முள்ளிவாய்க்கால் முன்னிருத்தும் ஓர் ஈழப் பயணம் . நினைவேந்தல்!

(படம்: ஈழ இறுதி யுத்தத்தில் வீசும்
குண்டுகளிலிருந்து தம்மையே
கேடயமாக்கி தன்குழந்தையை
காப்பாற்றும் ஈழத்தாய்)

மறக்க முடியுமா அந்த இரண்டு நாட்களை
வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட ஓர்
இனவழிப்பல்லவா அது 2009 மே மாதம் 17,18 ஆகிய இரண்டு தேதிகளில்
ஈழத்தையும் ஈழத்து
முள்ளிவாய்க்காலையும் தொலைத்து
நாடிழந்து விரட்டப்பட்ட தேசங்களிலும்
அடிமை விலங்குகளாக இருக்கிறார்களே
எமது ஈழத்து தமிழுறவுகள் . காலம்
கடந்து ஏழாண்டுகளை தொட்டுவிட்ட
நிலையில் தொடரும் அடிமை
முள்வேளிகளில் எம்தமிழினம்
சிக்கிக்கொண்டிருப்பதை அப்படியே தான்
பார்த்துக்கொண்டு நாமும் கடந்து
போகின்றோம். முள்ளிவாய்க்கால் இறுதிப்
போரின் இனப்படுகொலைகளுக்கு ஆளான
எம்மின ஈழத்துச் சொந்தங்கள் இரண்டு
எதிர்பார்ப்புகளைத்தான்
கொண்டிருந்தார்கள். ஒன்று எங்கள்
தமிழ்ச்சமூகம் தமிழீழத்திற்கு போராடும் .
இரண்டாவது தாய்வழி இந்தியதேசம்
எங்களுக்காக இரக்கங்காட்டும் என்கிற
எதிர்ப்பார்ப்பில் ஏமாற்றம் மட்டுமே
மிஞ்சியதில் ஏக்கத்தோடு உயிரை
மாய்த்தார்களே மறக்க முடியுமா அந்த
இனவழிப்புப் படுகொலைகளை,,,
கரன்ஸிக்கும் , பதவிக்கும் விலைபோன
கருணாகரன் ஒன்றைத் தெளிவுடச்
சொல்கிறான் . அவன் துரோகியானாலும்
தோல்வி பயத்தினால் உளறினானோ
என்னவோ அதுவே உண்மையான
இந்தியத்தின் முகமுடிகளை
கிழித்தெரிந்தது.இறுதிகட்டப் போரின்
இனப்படுகொலைகளை அதிகம்
நிகழ்த்தியது "இந்திய அமைதிப்படை
ராணுவமே" எனும் தகவலை விட்டுச்
சென்றிருக்கிறான் கருணாகரன் .
அதோடுமட்டுமல்லாமல் பெண்ணினம்
மீதான தாக்குதலையும்,பாலியல்
வன்புணர்வுகளையும்,
உடற்சிதைவையும்,
கருவழித்தல்களையும் , சர்வ
சாதாரணமாகச் செய்தது இந்திய
அமைதிப்படை என்கிறான் கருணாகரன்.
துரோகத்தின் குற்றவுணர்ச்சியால்
வெளிபடும் பயத்தின் காரணமாக
கருணாவின் வாயில் வந்தச்
சொற்களனைத்தும் உண்மை. இது இந்திய
ராணுவத்தின் சர்வாதிகார போக்கின்
எதார்த்த உண்மையும் கூட, பல தாய்களின்
கருவுறைக்குள்ளே கத்தி விட்டுக்
கிழித்து ஈழ பச்சிளம் குழந்தைகளை
அறுத்தெறிந்த அந்த இறுதிப் போர்
முள்ளிவாய்க்காலின் நினைவுகளையா
எங்களை மறக்கச் சொல்கிறீர்கள் . எப்படி
எங்களால் மறக்கவும் மன்னிக்கவும்
முடியும் . மனித வடிவில் மிருகங்கள்
எங்களை ஆட்கொண்டிருக்கையில்
மனசாட்சிதானே எங்களுக்கு ஆதரவாய்
நிற்கும் . அதை கழட்டி எரிந்து போக
நாங்களொன்றொம் ஏகாதிபத்தியர்கள் அல்ல
வாழும் மனிதர்கள். எத்தனை எத்தனை
இசைப்பிரியாக்களின் வாழ்க்கைகளை
சீரழித்திருப்பீர்கள் சிங்கள இந்திய
கூட்டாண்மைகளே கொஞ்சமேனும்
உங்களை பெற்றெடுத்தவளும்
ஒருதாய்தான் என்பதை எப்படி உங்களால்
மறக்க முடிந்தது. ஈழத்து மண்மீதான
வெறியாட்டும் என்றுமே எங்களால்
மறக்கவும் முடியாது,மன்னிக்கவும்
முடியாது.எம்மின ஈழத்து
முள்ளிவாய்க்கால்
