசையை
சுனாமிப் பேரலையோடு சேர்த்து காட்சிக்கு வைத்த
சன்டிவி நினைவில் நீங்காயிடம் பிடித்துள்ளது.
இசைஞானி இளையராஜா இன்னமும்
இசைக்கான பிரம்மனாகவே எனக்குத்
தெரிகிறார் .

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்