அண்ணல் அம்பேத்கரை கைபேசியில் அழைத்தால் கொலைவிழும் இந்தியத்தில்,,,

அண்ணல் அம்பேத்கர் அப்படியென்னதான் பாவச்செயலை செய்துவிட்டார் . அவர்
பெயரை உச்சரிக்கையில் கொலைகூட செய்துவிடுகிறதே இந்தச் சமூகம். தலித்தின
மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்காக பாடுபட்டார்,பார்ப்பா­னிய
எதிர்ப்பை முன்மொழிந்து அதோடு நின்றுவிடாமல் அதையும் செயல்படுத்தினார் .
காந்தியின் மீது கடுமையான விமர்சனம் வைத்தார். இந்திய
அரசியலமைச்சட்டத்தில்­ தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை
மக்களுக்கு கல்வியுரிமை மற்றும் சமவுரிமை பெற்றுத் தந்தார் இந்தச்
செயல்களுக்காக இன்றுவரையில் பார்ப்பானிய இந்துத்துவ ஆதிக்கச் சாதிவெறி
அவரை தண்டித்துக் கொண்டிருக்கிறது எனும்போது எங்களின் கோபத்தைக் காட்டகூட
ஆயுதம் ஏந்துதல் தவறென்று அந்த அப்பாவி அம்பேத்கர் எங்களுக்கு
கற்பித்துவிட்டானே என்று நாங்களும் அவரின் மீது பழிபோட்டுவிட்டு
தப்பித்துச் சொல்கிறோம். அம்பேத்கர் காந்தியை கடுமையாக
விமர்சித்தாரென்றாலோ அல்லது எதிர்த்து களமாடினார் என்றாலோ அம்பேத்கர்தானே
காந்தியை கொன்றிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் காந்தி கடைசிவரை எந்த
இந்துத்துவத்தை ஆதரித்தாரோ அதே இந்துத்தவ பார்ப்பானிய ஆதிக்கத்தில்
முளைத்தெழுந்த கோட்சேவால்தானே கொல்லப்பட்டார். அவ்வாறிருக்க
ஒட்டுமொத்தமாக அம்பேத்கரை காந்திக்கு எதிராக திருப்பிவிடுதல் எப்படி
முறையாகும் என்கிற கேள்வி எழத்தானேச் செய்யும். இவற்றையெல்லாம்
நோக்கும்போது தலித்தின விரோதபோக்கினை வளர்த்தெடுத்து அதன் மூலம்
தம்மதத்தையும் மதவெறியையும் வளர்த்துவிடலாமென்கிற­ ஆதிக்கத்தில்
அடிபணிந்தே கிடக்கிறது நம் இந்தியச் சமூகம் . மாற்றமில்லை அதை
வெறியுடன்தான் நாங்களின்னும் அம்பேத்கர் எனும் தலித்பயலை எதிர்க்கிறோம்.
எதிர்ப்போம், எதிர்த்துக்கொண்டே இருப்போம் கடைசியில் எரித்தே விடுவோம்
என்கிறது இந்துத்துவ பார்ப்பானிய ஆதிக்கச் சாதிவெறி. இவர்களின்
சூருளைப்பின்படியே நிகழ்வுகளுமிங்கே தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது
அதுவும் எந்தளவிற்கு தொழில்நுட்பம் வளர்கிறதோ அதே அளவிற்கு அதே
தொழில்நுட்பத்தில் தீண்டாமை திணிப்பென்றால் சமூகத்தின் வெட்கக்கேடாக
இதனையேன் பார்க்கக்கூடாது?
பார்வையில் படுகிறது சமூக நிகழ்வுகள்!

அம்பேத்கர் பாடலை ரிங்டோனாக வைத்ததற்காக தலித் மாணவர் அடித்துக் கொலை
ஷீரடியில் அம்பேத்கர் பாடலை செல்போனில் ரிங்டோனாக வைத்ததற்காக தலித்
வாலிபர் ஒருவரை எட்டு பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை
செய்திருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நர்ஸிங் மாணவர் சாகர் ஷெஜ்வால் திருமண
விழாவில் கலந்து கொள்ள கோவில் நகரமான ஷீரடிக்கு சென்றுள்ளார். கடந்த 16ம்
தேதி தனது உறவினர்கள் இரண்டு பேருடன் உள்ளூரில் உள்ள மதுபான கடைக்கு
அவர் சென்றுள்ளார். கடையில் இருக்கையில் சாகரின் செல்போன் ஒலித்துள்ளது.
தலித் பிரிவைச் சேர்ந்த சாகர் அம்பேத்கர் பற்றிய பாடலை ரிங்டோனாக
வைத்துள்ளார்.
அம்பேத்கர் பாடல் ஒலித்ததை பார்த்து ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை
பீர் பாட்டிலால் அடித்து பைக்கில் ஏற்றி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு
இழுத்துச் சென்று அடித்தே கொன்றிருக்கிறார்கள். அன்று மாலை 6.30 மணிக்கு
ரூய் கிராமம் அருகே சாகரின் உடல் நிர்வாணமாக கிடப்பதை மக்கள் பார்த்து
போலீசாருக்கு தகவல் தெரித்துள்ளார்கள் . இதுதான் சம்பவம் இன்னும் தீர்வு
எட்டப்படவிலையென்றும் தகவல்கள் வருகின்றன. இதிலும் தலித்துவத்திற்கான
ஆதரவொலியினை எழுப்பியிருந்தாலும் விமர்சனம் வைக்கப்படும் போது அவர்களும்
உள்ளடக்கப்படுவார்கள்­ . தலித்துகளை விதிவிலக்கிற்கு உட்படுத்த வேண்டிய
கட்டாயத்தை அதே தலுத்துகள்தான் ஏற்படுத்தியிருக்கிறா­ர்கள். படுகொலைச்
சம்பவத்திற்கான சூழலை தீர்மானித்த இடம் எது ? மதுபான விடுதியாக
இருக்கிறதே? மதுவினை குடித்து மதியினை இழந்து நீயும் மிருகமாகிவிடு!
என்றா அம்பேத்கர் உங்களுக்கு கற்பித்தார். ஆசை துறந்து மதுவினை பாவமென்ற
பௌத்த சித்தாந்தத்தை புகுத்திய அண்ணல் அம்பேத்கரை இதைவிட இழிவுபடுத்த
முடியுமா? உலகில் மூவர் மட்டுமே கற்பி! என்பதனை முதலில் முன்வைத்தவர்கள்.
சாக்ரடீஸ்,கார்ல்மார்­க்ஸ்,அம்பேத்கர்,இதுவ­ாவது இந்த தலித்சமூகத்திற்கு
தெரியுமா என்றால் தெரியாதென்றே விழி பிதுக்குவார்கள் காரணம் அவர்களின்
விழிகளில் மதுபோதை வழிந்தோடுகிறது. அடிமைபட்ட ஒரு சமூகம் மதுவிற்கும்,
மாதுவிற்கும்,சூதுவிற­்கும் விலைபோகும் வரையில் இங்கே எவ்வித சமூக
முன்னேற்றமும் நிகழாது அம்பேத்கரும் ஆதிக்கச் சாதி வெறியர்களால்
அடிவாங்கிக்கொண்டேதான­ிருப்பார்.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்