பார்மாவில் இலங்கை மற்றும் இந்தியத்தின் யுக்தியால் அழிகிறது "மனிதம்" இது இனப் படுகொலையில்லாமல் வேறென்ன?

மனம் இளகியவர்கள் இப்படங்களை
பார்க்கலாம் உங்கள் மனங்களில் மதம்
குடிகொண்டிருந்தால் நீங்கள்
அதிர்ச்சியடைந்து மூர்ச்சையடைவீர்கள்
மாறாக உங்கள் மனங்களில் "மனிதம்"
குடிகொண்டிருந்தால் போராடும்
குணங்கொண்டு எழுச்சியடைவீர்கள்.
தைரியத்தை வளர்க்க நமக்கான தேவை
முற்போக்குச் சிந்தனைகள் மட்டுமே,,
பார்மாவில் இலங்கை மற்றும் இந்தியத்தின்
யுக்தியால் அழிகிறது "மனிதம்" இது
இனப்படு கொலையில்லாம் வேறென்ன?

பௌத்தம்   பாசிஸத்தின் பிடியில்
இருப்பதனால் பற்றி எரிகிறது
பர்மாவும் , இலங்கையும் மதம் மாற்றான்
கைகளிலே விளையாடுகையில்
புத்தனுக்கு புதைகுழி வெட்டுவதில்
எவ்வித ஆச்சர்யமுமில்லை காரணம் மதத்தை போதிக்காதவனே மரணித்து
கிடக்கின்ற பொழுது கடவுளாக்கியவன்
ஒன்டிப் பிழைக்கிறான். புத்தன் தான்தான்
கடவுளென்றும் தன்னைத்தான் வணங்க வேண்டுமென்றும் ஒருபோதும்
கற்பித்ததில்லை . பிறகேன் பௌத்தம் மதமாக்கப்பட்டது? அதற்கான தேவையை
எவ்விதத்திலும் உறுவாக்கம்
கொடுத்தவர்கள் மதவாதிகளாகவே
இருக்கிறார்கள். இந்தியாவில் ஒரு
மிகப்பெரிய போருக்குப் பிறகு
(கலிங்கம்) மனிதகொலைகள் மண்ணில் வீழ்ந்தமையால் மனம்மாறி புத்தமத
நெறிகளை ஏற்றுக்கொண்டார் அசோகர் என்பது வரலாறு. காலம் மாற்றத்தில் பௌத்தமும் மதத்துக்கான வெறித்தன போக்கினை ஆங்காங்கே விட்டுச்
சென்றிருக்கிறது. மதம் எதன் மீது
ஆதிக்கம் செலுத்துகிறதோ அல்லது
அடிமைத் தனத்தை புகுத்துகிறதோ அதன் முக்கிய காரணமாக மனிதனே இருக்கிறான். இதிலிருந்து அம்மனிதனும் எளிதாக தப்பித்துக் கொள்கிறான் பழிபோடத்தான் மதமிருக்கிறதே என்கிற தைரியத்தை
மதப்போதகர்கள் கற்பிதம் செய்கிறார்கள்
அவ்வளவே,,   இலங்கையில் நடத்தப்பட்ட தமிழீழ
இனப்படுகொலைகளின் பின்னால்
பெரும்பாலும் ஆட்சியதிகாரம் அரசியல் கைப்பற்றுதலே காரணமாக இருந்தது.
சிங்களம் இனப்படுகொலையை
நிகழ்த்திவிட்டு அதிலிருந்து தப்பித்துக் கொள்ள பௌத்த உதவியை நாடிச் சென்றது பௌத்தமும் அவர்களுக்கு
உதவியது உதவிய சில பௌத்த
பாசிசவாதிகளினால் ஒட்டுமொத்த
பௌத்தமும் இரத்தக்கரை படிந்து
காணப்பட்டது என்பதே உண்மையாக
இருக்கிறது. பரமாவில் இஸ்லாமியர் மீதான தாக்குதலும் இனத்தோடு கலந்த மதவெறித் தாக்குதலகாவே
எடுத்துக்கொள்ளலாம். பர்மாவைப்
பொறுத்தவரையில் எப்படி
இந்தியத்தியத்திலும் ,இலங்கையிலும் சிறுபான்மை மக்களாக இருக்கிறார்களோ அதே போலத்தான் பர்மாவிலும் இருக்கிறார்கள் . மதத்தின்