இனப்படுகொலைகளுக்கு மற்றவர்கள் மீது
பழிபோட்டுவிட்டு வெறும் துக்க
அனுசரிப்பாக கடந்து போக என்னால்
முடியாவில்லை . அத்தனை
துயரங்களையும் கண்டுகொள்ளாமல், ஓர்
இனம் அழிகிறதே என்கிற பதற்றம்கூட
கொஞ்சமும் இல்லாமல் கடந்துபோன
எம்தமிழ்ச்சமூகமும் இதற்குக் காரணம்
அதில் நானும் அடங்குவேன். ஓர்
பேரினவாத போராட்டத்தில் தமிழ்ச் சமூகம்
எவ்வித அக்கரையுமின்றி சுக போக
வாழ்க்கை வாழ்கிறது. இதையே
காரணங்காட்டி அரசியலும் இங்கே காய்
நகர்த்துகிறது. எதுவுமற்று நாடிழந்து,
நாடிநரம்பிழந்து அனாதைகளாக நம்
ஈழத்துத் தமிழினம்
அல்லோலப்படுவதையும் பார்த்துக்கொண்டு
மிகச் சாதாரணமாக நகர்ந்து போகையில்
நாம் மனிதர்களா? மிருகமா? என்ற
கேள்வியானது எழத்தானே செய்யும்.2009
ஈழத்து முள்ளிவாக்கால் இறுதியுத்தை
நிறுத்தக்கோரி இந்திய அரசிடமும்,
மாநில அரசிடமும் முறையிடும்
போராட்டமாக மாணவர் இயக்கத்தை ஒன்று
கூட்டி சென்னை பாரிமுனையில்
சாலைமறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த
வேளையில் அங்கே ஸ்தமித்துப் போன
வாகன ஓட்டிகளிடம் வந்த வசைபாடல்
சொற்களை இன்னமும் என்னால் மறக்க
முடியவில்லை இதுவா தமிழினத்தின்
இனப் பற்று என்று எனக்குள்ளே குமுறி
அழுதுக்கொண்டிருந்தேன். போக்குவரத்து
நெரிசலுக்கு ஆட்பட்ட மக்கள் ஒருமித்த
குரலோடு எங்கிடம் சண்டையிட எழுந்தது
அந்த வாசகம் " அங்க எவனோ செத்ததுக்கு
இங்க ஏண்டா ஒப்பாரி வச்சி எங்க பொழப்ப
கெடுக்கிறீங்க" என்று ஈழத்து
இனவழிப்பு போராட்ட மாணவர்களைப்
பார்த்துக் கேட்டார்கள் நம் தமிழினச்
சொந்தங்கள். உணர்த்தியது ஒன்றேதான்
"இங்கே இனப்பற்று" முற்றிலுமாக
ஒழிக்கப்பட்டுவிட்டது என்று
புலனாகிறது. பதினோரு கோடிகளைத்
தாண்டிய எம்தமிழினம் வெறும்
பணத்திற்கான பாதையினை
வகுத்துக்கொண்டதும், தமிழ்மீதும்,
தமிழினத்தின் மீதும், தமிழினச்
சொந்தமான ஈழத்தின் மீதும் இவர்களுக்கு
பற்றில்லை என்பதை உணரும்
வேளையில் உயிர் இன்றே பிரியாதோ! என
நினைத்துக் கொண்டது தான் என்
வாழ்வின் எச்சம். அரசியாளர்களின்
அடாடித் தனத்தோடு ஒன்றி விட்டார்கள் எம்
தமிழினச் சொந்தங்கள் . இரு திராவிட
அரசியலும்.அதன் கூடவேயான கூட்டணி
அரசியலும் ஒட்டுமொத்தமாக இச்சதிச்
செயலை செய்திருக்கிறது என்பது
புலனாகிறது. எது எங்களை
அடக்கியாள்கிறதோ அதனை
உடைத்தெறிந்து விரைவிலொரு ஈழத்து
முள்ளிவாய்க்கால் விடுதலையை நோக்கி
விடாமல் நாங்கள் பயணிக்கிறோம்.
விடுதலைப் புலிகளே எங்களின்
விடுதலைக்கான விடிவெள்ளியென
நாங்கள் எப்போதோ உணர்ந்து விட்டும் .
விரைவில் பெற்றுவிடுவோம் ஈழத்தை,,,
அதுவரையில் எங்களின் உள்ளத்தில்
குடிகொண்டிருக்கும் முள்ளிவாய்க்கால்
நினைவலைகள். மறப்பதும்,
மண்டியிடுவதும் ஈழத்து
தமிழினத்திற்கு என்றுமே
இருந்ததில்லை. எங்களுக்கும் அது
தேவையில்லை. ஈழம் வெல்லும் அதை
காலம் சொல்லும்.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்