காகித சிற்பம்

பூக்களே பொறாமை
கொள்ள வேண்டாம்
பொறுமையாய்
இருங்கள்,,,

நோட்டமிருகிறேன்
உங்களின்
நுட்ப நுணுக்கங்களை,,,

வியப்பில் விழுந்துள்ளீர்கள் உணர்த்தும்
விரித்த இதழ்களில் மென்மையான மெய்சிலிர்த்தலை
கண்டு நானும்
ரசிக்கிறேன்,,,

அனுவனுவனாய்
அவதாரத்
தோரணைகளை
தோற்றுவிக்கும்
சிற்பக் கலைஞர்கள் நாங்கள்,,,

செதுக்கிவிட்டோம்
காகித சிற்பமொன்றை
கண்டு நீங்கள்
மகிழுங்கள்,,,

இது
நேசத்தின் சின்னமா! பாசத்தின் சின்னமா!
பற்றுதலின் சின்னமா!
அன்பின் சின்னமா!
அன்னையின் சின்னமா!
அவளின் சின்னமா!

குழப்பம் வேண்டாம் பூக்களே
குளிர் பனியில் குளித்தாடும்
இன்பத் தளிர்
சிந்தும்
மகிழ்ச்சிக்கடல் போல கொந்தளித்து
குதூகலத்தால்
பனிதுளிகள் மேலே
பாசத்தை வைத்தீர்களே,,,

அதன் மீதும்
அனிச்சையாய்
எழாத அனைத்திற்கும் பொதுவான
" காதல் "
சின்னம்தானிந்த
காகித சிற்பம்,,,

வெயில் படாத
வெளியுலகம்
காணாத
வெள்ளைக் காகித
சிற்பத்தில்,,,

பூக்களே
உங்களின் இதழ்
கொண்டு
இச்சென்றொரு
முத்தம் பதித்து விடுங்களேன்,,,

படைத்த சிற்பியின்
முகம் கொஞ்சம்
உங்களைப் போலவே
என்றுமே
மலர்ந்திருக்கட்டும்,,,


படம்: எனதருமைத் தோழர் Rajeswary Medzinskii அவர்களின்
கைவண்ணத்தில்
செதுக்கியது

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்