பெயரால் பெரும்பான்மையினம்
சிறுபான்மையினத்தை ஒடுக்குகிறது. கிட்டத்தட்ட தமிழீழப்படுகொலையின்
ஒப்பீடாகவே இதனை நோக்கினால் உண்மை விளங்கும். ஒப்பீடுக்கான தேவையும் இங்கே ஏற்படுகிறது. காரணம் பர்மாவிலுள்ள இஸ்லாமியச் சமூகத்தின் மீதான. தாக்குதலென்பது பல ஆண்டுகளாகவே தொடர்ந்திருந்தது. தற்போது எழுந்துள்ள அதிதீவிர
தாக்குதல் என்பது இலங்கை சிங்களத்தை பின்பற்றியே நிகழ்த்தப்படுகிறது. கடந்த ஆண்டு ( ஜூன் 2014 ) சிங்களம்
நிகழ்த்திய இஸ்லாமியர் மீதான தாக்குதல் வன்முறையத் தொடர்ந்து இன்று பர்மாவில்
அது மீண்டும் கட்டவிழ்க்கப்படும் நிலையில் இனப்பேரின வாதத்திற்கு இருமதங்களும்
பலியாகின்றது என சுட்டிக்காட்டலாம் .
இந்தியத்தில் இந்துத்துவம்
செயல்படுத்தும் ஆண்டாண்டு கால
செயல்பாடுகளை அப்படியே
உள்வாங்கியுள்ளது தொடர்பு
நாடுகளான இலங்கையும்,பர்மாவும்,,இங்கே மதத்தின்
பெயரால் கொன்று வீழ்த்துவது புனிதம் எனவும் , மதநெறியெனவும் கற்பிதம் செய்தவர்களை தண்டிக்க இயலாத நிலையையாக காலமும்
மூடநம்பிக்கையும் நம்மை
கட்டிப்போட்டுள்ளதென்றேச் சொல்லலாம்.ஒரு மதம் இன்னொரு மதத்தின் மீது ஆதிக்கம் செலுத்த. அவர்களை
கொன்றொழிக்குமானால்
மற்ற மதங்கள் கைகொட்டிச் சிரித்து
ஆதிக்கம் செலுத்தும் மதத்தோடு
இணைந்து கொண்டு கூட்டாக மனிதம் என்கிற வார்த்தையினை
கொன்றொழிப்பதனால்தான் மதத்தை ஏற்காத இடது சித்தாந்த்தில் எங்களை இணைத்துக் கொள்கிறோம் என்பது
இப்போது தெளிவாக புரிந்திருக்கும். அந்த மதத்துக்காரன் மட்டும் எங்கள்
மதத்துக்காரனை அழிக்க வில்லையா ?
அதனால் நாங்கள் அழித்தவனை
பழிவாங்குகிறோம் . என்பதே இன்றை
மதப்பற்றாக இருக்கையில் மனிதம்
என்றுமே நிமிர்ந்து நிக்காது. இன்று
பர்மாவில்,இலங்கையில்,காஸாவில்,பாகிஸ்தானி­
ல்,ஆப்கானிஸ்தானில் என்று
தொங்கியிருக்கும் இனப்படுகொலைகள்
நாளை உங்கள் வீடுகளிலும்
குடிபுகலாம் என்பதே எங்களின்
கவலையாக இருக்கிறது. சிந்தித்துப்
பாருங்கள். அம்மா கிருஸ்த்து,அப்பா
இந்து, பிள்ளைகள் பௌத்தம், உற்றார் உறவினர்கள் இஸ்லாம், என்று இருக்கையில்
நாட்டிற்குள் நடக்கும் மதவெறித்
தாக்குதல் வீட்டிற்குள் நுழைந்தால் உலக மனிதயினமே உயிரை மாய்த்துக் கொண்டு அழிந்து போகும். இந்நிகழ்வுகள் நமக்கு வெகுதொலைவில்
இல்லை, ஏற்கனவே குடும்பங்களில் சிற்சில சண்டைகள் ஏற்படுவதை கண்கூடாக நாம் பார்க்கிறோம். பர்மாவில் தொடங்கிய இன்றைய இனப்படுகொலையை எதிர்க்க வேண்டுமெனில் மதத்தை விட்டொழித்து மனிதத்தை கையிலெடுப்பதே மிகச்சிறந்த ஆயுதமாகும்

ஒரு உயிர் கருவிலேயே
சிதைக்கப்படுவதை நாம்
கொலையென்கிறோம். அவ்வாறிருக்க பர்மாவிலும்,இலங்கையிலும் அதனைத்
தொடர்ந்துவரும் பல்வேறு நாடுகளில் கட்டவிழ்த்து விடப்படும் இனத்தின்
பெயரிலான மற்றும் மதத்தின் பெயரிலான
இனப்படுகொலையை மட்டும் நம்மால் நியாயப்படுத்த முடியுமெனில் ஒவ்வொருவருக்குள்ளும் மனிதாபிமானம்
வற்றி மிருகத்தன்மை
குடிகொண்டிருப்பதாகவே பார்க்கப்படும்.உலக வரலாற்றில் எந்த சர்வாதிகாரமும்
வென்றாக சரித்திரமே இல்லை,
அச்சர்வாதிகார வீழ்ச்சியால்
விடுதலையும் மனிதமும் மட்டுமே
வென்றெடுக்க முடியுமென
கோரூரக்காரர்களுக்கு
எச்சரிக்கையினை நாம் எப்போது
விடுக்கப் போகிறோம். நமக்கான
பிரிவினையினை போதிக்கும்
மதமிருக்கின்றவரையில் நாம் மரத்தின் உரத்திற்குக்கூட பயன்படப்போவதில்லை
என்பதை பர்மா இஸ்லாமியப்
படுகொலையும், இலங்கைய இனவழிப்பு படுகொலையும் உணர்த்துவதோடல்லமால்
தொடர்ந்தும் செல்கிறது . எப்போதும்
நிறுத்தப்போகிறோம் இந்த கோரூரத்தை , இனியும் வேடிக்கை மட்டுமா நமது
வாடிக்கையான நிகழ்வாய்
இருக்கப்போகிறது. மனிதம் இம்மண்ணில்
முளைக்கவே முளைக்காதா? இப்படியே தொடர்தலால் மனித இனம் அழியாதா?
இப்படியான கேள்விகளோடு கூடவே நம் நெஞ்சை குத்திக் கிழிக்கிறது.
கொலையுண்ட மனித உயிர்களும்
மண்ணில் ஒடும் ரத்த வெள்ளாறுகளும் ஓடும்.
இலங்கையை இழந்து நிற்கிறோம்
ஒன்றுகூடுங்கள் மனிதச் சமூகமே
பர்மாவையாவது காப்பாற்றுவோம்.
இங்கே தேவை "மனிதம்" மட்டுமே "மதமல்ல"

Comments

 1. புத்தனின் பௌத்தத்தை ஹீனயானம் ,மஹாயானம் என்று சிதைத்து அதில் உண்மையான பௌத்த நெறியான ஹீனயானத்தை அழித்து மகாயானத்தை உருவாக்கி புத்தனையும் சிலை வடிவத்தில் கடவுள் ஆக்கியது பார்ப்பனீயம் ! இது நடந்தது குப்தர்கள் காலத்தில் பின்பு இந்தியாவில் புத்தர் மஹாவிஷ்ணுவின் அவதாரம் ஆக்கப்பட்டு அவர் மனைவி மாயாதேவி லக்ஷ்மி அவதாரம் ஆக்கப்பட்டது தனி வரலாறு ! மற்ற ஆதிக்க வாதிகளுக்கும் இந்து பார்பனியதிர்க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மற்றவர்கள் அடித்து கொல்வார்கள் பார்ப்பனீயம் அணைத்தும் (ஊடுருவியும் )கொல்லும் ..................

  ReplyDelete
 2. இன்று இந்தியாவில் இந்துக்கள் என்று நம்பி கொண்டு இருப்பவர்கள் எல்லோரும் இப்படி ஊடுருவி அழிக்கப்பட்டு வலிந்து இந்துக்கள்( பார்ப்பனர்களை தவிர) ஆக்கப்பட்டவர்கள் தான் இன்றும் பூர்வகுடி மக்களின் குல தெய்வங்களை இந்துமயபடுத்தும் வேலையையும்(ஆடு கோழி வெட்டதடை ,கும்பாபிசேகம் போன்ற நடவடிக்கைகளின் மூலம் ) தொடர்ந்து செய்து வருகிறது .....................

  ReplyDelete
 3. என் பதிவின் உட்கருத்தும் அதுவே!

  ReplyDelete
 4. அதிரவைக்கும் படங்கள் ..
  தொடர்ந்த செயல்பாடு தேவை

  ReplyDelete
 5. இஸ்லாமிய தேசத்தை ஸ்தாபிக்கப் போகும் புனிதர்கள் ISISனால் சிரியாவில் பல்லாயிரகணக்கான இஸ்லாமியர்கள் கொல்லபட்டுள்ளார்கள். மற்றும் சியா இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய தேசத்தை ஸ்தாபிக்கபோகின்றவர்களால் தினமும் கொன்று குவிக்கபட்டு கெண்டிருக்கின்றனர்.உங்க வார்த்தையில் சொல்வதானால்
  நெஞ்சை குத்திக் கிழிக்கிறது.
  கொலையுண்ட மனித உயிர்களும்
  மண்ணில் ஒடும் ரத்த வெள்ளாறுகளும். இதை எல்லாம் நீங்க கண்டுக்கவே மாட்டீங்களா?

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்